08-30-2005, 05:21 AM
Vasampu Wrote:மருதங்கேணி !
நீங்கள் சொல்வது போல் பார்த்தால் ரிஷிக்கும் அறிவு தேவையில்லை.. அவரும் இருக்கு என்று ஆதாரத்துடன் எழுதாமல் இருக்கலாம் என்றுதானே எழுதுகின்றார். என்னைப் பொறுத்தவரை ரிஷி ஏனைய ஊடகங்களின் செய்திகளோடு தனது கற்பனை வளத்தையும் சேர்த்து செய்திகளை பரபரப்பாக எழுதுகின்றார். அவ்வளவுதான். இது போகப் போக எல்லோரும் புரிந்து கொள்வீர்கள்.
வியாசன் நான் இது வரை அறிந்தவரை ரிஷியின் ஆய்வுகளை பிரதி செய்தவர்களை தான் அறிந்திருக்கிறேன். குறிப்பாக தினக்குரல் பத்திரிகை பரபரப்பின் அனுமதியோடும் வீரகேசரிப்பத்திரிகை அவர்களின் அனுமதியின்றியும் அவரின் கட்டுரைகளை பிரதி செய்து வெளியிடுகின்றன. ரிஷியின் ஆய்வுகளில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் தமிழ் மக்களால் பெரிதும் அறியப்படாத விடையம். அவர் மேற்குலக ஊடகங்களின் ஊடாகவும் வேறு வழிகளிலும் கிடைக்கும் தகவல்களை தமிழ் மக்கள் இலகுவில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் வெளியிடுகின்றார்.
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

