Yarl Forum
ரிஷியின் சர்வதேச புலனாய்வு அரசியல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: ரிஷியின் சர்வதேச புலனாய்வு அரசியல் (/showthread.php?tid=3609)

Pages: 1 2 3 4


ரிஷியின் சர்வதேச புலனாய்வு அரசியல் - Danklas - 08-20-2005

<b>ரிஷியின் பரப்பரப்பின் 25வது இதழில்....

**<span style='color:blue'>கதிர்காமர் எண்ட தமிழன் 2000ம் ஆண்டு வெளிவிவகார அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் 2001ம் ஆண்டு யாழ்ப்பாணம், தமிழீழ விடுதலைப்புலிகளின் கைகளில் இருந்து இருக்கும்.. Confusedhock:

** கதிர்காமரின் கொலையின் பின்னனியில் இந்தியா இருக்கலாம்...

முழுமையாக வாசிக்க... Arrow Arrow

பக்கம் 1

பக்கம் 2+3

பக்கம் 4</b>

இதை இங்கே பிரசுரிக்க உதவிய யாழ் கள சக உறுப்பினர் ராகவனுக்கு நன்றி,,,, :wink: Idea</span>


- vasanthan - 08-20-2005

நன்றி டக்கு


- adsharan - 08-20-2005

நன்றி Danklas anna


- sinnathambi - 08-21-2005

நன்றி அண்ணா


- kuruvikal - 08-21-2005

உவர் ரிஷி அமெரிக்க உளவாளியாமே....! எதுக்கும் கவனம்...அவருடைய கட்டுரைகள் விமர்சனங்களைக் கூர்ந்து கவனியுங்கள்...பலதின் தொகுப்பும்...ஒரு சார்பும் மறைந்திருக்கும்...! :twisted: Idea

குறிப்பாக மேலே உள்ள கட்டுரையில் உள்ள பல விடயங்கள் அன்ரன் பாலசிங்கம் ஒரு பேட்டியில் சொன்னதன் அடிப்படையில்....ரிஷியின் புனைப்போடு (கதிர்காமர் இந்திய மத்திய அமைச்சரோடு பேசியதை...எவர் ரிஷிக்கு அப்படியே தந்தார்...அதை உண்மை என்று ரிஷி எப்படி நிரூபிப்பார்....ரிஷி என்ன உளவுப்படையா வைத்திருக்கிறார்...???!) அற்புதமாக வந்திருக்கிறது...! யதார்த்தம் எது என்பது ஆராயப்பட்டுத்தான் கணிக்கப்பட வேண்டி உள்ளது...ரிஷியின் தேடலும் புனையலும் போல பல கட்டுரைகள் வரலாம்..பலரும் தரலாம்....எந்தக் கட்டுரையை எவரும் வாசிக்கலாம்..ஆனால் தீர்மானிப்பது என்பது உங்களைப் பொறுத்தது...! Idea


- cannon - 08-21-2005

Quote:கதிர்காமர் இந்திய மத்திய அமைச்சரோடு பேசியதை...எவர் ரிஷிக்கு அப்படியே தந்தார்...அதை உண்மை என்று ரிஷி எப்படி நிரூபிப்பார்....ரிஷி என்ன உளவுப்படையா வைத்திருக்கிறார்...???
Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock:


- sathiri - 08-21-2005

ரிசி நல்லா வான வேடிக்கை காட்டுவார் எண்டு முதலேசொல்லியிருக்கிறன் யார் கேக்கிறீங்கள்


- Mathan - 08-21-2005

kuruvikal Wrote:உவர் ரிஷி அமெரிக்க உளவாளியாமே....! எதுக்கும் கவனம்...அவருடைய கட்டுரைகள் விமர்சனங்களைக் கூர்ந்து கவனியுங்கள்...பலதின் தொகுப்பும்...ஒரு சார்பும் மறைந்திருக்கும்...! :twisted: Idea

குறிப்பாக மேலே உள்ள கட்டுரையில் உள்ள பல விடயங்கள் அன்ரன் பாலசிங்கம் ஒரு பேட்டியில் சொன்னதன் அடிப்படையில்....ரிஷியின் புனைப்போடு (கதிர்காமர் இந்திய மத்திய அமைச்சரோடு பேசியதை...எவர் ரிஷிக்கு அப்படியே தந்தார்...அதை உண்மை என்று ரிஷி எப்படி நிரூபிப்பார்....ரிஷி என்ன உளவுப்படையா வைத்திருக்கிறார்...???!) அற்புதமாக வந்திருக்கிறது...! யதார்த்தம் எது என்பது ஆராயப்பட்டுத்தான் கணிக்கப்பட வேண்டி உள்ளது...ரிஷியின் தேடலும் புனையலும் போல பல கட்டுரைகள் வரலாம்..பலரும் தரலாம்....எந்தக் கட்டுரையை எவரும் வாசிக்கலாம்..ஆனால் தீர்மானிப்பது என்பது உங்களைப் பொறுத்தது...! Idea

குருவி இந்த அரசியல் கட்டுரைகள் மேல் எனக்கு பெரிதாக அபிப்பிராயம் ஏதும் இல்லை ,,, சண்டே டைம்ஸ் இக்பால் அத்தாசாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி பெரும்பாலும் பரபரப்பை ஏற்படுத்தும் வண்ணம் எழுதப்படுவதை என்பது என் எண்ணம்.

அதே சமயம் ரிஷிக்கு எப்படி கதிர்காமர் பேசியது தெரியும், அவர் என்ன உளவுபடையா வைத்திருக்கார் என்று நீங்கள் கேட்பது போல் ரிஷி அமரிக்க உளவாளி என்று உங்களுக்கு எப்படி தெரியும் என்ன ஆதாரம் என்று கேட்கலாம் அல்லவா?


- Danklas - 08-21-2005

ரிஷியிடம் உளவுப்படை இருக்கோ இல்லையோ என்பது முக்கிய விடயம் அல்ல.. ரிஷி அமெரிக்கவின் உளவாளி எண்டாலும் பறவாயில்லை.. ஆனால் தமிழர்களுக்கு தமிழில் உலக நாடுகளில் நடைபெறும் அரசியல் அந்தரங்களை தெரிவிக்கும் ஒரே ஒரு ஊடகம் ரிஷி என்பது மறுக்க முடியாத உண்மை.. அதைவிட எனது கூற்றுப்படி ஆங்கில, பிரஞ்ச், மொழிகளில் வரும் புலனாய்வு கட்டுரைகளையோ அல்லது யாரினது (பிற நாட்டு இராணுவ ஆய்வாளர்களது உதவியுடன் இதை செய்லாம்..) Idea

அதைவிட கதிர்காமர் இந்திய மத்திய அமைச்சரோடு பேசியதை கதிர்காமனே தண்ட ஓட்டை வாயல தனக்கு நெருக்கமானவர்களுக்கு சொல்லி இருக்கலாம்... (அவருக்கு தன்னைப்பற்றி தற்பெருமை அடிக்கிற எண்டால் அல்வா சாப்பிடுமாதிரி , அதுதானெ மனுசாளுடைய குணம்) அதை விட பணம் எண்டு சொல்லுவாங்களே அது பத்தென்ன பத்துகோடியும் செய்யும்... அத கனடாவில இருக்கிற சுண்டாக்காய் ரிஷி எறிஞ்சாலே சுலபமாக செய்தியை எடுக்கலாம்.. அதைவிட நம்மட பத்திரிகைக்காரர் இருக்கிறாகளே ரொம்ப குசும்பானவங்க அதிலும் பப்புராசிக்காரங்க சொல்லத்தேவையில்லை உமக்கு.. பிரித்தானிய அரச மாளிகைக்கையே சமையல் காரன் மாதிரி (பத்திரிகையாளன்) போல உள்ளே சென்று அதை வெளி உலகத்துக்கு அம்பலப்படுத்தியவங்க.. ஏன் ஈராக்கில் ஈராக் கைதிகளை பிரித்தானிய படைகள் கொடுமை செய்ததை அவங்கட கமரவாலேயே சுட்டு (பிரித்தானிய படைகளின்) அதை உலகத்துக்கு அம்பலப்படுத்தியவங்க.. இப்படி உள்ளவர்களின் தொடர்பு அவர்கள் விடும் செய்திகளை ரிஷி எப்படியோ பெற்று விடலாம்... ஆக மொத்தத்தில் உலக நாடுகளை பற்றி (குறிப்பாக அமெரிக்க ரஸ்யா, பிர்த்தானிய, யப்பான்) துள்ளியமாக தமிழில் தருவதை வரவேற்கலாம்... Idea


- kuruvikal - 08-21-2005

ரிஷியின் தகவல்களை நீண்ட காலமாகக் கேட்டு வருகின்றோம்...பல தகவல்கள் அடிப்படை ஆதாரம் இல்லாமல் (குறிப்பாக அரசியல் செய்திகளில்) அப்பப்ப வெளிவிடப்படும் அறிகைகளின் அடிப்படையில் வெளிவரும் சில உண்மைகளை புனைப்புகளுடன் கலந்து ராணி கமிக்ஸ் திகில் நாவல் போல தருகின்றதாகவே எமக்குப் படுகிறது....!

சுவாரசியமாக தினமுரசு அற்புதன் பாணியில் இவரது சுய ஆராய்ச்சிகளும் அமைந்துவிட அதையே நம்பும் நிலைக்கு பலர் சென்றுவிடுகின்றனர்...! அவரது பாணி அதுவாக இருக்கட்டும்...எமது கருத்து என்பது அவரது ஆராய்ச்சியை அல்லது அலசலை அப்படியே உள்வாங்குவதைத் தவிர்த்து கொஞ்சம் சிந்தித்து சுய தேடல் செய்து உள்வாங்கிக் கொள்வது சிறந்தது என்பதே ஆகும்...!

இக்பால் அந்தாஸைக் கூட எப்பவுமே அப்படியே நம்பியதில்லை...அவர் சர்வதேச தொடர்புள்ள ஒரு பத்திரிகையாளராக இருந்தும் எப்போதும் சரியான அரசியல் பார்வையை வெளிப்படுத்தினார் என்று இல்லை...ரிஷி ஒரு பத்திரிகையாளரா... இருந்து செயற்படுபவராகத் தெரியவில்லை...ஊடகங்கள் இணையங்கள் மற்றும் தனக்கு நெருங்கிய பத்திரிகையாளர்கள் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் அவர் இயக்குகிறார் என்பதை அவருடைய எழுத்துகள் காட்டும் ஆதாரங்களைப் பார்க்கும் போது தெரிகிறது...!

அமெரிக்க உளவாளியாமே என்று தான் கேட்டிருந்தம்...உளவாளி என்று சொல்லவில்லை...செவிக்கு வந்த சில தகவல்களின் படி ஒரு சந்தேகம் கேட்டுக் கொண்டோம்...அவ்வளவும் தான்...! ஆதாரம் இருந்தால் உளவாளி என்றே கூறி இருப்போம்...!

அதுமட்டுமன்றி டன் சொல்வது போல...அன்றி...நாடுகளுக்கிடையேயான ரகசிய நகர்வுகளை ராஜ தந்திர நகர்வுகளை கதிர்காமர் என்ன எந்த அரசியல் முட்டாளும் தனது நலன் கருதி மட்டுமே பாவிப்பான்....இலகுவில் வெளியிடமாட்டான்...! கதிர்காமருக்கு தன்னைச் சுற்றி எதிரிகள் இருப்பது தெரிந்தும் வெறுவாய் சப்பி இருப்பார் என்று இலகுவில் எடுத்துக் கொள்ள முடியாது..அப்படி சப்பித் துப்பியது கூட அவர் வெளியிட்ட புரளியாக ஏன் இருக்க முடியாது...???! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- Mathan - 08-21-2005

kuruvikal Wrote:அமெரிக்க உளவாளியாமே என்று தான் கேட்டிருந்தம்...உளவாளி என்று சொல்லவில்லை...செவிக்கு வந்த சில தகவல்களின் படி ஒரு சந்தேகம் கேட்டுக் கொண்டோம்...அவ்வளவும் தான்...! ஆதாரம் இருந்தால் உளவாளி என்றே கூறி இருப்போம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

ம் அரசியல் கட்டுரை குறித்த மற்றய கருத்துக்களில் உடன்பாடுதான், ரிஷி அமெரிக்க உளவாளியா என்று நீங்க கேட்க தான் உளவுபடை வச்சிருக்கீங்களா ஆதாரம் இருக்கா என்ற சந்தேகம் உங்களை போல் எனக்கும் வந்துவிட்டது, செவிக்கு வந்த தகவல்களை வைத்து நீங்கள் கேட்டது போல் அவர் அரசியல் கட்டுரைகளை எழுதுறாரோ தெரியலை எது எப்படியோ ... எந்த அரசியல் கட்டுரைகள் செய்தியாக இருந்தாலும் படிக்கலாம் ஆனால் அவற்றை அலசி ஆராயாமல் முற்று முழுதாக நம்பக்கூடாது. அனைந்து பத்திரிகைகளையும் சேர்ந்துதான் சொல்கின்றேன்.


- KULAKADDAN - 08-21-2005

நமக்கு எவர் எப்படி என்பது தெரியாது. அவரது கட்டுரைகளை கிரமமாக வசிப்பதும் கிடையாது. உங்கள் செவிக்கு வந்த தகவலை எல்லாம் கேட்பது உங்களை பொறுத்தது. இங்கு இட்டதற்கான காரணம் , அதில் உங்களுக்கு உள்ள நம்பிக்கை காரணமாக தான் இங்கு கேள்வி போல் இட்டீர்கள் என எடுக்கமுடியுமா?

சேவிவழி வந்த தகவல அனைத்தையும் அதிலும் ஒரு ஊடகவியலாளரை உளவாளி என காட்ட முற்படும் தகவலை எந்த நம்பக தன்மையும் இல்லது இங்கு எழுதவேண்டியதில்லையே?

பத்திரிகைகளில் வரும் செய்திகளை பகுத்து உணரவேண்டியது நம்மகடமை.
அதற்காக ஒவ்வோரு பத்திரிகையாளரையும் இன்ன இன்ன நாட்டு உளவாளியாமே....அப்படி இருக்குமாமெ இப்படி இருக்குமாமே என கேட்டுகொண்டிருக்க முடியாது


- Thala - 08-21-2005

Danklas Wrote:ரிஷியிடம் உளவுப்படை இருக்கோ இல்லையோ என்பது முக்கிய விடயம் அல்ல.. ரிஷி அமெரிக்கவின் உளவாளி எண்டாலும் பறவாயில்லை.. ஆனால் தமிழர்களுக்கு தமிழில் உலக நாடுகளில் நடைபெறும் அரசியல் அந்தரங்களை தெரிவிக்கும் ஒரே ஒரு ஊடகம் ரிஷி என்பது மறுக்க முடியாத உண்மை.. அதைவிட எனது கூற்றுப்படி ஆங்கில, பிரஞ்ச், மொழிகளில் வரும் புலனாய்வு கட்டுரைகளையோ அல்லது யாரினது (பிற நாட்டு இராணுவ ஆய்வாளர்களது உதவியுடன் இதை செய்லாம்..) Idea

டண் னின் கருத்தோட ஒன்றித்தான் எனது கருத்தும் இருக்கிறது. ரிசி புலனாய்வு என்று கிளம்பியபிறகுதான் அனேகமானவர்கள். தமிழர் புலனாய்வின் மீதும் அதன் மீது அக்கறை கொள்ளத்தொடங்கினார்கள். தாரகி அவர்கள் கூட அரசியல் இராணுவ ஆராச்சியோடு தன்னை நிலைப்படுத்தியதால் அவர் அதையும் தாண்டிப் புலனாய்வுப் பகுதிக்குள் பெரும்பாலும் உள்நுளைய வில்லை. எது உண்மை பொய் என்பதை விட தமிழர்களின் சார்பில் வெளிநாடுகளின் புலனாய்வு நகர்வுகளில் தமிழர்களுக்கு ஆர்வம் ஏற்படித்தியதின் பங்கு ரிசியையும் சாரும். நாம் எவ்வளவு எச்சரிக்கையாய் இருக்கவேணும் என்று உணர்வை அவரது கருத்துக்கள் தோற்றுவிப்பதை அவரின் கட்டுரைகள் செய்வதால் அது வரவேற்கத்தக்க வொன்றும் கூட.

அதைவிட முக்கியமானது அவர் எப்போதும் தமிழருக்கு எதிரான கருத்துக்களை கூறியதில்லை தமிழ்த்தேசியத்துக்கு மாற்றுக்கருத்து கொண்டவரும் இல்லை. வெளிநாடுகளின் அரசியல் புலனாய்வுகளை அவர் உள்ளுடன் கலந்து தான் தருகிறார் உண்மைதான், மருந்து சாப்பிடவே தேன் தேடும் தமிழர்களுக்கு திகிலூட்டாமல் வளங்கினால் சரியாக போய்ச்சேராது என்பதுதானே மறுக்கமுடியாத உண்மை.

அவர் ஒரு பத்திரிகையாளன் தனது கருத்துக்களை திறம்பட வெளிக்கொண்டு வருகிறார். தன்னை வளர்த்துக்கொள்ள அவர் செய்வது சேவையுடன் கூடிய வியாபாரம். அவரின் முயற்சியை வரவேற்கலாம் நல்லதை எடுத்து கெட்டதை விட்டிடலாம்..


- kuruvikal - 08-21-2005

KULAKADDAN Wrote:நமக்கு எவர் எப்படி என்பது தெரியாது. அவரது கட்டுரைகளை கிரமமாக வசிப்பதும் கிடையாது. உங்கள் செவிக்கு வந்த தகவலை எல்லாம் கேட்பது உங்களை பொறுத்தது. இங்கு இட்டதற்கான காரணம் , அதில் உங்களுக்கு உள்ள நம்பிக்கை காரணமாக தான் இங்கு கேள்வி போல் இட்டீர்கள் என எடுக்கமுடியுமா?

சேவிவழி வந்த தகவல அனைத்தையும் அதிலும் ஒரு ஊடகவியலாளரை உளவாளி என காட்ட முற்படும் தகவலை எந்த நம்பக தன்மையும் இல்லது இங்கு எழுதவேண்டியதில்லையே?

பத்திரிகைகளில் வரும் செய்திகளை பகுத்து உணரவேண்டியது நம்மகடமை.
அதற்காக ஒவ்வோரு பத்திரிகையாளரையும் இன்ன இன்ன நாட்டு உளவாளியாமே....அப்படி இருக்குமாமெ இப்படி இருக்குமாமே என கேட்டுகொண்டிருக்க முடியாது

எழுத்துக்கள் சார்ப்புப் போக்கோடு இருக்கும் போது சந்தேகம் எழுவது நியாயம் தானே...! மேலே உள்ள கட்டுரையில் கதிர்காமர் அமெரிக்காவை இராணுவ உதவிக்காக அணுக முயல முதல் இந்தியாவை தர்ம சங்கட நிலைக்குத் தள்ளி இராணுவத் தலையீட்டுக்கு கொண்டு வந்தார் என்பது போல எழுதி இருக்கு...ஆனால் 2000ம் ஆண்டு கள நிலை என்ன...திருவனந்தபுரத்துக்கு இந்திய இராணுவமும் விமானப்படையும் வந்த அதேவேளை அராபியக் கடலில் இருந்து அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் இந்து சமுத்திரம் நோக்கி நகர்த்தப்பட்டது...அமெரிக்க B52 உளவு தாக்குதல் விமானம்..யாழ் குடாநாட்டின் மீது பறப்புச் செய்தது...ஒரு இறமை உள்ள நாட்டின் வான் பரப்பின் மீது அமெரிக்க இராணுவ விமானம் பறப்புச் செய்ததாயின்...அதற்கு இலங்கை அரசின் அனுமதி வழங்கப்படாமலா நடந்திருக்கும்..????! இது ஊடகங்களில் வெளியான ஆதாரபூர்வ செய்தி..இதை ரிஷி மறைப்புச் செய்ய அல்லது இதைத் தவிர்க்க காரணம் என்ன...???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- sinnakuddy - 08-21-2005

தமிழ் நாட்டு பத்திரிகைகளில் நக்கீரன் ஜூனியர் விகடன் போன்றவற்றை புலனாய்வு பத்திரிகைஎன்று கூறலாம்..முதன் முதலாக இந்த புலனாய்வு விசயங்களை ஜனரஞ்சகமாக தமிழில் கையாண்ட ஈழத்தவர் ரிசி என்பது எனது தாழ்மையான கருத்து..உலக புலனாய்வு விசயங்களை இலகு படுத்தி எனனைப்போன்ற ஆங்கிலம் தெரியாத பாமரனுக்கு தெரியவைத்தவர் என்பது கருத்து.புலத்தில் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு மற்றவர்களுக்கு தெரிய வைத்திருக்கிறார். அவர் அதிகம் உலக புலனாய்வுகளை பற்றித்தான் கூறி வந்தார்.அண்மைக்காலமாகத்தான் பத்திரிகை தொடங்கி ஈழத்தைப்பற்றி கூறிவருகிறார்.அவருடைய புலனாய்வு பத்திரிகைகளை கண்டு தமிழ் நாட்டு பத்திரிகைகளே பொறாமைகொள்ள தொட்ங்கிவிட்டன சும்மா வாய்க்கு வந்தமாதிரி சிஜஏ அது இது குற்றஞ்சாட்டகூடாது..நானும் சொல்லாலம் தானே தமிழ் நாட்டு பத்திரிகைள் ரிசி யை பற்றி இப்படி எழுதுறதுக்கு குருவிகளுக்கு காசு கொடுத்திருக்கலாமென்று...


- kuruvikal - 08-21-2005

புலனாய்வு என்பது சாதாரணமாக புலனுக்கு தென்படாத விடயங்களை தேடி கண்டு பகுத்து ஆய்ந்து தொகுத்து தரும் விடயம்...! அதை அப்படியே நம்ப வேண்டும் என்பது விதியல்ல...! எத்தனையோ புலனாய்வுத் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதாக வந்திருக்கின்றன...! உதாரணத்துக்கு இந்திய உளவுத்துறை ஊகங்கள் மூலம் மக்களைக் குழப்ப தந்த செய்தி... 1987 இல் தேசிய தலைவர் பற்றிய செய்தி...அப்போ நாங்கள் எல்லாம் சிறுவர்கள்...செய்தி கேட்டதும் துடிதுடித்தோம்...உண்மையாய் இருக்குமோ என்று....இறுதியில் அதை உண்மை இல்லை என்று நிரூபிக்க...தலைவர் சாவகச்சேரிக்கு கூட்டத்தில் பேச வர வேண்டி இருந்தது...!

அதுபோல...நீங்கள் கூறும் ரிஷி ஒரு அரிய புலனாய்வுப் பொக்கிசமாக இருந்து கையாளும் விடயங்கள் அது சர்வதேசம் ஆகட்டும் ஈழம் ஆகட்டும் சாதாரண மக்களுக்கு புலப்படாத விடயங்கள்...அதற்குள் என்ன தில்லு முல்லுப் பண்ணிப் போட்டாலும் மக்கள் நம்பித்தான் ஆக வேண்டும்..அதுவும் ரிஷி போன்றவர்கள் தில்லுமுல்லு என்று அறியா வண்ணம் தில்லுமுல்லு பண்ண மாட்டார்கள் என்பதுக்கு உங்களால் உத்தரவாதம் தர முடியுமா...???! அல்லது உண்மை இது என்று உலகம் காண்பிக்கவா போகிறது...???! எனவே புலனாய்வு என்றாலும் பகுத்தாய வேண்டியது வாசகனின் கடமை என்பதே எங்கள் கருத்து...ரிஷியையோ...அல்லது எவரையுமோ...குறை கூறுவதல்ல...! தகவலின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டியது வாசகனின் பொறுப்பு ரிஷியினதல்ல...! அதுதான் வாசகராக எங்கள் கருத்தை வெளியிடுகின்றோம்..இது எங்க சொந்தக் கருத்து..மட்டுமே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- sinnakuddy - 08-21-2005

ரிசியை மட்டுமல்ல... அந்த காலத்தில் தமிழீழ தந்தை எஸ்.யே.வி செலவநாயகத்தாரை கூட அக்கால இடது சாரிகள் சிஜஏ என்று கூறி ஏளனம் செய்ததுண்டு......எடுத்ததுக்கெல்லாம் சிஜஏ என்று தாக்குவது ஒரு பாசன்


- sayanthan - 08-21-2005

Quote:1987 இல் தேசிய தலைவர் பற்றிய செய்தி...அப்போ நாங்கள் எல்லாம் சிறுவர்கள்...செய்தி கேட்டதும் துடிதுடித்தோம்...உண்மையாய் இருக்குமோ என்று....இறுதியில் அதை உண்மை இல்லை என்று நிரூபிக்க...தலைவர் சாவகச்சேரிக்கு கூட்டத்தில் பேச வர வேண்டி இருந்தது...!
தலைவர் சாவகச்சேரிக்கு 91 இல் ஒரு முத்தமிழ் விழா நிகழ்வில் வந்ததாக நினைவு. ஆக 4 வருடங்களாக நீங்கள் சந்தேகத்தில் இருந்திருக்கிறீர்கள். அந்த நான்கு வருடங்களிற்குள் இந்திய ராணுவம் வெளியேறி பிரேமதாசா அரசுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்து, அன்ரன் மணலாற்றுக் காட்டுக்குள் வந்து தலைவரை சந்தித்து, பிறகு யுத்தம் மூண்டு 90 ம் ஆண்டு மாவீரர் தினத்திற்கு தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி பின்னர் தான் 91 ம் ஆண்டு பிறந்தது. அது வரைக்கும் குருவிகளுக்கு சந்தேகம் இருந்திருக்கிறது.


- kuruvikal - 08-21-2005

sayanthan Wrote:
Quote:1987 இல் தேசிய தலைவர் பற்றிய செய்தி...அப்போ நாங்கள் எல்லாம் சிறுவர்கள்...செய்தி கேட்டதும் துடிதுடித்தோம்...உண்மையாய் இருக்குமோ என்று....இறுதியில் அதை உண்மை இல்லை என்று நிரூபிக்க...தலைவர் சாவகச்சேரிக்கு கூட்டத்தில் பேச வர வேண்டி இருந்தது...!
தலைவர் சாவகச்சேரிக்கு 91 இல் ஒரு முத்தமிழ் விழா நிகழ்வில் வந்ததாக நினைவு. ஆக 4 வருடங்களாக நீங்கள் சந்தேகத்தில் இருந்திருக்கிறீர்கள். அந்த நான்கு வருடங்களிற்குள் இந்திய ராணுவம் வெளியேறி பிரேமதாசா அரசுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்து, அன்ரன் மணலாற்றுக் காட்டுக்குள் வந்து தலைவரை சந்தித்து, பிறகு யுத்தம் மூண்டு 90 ம் ஆண்டு மாவீரர் தினத்திற்கு தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி பின்னர் தான் 91 ம் ஆண்டு பிறந்தது. அது வரைக்கும் குருவிகளுக்கு சந்தேகம் இருந்திருக்கிறது.

குருவிகளுக்கு மட்டுமல்ல....மக்களில் அநேகருக்கு இருந்தது...அப்போ அரசியல் பற்றி அதிகம் தெரியாது...இருந்தாலும் புலிகள் மீது அதன் தலைமை மீது ஒரு இனம்புரியாத பற்றுதல் இருந்தது..! இலங்கை அரசும் தனது வானலைகள் வழி 91 வரை தலைவர் பற்றி இடைக்கிடை கட்டுக்கதை விட்டபடிதான் இருந்தது...அதன் பாதிப்பு மக்களுக்குள் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை...! :twisted: Idea


- kurukaalapoovan - 08-21-2005

குருவிகள் 52 உளவு தாகுதல் விமானம் அல்ல, அது ஒரு long range bomber.

விமானம் இலங்கை அரசின் அனுமதி இன்றி பறந்திருக்குமா என கேள்வி எழும்பினால்... இந்தியா விமானப்படை Operation Liberation இறுதியில் யாழ்ப்பாணத்தில் உணவுப் பொட்டலம் போடும் போது அனுமதியோடு தான் போட்டதா என்றும் கேட்டா என்ன?

அரசியல் இராஜதந்திர நகர்வுகள் எல்லாம் மற்ற நாடுகளின் இறைமையை மதித்துத்தான் நடக்கிறதா எப்பொழுதும்?

அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் இந்து சமுத்திரம் நோக்கி நகர்த்தப்பட்டது மற்றும் நீங்க சொல்ல வந்ததென நான் நினைக்கும் U2 high altitude spy plane இலங்கை மேலாக பறந்தது என்று அந்த நேரத்தில் இக்பால் அத்தாஸ் தவிர வேறையார் எழுதியிருந்தார்கள்? இக்பால் அந்த செய்தியின் ஆதாரம் யார் என தெளிவாக கூறியருந்தாரா?

இக்பால் Janes Defence எழுதுபவர் என்பதால் அவர் எழுதுவதெல்லாம் "ஊடகங்களில் வந்த ஆதாரபூர்வ செய்தி" என நோக்கப்படலாமா?

இரண்டில் ஒன்று நடந்திருக்கலாம்:
-1- உண்மையில் அமொரிக்கா அப்படி ஒரு நகர்வை "show of strength & support" ஆக மேற் கொண்டிருக்கலாம்.
-2- கதிர்காமரின் இராஜதந்திரத்தின் ஒரு அங்கமாக அதற்கு வலுச்சேர்ப்பதாக அப்படி ஒரு பிரச்சார உத்தி கய்யாளப்பட்டிருக்கலாம். அதாவாது இந்தியாவை ஒரு முடிவை நேக்கித்தள்ள அமெரிக்கா ஏற்கனவே தயார்ப்படுத்தலில் இறங்கிவிட்டது என்ற நிலைப்பாட்டை தேற்விக்க.