08-29-2005, 06:02 PM
உதைவிட அதிர்ச்சியான தகவல்கள் எல்லாமிருக்கு. ஆனால் அவற்றை இங்கெ எழுதி களத்தை நாறடிக்க விரும்பவில்லை நான். முதலில் ஆணுக்கு பெண் சமானம் பெண்ணுக்கு ஆண் சமானம் என்பதே ஒரு வெட்டிப் பேச்சு. இரு பாலாருக்கும் வித்தியாசமான சிறப்புக்கள் இருக்கின்றன. ஆண் தண்ணி அடிக்கின்றான் என்பதால் பெண்ணும் தண்ணி அடிக்கலாம் தானே என்பது விதண்டாவாதம். ஆண் ஒருவன் சீரழிந்து போனால் அது அவனுடன் போய் விடும். ஆனால் ஒரு பெண் சீரழிந்து போனால் அது அவளது பரம்பரையையே பாதிக்கும். பொதுவாகச் சொல்வார்கள் ஆண் சீரழிந்தால் நீரில் நனைந்த வேட்டி மாதிரி. நனையிறதும் தெரியாது காயிறதும் தெரியாது. ஆனால் பெண் சீரழிந்தால் கிழிந்து போன சீலை மாதிரி. கிழிந்ததும் தெரியும் தைத்ததும் தெரியும் வெளிநாடுகளில் வாழும் எமது சமுதாயத்தை எடுத்துக் கொண்டால் எமது பழக்கவழக்கங்களையும் பின்பற்ற முடியாமல் வெளிநாட்டுப் பழக்கவழக்கங்களையும் பின்பற்ற முடியாமல் இரண்டும் கெட்டானாக சிலர் வாழத் தலைப்படுவதாலேயே இப்படியான சீரழீவுகள் ஏற்படுகின்றன.

