11-01-2003, 12:01 PM
P.S.Seelan Wrote:தாத்ஸ் யாரடா அப்பா காலியிலும் மாத்தரையிலும் போய் வாழு என்று துரத்தியவை ? தமது அப்பட்டமான சுயநலங்களுக்காக குடியேறியதற்கு மூல காரணம் பேரினவாதம். இவர்களைக் காட்டியே இனத்தை அழிப்பத்றகு நிதியுதவிகள் பெறுவதற்கு இவர்களை ஒரு காரணியகக் காட்டவே அங்கு குடியேற விட்டார்கள். காலியிலும் மாத்தரையிலும் இன்று நேற்றா தமிழன் வாழ்ந்தது. பண்டை தொட்டே தமது தொழில் நிமித்தமாக அங்கு இருந்தது தெரியாதா? சுருட்டுக் கடையும், சைவக் கடையும் யார் சிங்களவனா வைத்திருந்தது. ஆச்சி ஒருவேளை இவர்களi நினைத்துத் தான் வந்தெறு குடிகள் என்று சொன்னாளோ என்னவோ? ஐம்பதுகளில்,அறுபதுகளில், எழுபது, எண்பதுகளில் தமிழன் அடிவாங்கியது எங்கே வடகிழக்கிலா? அடிவாங்கிக் கொண்டு ஒடிவந்தது எங்கே லண்டனுக்கா? தமது பொருளாதார அரசியல் நன்மை கருதித்தான் சிங்களம் அவர்களின் இடங்களினல் குடியேற விட்டது. அவர்கள் காணிகளை தமிழன் கொடுத்த விலை கொடுத்து வாங்க எந்த சிங்களவனுக்கும் பொருளாதார பலமிருந்ததா? இன்றைக்கும் கொழும்பு நகரிலே கோழிக் கூடுகள் போன்று தொடரடுக்கு மாடி கட்டி வைத்துக் கொண்டு 30,40 இலட்சங்கள் என்று சொல்ல வாங்குவது யார்? அமெரிக்கனா அல்லது சிங்களவனா? தமழன் தான.; இது பேரினத்தின் சந்தர்ப்பவாதம். யாழில் மின் விசிரி காற்றில்லை, குழாயைத் திறந்தால் தண்ணீர் இல்லை. நவீன வசதிகள் கொண்ட குளியலறையில்லை. இதனால் தான் இன்று அதிக புதுப்பணம் கண்ட தமிழர்கள் தெற்கில் வந்து குடியேறுவதற்குக் காரணம். யுத்தத்தால் ஒரு 10 வீதம் வந்ததெனில் மற்றவைகள் வந்தது சுயநலத்தில். என்ன வன்னியில் வாழ்ந்தவர்கள் எல்லாம் துரத்துப்பட்டு செத்தொழிந்தா போய்வி;ட்டார்கள். யுத்த சமயத்தில் ஆச்சியின் அரசு வெளிநாட்டு நிதிகளை மட்டுமல்ல தமிழனின் பொருளாதார பலத்திலும் தான் தங்கியிருந்தது. இதை வெள்ளவத்தை தெஹிவலை இரத்மலானை போன்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு காலை நேரத்தில் சென்று பார்ததால் புரிந்திருக்கும்.ஐயா சீலன்.. 95 ஆம் ஆண்டு 700.000 குடாநாட்டு மக்களை 24 மணித்தியாலத்திலை வெளியேறு எண்டு கால்நடையா வற்புறுத்திக் கொண்டுபோனது சிங்களவனில்லையே..? சொந்தக்கிணறு செந்த வீடு சகல வசதிகளுடனும் இருந்த மக்களை வன்னிக்குள்ளையும் வவுனியாக்குள்ளையும் கொழும்பு கண்டி காலி எல்லா இடமும் ஓட்டுவித்தது அகதியாக்கினது சிங்களவனே..? ஐயா வியாபாரநோக்கோடு போய் வியாபாரம் சிங்களப்பகுதிகளில் வியாபாரம் செய்தவர்களின் தொகை மிகச்சிறறிது. அதைவிட பெரிய பதவிகளில் இருந்த படித்த தழிழர்கள் தொகை கூட.. இவர்கள்கூட தமிழ்ப்பகுதிகளில் வீடுகட்டியிருந்தார்களே தவிர பெரும்பான்மையானவர்கள் சிங்களப்பகுதிகளில் வாடகைவீடுகளிலேதான் குடியிருந்தனர்.
பாக்கிஸ்தான் தனது அப்பட்ட அரசியல் சுயநலங்களுக்காகத் தான் ஆகானிஸ்தானுக்கு உதவியது. ஏனெனில் ஒரு முஸ்லிம் நாட்டை உலக பயங்கரவாதிகளுக்குக் காட்டிக் கொடுத்து விட்டோம் என்று மற்றைய நாடுகள் குற்றம் சுமத்தக் கூடாது என்பதற்காகவும் அமெரிக்கனின் பொருளாதாரத் தடையை எடுப்பிப்பதற்கும் அண்டை அசிங்க நாட்டுற்கு ஒரு பயமுறுத்தலாக இருக்கட்டுமே என்றபதற்காகத் தான் இந்த வேசங்கள் எல்லாம்.
சதாமும் பின் லாடனும் என்ன தாத்தா கூட பணம் வைத்திருந்தால் உலக பயங்கர வாதிகளின் கருப்புச் சந்தையில் ஆயதம் வாங்கலாமே. விற்று விட்டு அடிவாங்கும் போது தான் மண்டையைப் பித்துக் கொண்டு பொய்களை "சிஎன்என்" னுக்கும் அடி வருடி ஊடகங்களுக்கும் குய்யோ முறையோ என்று சொல்லிக் கொண்டு திரிவார்கள். உதாரணம்: ஈராக்கின் தற்போதைய நிலை.
அத்துடன் அமெரிக்கா பின்லாடனுக்கு ஆயதங்கள் கொடுத்தது என்ன உத்தமன் என்று தெரிந்து கொண்டா? இல்லை தனது எதிரிக்கு எதிரி நன்பன் என்பதனாலே. இரஸ்சியாவை ஆப்கானிஸ்தானியருடன் சேர்ந்து எதிர்த்து போர் புரிந்ததனாலேயே செங்கம்பள வரவேற்பு ஒரு அரசு அற்ற தனிமனிதனுக்கு பின்லாடனுக்கு கொடுத்தது. பொல்லைக் கொடுத்து அடிவாங்குகின்றான். விணையறுக்கிறான்.
ஈராக்கிற்கும் அதே கதை தான் ஈரானை ஆட்டிப்படைக்க வேண்டும் என்ற மமதையில் ஈராக்கிற்கு இரசாயண ஆயதங்களில் இருந்து சகல ஆயுதங்களையும் கொடுத்து அழிக்கவே அமெரிக்கன் ஆயுதம் கொடுத்தது. இப்போது சொல்லுங்கள் பயங்கர வாதி யார் பயங்கர வாதிகளுக்கு துணை போவது யாரென்று. பொல்லுக் கொடுத்து அடிவாங்குவது யாரேன்று?
அது சரி இப்போது என்ன தேவை வந்தது உலக நாடுகளுக்கு தார்மீக ஆதரவு வழங்க, எம் நாட்டில் என்ன பாலும் தேனுமா ஓடுகின்றது. முதலில் தலைப்பு விடயத்தைக் கவனிப்போம்.
ஐயா அடிவேண்டிய தமிழன் ஏன் அவர்களிடத்தில் போய் தஞ்சம் கோரவேண்டும். அவர்களிடத்தில் அடைக்கலம் புகவேண்டும்..?
ஐயா தமிழன்தான் தொடர்மாடி வேண்டுகிறான் என்று சொல்ல உங்களுக்கு வெக்கமாக இல்லை. அவர்களிடத்தில் இருக்கவிடாமல் துரத்திவிட்டு சிங்களப்பகுதிகளில் வற்புறுத்தி குடியேற்றிவிட்டு தற்போது முதலைக்கண்ணீh வடிக்கிறீர்களே..
ஐயா நாமெல்லாம் குளிக்க குடிக்க தண்ணீர் இல்லாமலா வளர்ந்தோம்..? இல்லை செந்த கக்கூசு இல்லாமலா இருந்தோம். யாருக்கையா கதை சொல்லுகிறீர்..?
ஐயா சுதந்திரமாக வாழ்ந்தவர்களை கூட்டிச்சென்றவர்கள் ஆட்டுப்பட்டிபோல அடைத்துவைக்க முயற்சித்தமையால்தான் அத்தனைபேரும் ஓடினார்கள். இதை முதலில் புரிந்துகொள்ளும். அடைத்துவைக்கப்பட்ட பலரும்தான் தற்போது மீளவும் குடியேறியுள்ளார்கள். ஐயா நிதி நிலை தற்போதுதான் உருவாகியுள்ளதே தவிர புலம்பெயர்ந்தபோது இருக்கவில்லை.
சர்வதேச நிதியுதவி அதுகூட அவர்கள் தனியே சென்று பெற்றதே தவிர இவர்கள் அங்கு செல்லவில்லையே.. அங்கு செல்லாத ஒருவன் தனது நிதி.. தான் செலவழிப்பதுதான் முறை என்பது எனக்கு நியாயமாகப்படவில்லை..
ஐயா பாக்கிஸ்தான் மாத்திரம்தான் வேஷம் போடுகின்றதா..? சலுகைக்காக மாத்திரம் வேஷம்போடுகின்றதா..?
நீங்கள் சொல்லுவதைப்பார்த்தால் சதாமுக்கும் பின்லாடனுக்கும் பணமில்லாமல் ஆயுதம் கொடுத்தான் என்று சொல்லுவதுபொலத் தெரிகிறது. எதுவாக இருப்பினும்.. இவர்கள் அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்கும்போது இவர்கள் புத்தி எங்கு போனது..? இவர்கள் தமது இனத்துக்கெதிராக சண்டையிடும்போது சதாம்.. பின்லாடன் புத்தி எங்கு மறைந்தது..? தமது இனத்தை அழிக்கும்போது இவர்கள்புத்தி எங்கு போனது..?
ஐயா ஈராக்கை முற்றுமுழுதாக அடக்க அமெரிக்காவால் முடியாதென்று நினைக்கிறீர்களா..? அவனால் முடியும்.. தற்போது நடப்பவை சர்வதேச அங்கீகாரத்துடன் நடைபெறவேண்டும் என்ற தேவை கருதியே உதவி கோருகிறானே தவிர இயலாமையால் அல்ல.
ஐயா 20 வருடம் எவ்வளவு பணத்துக்கு ஆயுதம் வித்திருப்பான் அமெரிக்கன். அவனது பொருளாதாரம் எத்தனை மடங்கு உயர்ந்தது. ஆயுதம் வாங்கியவர்கள் எங்காவது உயிர்த்து நிற்கிறார்களா..? ஆயுதத்துக்கு வக்காலத்துவாங்கும் உங்களுக்கு இது எங்கே புரியப்போகின்றது..?
அவன் பொல்லுக்கொடுத்து அடி வேண்டவில்லை. தனது அடுத்தகட்ட பொருளாதார விருத்திக்கு அடிக்கல்லு நாட்டுகிறான். இருந்துதான் பாருங்களேன்.
ஐயா இது உங்கள் பதிலுக்கான பதிலே தவிர தலைப்புக்கான கருத்தாடல் அல்ல..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

