Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளின் தீர்வுத்திட்டம்.
#30
<img src='http://www.thatstamil.com/images15/tamilselvan3-300.jpg' border='0' alt='user posted image'>


thatstamil.com
நவம்பர் 01, 2003

இடைக்கால நிர்வாகம்: கூட்டாட்சியை வலியுறுத்தும் புலிகள்

கொழும்பு:

வட கிழக்குப் பகுதியில் வரி வசூல் செய்யவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், வளர்ச்சிப் பணிகளுக்கு நேரடியாக வெளிநாட்டு நிதியுதவியைப் பெறவும் தங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என இடைக்கால நிர்வாகம் குறித்த திட்டத்தில் விடுதலைப் புலிகள் குறிப்பிட்டுள்ளனர். அதே போல மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவும் முன் வந்துள்ளனர்.


ஆனால், இந்தத் திட்டத்தை ஏற்பதில் சில அடிப்படை பிரச்சனைகள் இருப்பதாக இலங்கை அரசு கூறியுள்ளது.

வட கிழக்கில் தங்கள் தலைமையில் இடைக்கால தன்னாட்சி நிர்வாகம் அமைக்க உரிமை கோரியுள்ள புலிகள் அது தொடர்பான 8 பக்க திட்ட அறிக்கையை நேற்று நார்வே தூதரிடம் ஒப்படைத்தனர். இத் திட்டம் இந்தியா இலங்கை அமைதி உடன்பாட்டின்போது கூறப்பட்ட கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் உள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

புலிகளின் இந்தத் திட்ட அறிக்கையை நார்வே குழு நேற்றிரவே இலங்கை அரசிடம் சமர்பித்துவிட்டது.

புலிகள் திட்ட விவரம்:

வட கிழக்கில் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து அன்னிய நாட்டு நிறுவனங்களுடன் நேரடிப் பேச்சு நடத்தவும் தங்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என புலிகள் அந்த திட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இடைக்கால நிர்வாகம் 5 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்க வேண்டும் எனவும், அதற்குள் இலங்கை அரசுக்கும், தங்களுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்த அனைத்து அம்சங்களும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.



நார்வே தூதரிடம் அறிக்கையை அளிக்கும் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன்

இதன் பின்னர் இடைக்கால நிர்வாகம் நியமிக்கும் சுதந்திரமான தேர்தல் கமிஷன் வட கிழக்கில் தேர்தலை நடத்தலாம் என்று கூறியுள்ளனர் புலிகள்.

இடைக்கால நிர்வாகம் அமைவதால் ஏற்படும் சட்டச் சிக்கல்கள், வழக்குகளை நடத்த வட கிழக்கில் தனியான நீதிமன்றத்தை ஏற்படுத்தலாம் எனவும் புலிகள் தங்களது திட்டத்தில் முன்மொழிந்துள்ளனர்.


இந்த 8 பக்க திட்டத்தில் முதல் இரண்டரை பக்கங்களில் அரசியல் சட்ட ஷரத்துக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்துசில விஷயங்களை புலிகள் கூறியுள்ளனர். அதில், சிறுபான்மை தமிழர்களின் அங்கீரம் பெற்ற ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள் இயக்கம் தான். வட கிழக்கில் வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் இந்துக்களாக இருந்தாலும் எந்த தனிப்பட்ட மதத்துக்கும் அதீத முக்கியத்துவம் அளிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் சட்டத்தில், புத்த மதத்துக்கே மிகுந்த முக்கியத்துவம் தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந் நிலையில் புலிகள் கோரும் அரசியல் சட்டத்தில் அனைத்து மதங்களூம் சமமாக பாவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைக்கால நிர்வாகத்தில் தமிழர்களுக்கு அடுத்தபடியாக முஸ்லீம்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்றும் புலிகள் கூறியுள்ளனர்.

தமிழ்ச்செல்வன் பேட்டி:

இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன், சிங்கள சகோதரர்களுக்கு சமமாக தமிழர்களும் பாவிக்கப்பட வேண்டும், இழந்த சுதந்திரத்தை தமிழர்கள் திரும்பப் பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் இடைக்கால நிர்வாகம் குறித்த திட்டத்தையே தயாரித்துள்ளோம்.

நாங்கள் ஆயுதம் ஏந்தியது தற்காப்புக்காகத் தான். இப்போது சூழல் மாறியுள்ளதால் ஆயுதத்தைக் கைவிட்டு அமைதிக்காக உண்மையுடன் உழைத்துக் கொண்டிருக்கிறோம். போர் நிறுத்தத்தால் நாட்டின் தென் பகுதி சாதாரண நிலைக்குத் திரும்பிவிட்டது.

ஆனால், வட கிழக்கில் லட்சக்கணக்கான மக்கள் இன்னும் குடியேறிகளால் வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.



நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும் தமிழ்ச்செல்வன்


வட கிழக்கில் வசிப்பவர்களுக்கு வேலையில்லை. வாழ வழியில்லை. இதை நேர் செய்யவே இடைக்கால நிர்வாகம் கோருகிறோம்.

இடைக்கால நிர்வாகம் குறித்து மீண்டும் அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் நாங்கள் தயார் என்றார்.

திட்டத்தை ஏற்க அரசு மறுப்பு?:

இந் நிலையில் புலிகளின் திட்டத்தை ஏற்பதில் சில அடிப்படை பிரச்சனைகள் இருப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு உருவாக்கிய திட்டத்தில் இருந்து புலிகளின் திட்டம் அடிப்படையிலேயே வேறு மாதிரியாக உள்ளது. இருப்பினும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அரசு உடனடியாக முயற்சி எடுக்கும்.

அப்போது இந்த அடிப்படை கருத்து வேறுபாடுகள் குறித்து பேசித் தீர்க்க முயற்சி எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Reply


Messages In This Thread
[No subject] - by Paranee - 10-28-2003, 07:34 AM
[No subject] - by தணிக்கை - 10-28-2003, 07:50 AM
[No subject] - by yarl - 10-28-2003, 08:58 AM
[No subject] - by Paranee - 10-28-2003, 09:10 AM
[No subject] - by தணிக்கை - 10-28-2003, 09:46 AM
[No subject] - by Paranee - 10-28-2003, 09:53 AM
[No subject] - by தணிக்கை - 10-28-2003, 10:03 AM
[No subject] - by Mathivathanan - 10-28-2003, 10:34 AM
[No subject] - by mohamed - 10-28-2003, 11:21 AM
[No subject] - by Kanani - 10-28-2003, 11:47 AM
[No subject] - by P.S.Seelan - 10-28-2003, 12:46 PM
[No subject] - by தணிக்கை - 10-28-2003, 12:50 PM
[No subject] - by kuruvikal - 10-28-2003, 12:56 PM
[No subject] - by P.S.Seelan - 10-28-2003, 01:05 PM
[No subject] - by தணிக்கை - 10-28-2003, 01:10 PM
[No subject] - by mohamed - 10-28-2003, 03:15 PM
[No subject] - by Mathivathanan - 10-28-2003, 08:26 PM
[No subject] - by தணிக்கை - 10-28-2003, 09:27 PM
[No subject] - by Kanakkayanaar - 10-29-2003, 04:14 AM
[No subject] - by Kanakkayanaar - 10-29-2003, 04:25 AM
[No subject] - by தணிக்கை - 10-29-2003, 07:14 AM
[No subject] - by Mathivathanan - 10-29-2003, 08:38 AM
[No subject] - by P.S.Seelan - 10-29-2003, 12:32 PM
[No subject] - by தணிக்கை - 10-29-2003, 03:18 PM
[No subject] - by P.S.Seelan - 10-30-2003, 12:39 PM
[No subject] - by Paranee - 10-30-2003, 01:27 PM
[No subject] - by தணிக்கை - 10-30-2003, 03:08 PM
[No subject] - by Paranee - 10-30-2003, 04:09 PM
[No subject] - by yarl - 11-01-2003, 10:17 AM
[No subject] - by Mathivathanan - 11-01-2003, 12:01 PM
[No subject] - by P.S.Seelan - 11-01-2003, 12:34 PM
[No subject] - by Mathivathanan - 11-01-2003, 02:08 PM
[No subject] - by aathipan - 11-01-2003, 07:00 PM
[No subject] - by aathipan - 11-02-2003, 03:39 AM
[No subject] - by P.S.Seelan - 11-02-2003, 12:52 PM
[No subject] - by Mathivathanan - 11-02-2003, 01:25 PM
[No subject] - by Mathivathanan - 11-02-2003, 01:29 PM
[No subject] - by Paranee - 11-02-2003, 01:44 PM
[No subject] - by தணிக்கை - 11-02-2003, 01:48 PM
[No subject] - by தணிக்கை - 11-02-2003, 01:50 PM
[No subject] - by Paranee - 11-02-2003, 01:51 PM
[No subject] - by Paranee - 11-02-2003, 01:53 PM
[No subject] - by Mathivathanan - 11-02-2003, 02:01 PM
[No subject] - by Paranee - 11-02-2003, 02:03 PM
[No subject] - by yarl - 11-02-2003, 02:12 PM
[No subject] - by Mathivathanan - 11-02-2003, 03:25 PM
[No subject] - by தணிக்கை - 11-02-2003, 06:52 PM
[No subject] - by தணிக்கை - 11-02-2003, 07:23 PM
[No subject] - by தணிக்கை - 11-02-2003, 07:29 PM
[No subject] - by yarl - 11-02-2003, 08:38 PM
[No subject] - by தணிக்கை - 11-03-2003, 12:57 PM
[No subject] - by P.S.Seelan - 11-03-2003, 12:57 PM
[No subject] - by Paranee - 11-03-2003, 01:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)