Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒருநாள் ஒரு கனவு
#1
முயல் குட்டியின் முதுகு மாதிரி மிருதுவானவை ஃபாசிலின் படங்கள். இந்த படமும் அப்படிதான். துறுதுறு ஹீரோவை காதலிக்கிற ஹீரோயின், அவனோடு நெருக்கத்தை வளர்த்துக் கொள்ள போடுகிற சண்டை, நிஜ சண்டையாகிவிடுகிறது. காதலிப்பது போல் நடித்து கடைசியில் கை கழுவி விட வேண்டும் என்ற எண்ணத்தில் நெருங்குகிறான் ஹீரோ. ஆனால் விலகவிடாமல் அவனை பற்றிக் கொள்கிறது காதல். முடிவு என்ன? ஒரு நாளில் வந்துவிட்டு போகிற இந்த கனவை வருடக்கணக்கில் மனசில் நிற்கிற மாதிரி வார்த்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஃபாசில்.

செதுக்கி வைத்த சிற்பம் போல் பாத்திர படைப்புகள். அதிலும் ஸ்ரீகாந்த்... அப்படியரு துறுதுறு! சோனியா சொல்வது மாதிரியே Ôஸ்பீடு!Õ அத்தனை அவசரத்திலும் பஞ்சராகி போன சோனியாவின் காருக்கு பஞ்சர் ஒட்டி கூடவே பில்லையும் நீட்டுகிறாரே..கில்லாடி! அடிக்கடி தனக்குத்தானே ரீ ரெக்கார்டிங் கொடுத்துக் கொண்டு (டுர்ர்ர்ர்...ர்) பைக் ஓட்டுவது பலே. இன்டர்வெல்லுக்கு பிறகு அப்படியே ரிவர்ஸ் அடித்துவிடுகிறது இந்த துறுதுறுப்பு. காதல் தந்த வலி காரணமாக இருந்தாலும், மனசை சுண்டியிழுத்த அந்த முன்பாதி ஸ்ரீகாந்த்திற்காக ஏங்குகிறது மனசு.

சோனியா மட்டும் என்னவாம்? தன் படை பரிவாரங்களுடன் ஸ்ரீகாந்த்தை சீண்டி பார்த்து எடுபடாமல் போனதும், நேரிடையாகவே, உன்னால முடிஞ்சா என்னை காதலித்து பார் என்று சவால்விடுகிறாரே....இளமை ஏவுகணை! இதுவரை கவர்ச்சி பதுமையாகவே அறியப்பட்ட சோனியாவா இது? காட்சிக்கு காட்சி பிரமிப்பை தருகிறார்.

மற்ற பாத்திரங்கள் அத்தனையும் Ôசமையல்Õ பாத்திரங்கள்! அதிலும் ஜோக்கடிக்கிறேன் பேர்வழி என்று வாய் கிழிய கத்துகிற சுகுமார், சிசர் மனோகர் குரூப்பிற்கு சிரமம் பார்க்காமல் கத்தரி வைக்கலாம்.

கம்பீர கட்டிடத்தின் கான்கிரீட் தூணாகியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. அதிலும் அந்த காற்றில் வரும் கீதமே பாடல், ஊனை உருக்கி உயிருக்குள் தித்திக்கிறது.

யதார்த்தத்தை மீற கூடாது என்று துவக்கத்தில் நினைத்த ஃபாசில் க்ளைமாக்சில் தடுமாறியிருக்கிறார். ஆனாலும், நேற்று வந்த லேசர் வெளிச்சங்களுக்கு மத்தியில், குத்துவிளக்கின் வெளிச்சம் குறைந்ததா என்ன?

Thanks: Tamilcinema.com
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
ஒருநாள் ஒரு கனவு - by SUNDHAL - 08-29-2005, 11:32 AM
[No subject] - by Mathan - 08-29-2005, 02:40 PM
[No subject] - by SUNDHAL - 08-29-2005, 04:33 PM
[No subject] - by ப்ரியசகி - 08-29-2005, 05:06 PM
[No subject] - by SUNDHAL - 08-29-2005, 05:12 PM
[No subject] - by Vishnu - 08-29-2005, 05:53 PM
[No subject] - by ப்ரியசகி - 08-31-2005, 06:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)