08-29-2005, 05:18 AM
புதிதாய்ப் பூப்பேன்!
காலமெனும் மருந்து போதும்
காயங்களை ஆற்றிவிட
வடு இருந்தால் இருக்கட்டும்
இனியொரு முறையும் ஏமாறாதிருப்பதற்கு!
* என்னோடு நெடுந்துõரம்
வருவதாகச் சொல்லிவிட்டு
கொஞ்ச துõரம் போவதற்குள்
விலகி விட்டாய் என்னைவிட்டு!
* காற்றில் போயின உன் வார்த்தைகள்
கலைந்து போயின என் கனவுகள்
கனவு கலைந்தாலும்
கண் தொலைந்து போகவில்லை நெஞ்சம்
நிலைகுலைந்து போகவில்லை!
* பரந்து கிடக்கிறது உலகம்
இன்னமும் இருக்கிறது வாழ்க்கை!
* துயரத் தொட்டியின் சுவர்களில்
மோதிமோதி உழலுகிற
மீனாக நானிருக்க மாட்டேன்!
* நிறமிழந்து போனாலும்
சிறகிழந்து விடவில்லை
பட்டாம்பூச்சியாய் பறப்பேன் உயரே!
* பூவிழந்து போனாலும்
வேரிழந்து விடவில்லை
மீண்டும் துளிர்ப்பேன்
புதிதாய்ப் பூப்பேன்!
* துடுப்பிழந்து போனாலும்
படகிழந்து போனாலும்
தோள் வலுவிழந்து போகவில்லை
நீந்திக் கரை சேர்வேன்!
* பரந்து கிடக்கிறது உலகம்
இன்னமும் இருக்கிறது வாழ்க்கை!
ரா.சிவசுப்பிரமணியன்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

