08-29-2005, 03:00 AM
Thala Wrote:நீங்கள் சொல்லுற கட்ட கஞ்சா தானே?...
ஒரு உண்மைச் சம்பவம் அதுவும் எங்கள் நகரத்தில் என் கண்முன்னால் நடந்த சம்பவம்.
எனது அயலில் வசிக்கும் இளைஞன் ஒருவன் இணையத்தில் செய்தி வாசிப்பதற்காக சிலவேளைகளில் என்னிடம் வருவான். அன்றும் அதே போல் இணையத்தில் செய்திவாசிக்கும் போது நானும் அருகிலே இருந்து செய்திகளை வாசித்தவண்னமிருந்தேன். அப்பொழுது அவனுடைய செல்லிடப்பேசியின் மணி ஒலித்தது அவன் எடுத்துப்பார்த்தால் ஒரு பெண் பிள்ளையின் பெயர் தெரிந்தது. அவன் சற்று நேரம் எனது சமையல் அறையில் சென்று பேசிவிட்டு திடீரென கணனி அறைக்குள் வேகமாக வந்தான் அப்பொழுது அந்த தொலைபேசியில் இருந்து ஒரு அழுகைச்சத்தம் கேட்டவண்னமிருந்தது. நான் என்ன என கைசைகை மூலம் கேட்டேன் அப்பொழுது அவன் தொடந்து உரையாடினான். அவன் கேட்கிறான் நான் என்ன இப்ப வாங்கிவர.......... போத்தலா அல்லது தூளா........ அதற்கு அந்த சிறிய பெண்பிள்ளை எதெண்டாலும் பறவாயில்லை என்னால தாங்க முடியாதுள்ளது கை எல்லாம் நடுங்குகிறது கெதியாய் கொண்டோடிவா Please Please என அழுகிறது.
ஐயோ கடவுளே இது என்ன கொடுமையப்பா???? அந்த சிறுமிக்கு இன்னும் 18 வயசு கூட ஆகவில்லை. இதற்கு முன்னும் நான் பல சம்பவங்களை கேள்விப்பட்டு பிள்ளையின் தாய் தந்தையை எச்சரித்தேன். அதற்கு தாய் இஞ்ச பாரும் தம்பி இது யூரோப் அதனால் இங்க பிறந்த பிள்ளைகள் யூரோப் ஸ்டைல்ல தான் திரிய விரும்புவினம் அதை நாங்கள் தடுக்க வெளிக்கிட்டால் பிள்ளைகள் தாய் தந்தையரை வெறுத்து விடுங்கள் அதுகள் இந்த வயசில செய்யாமல் பின்ன எந்த வயசில செய்யுறது...... :roll: :roll: என்னெண்டாலும் நாங்கள் அனுசரிச்சு தான் போகவேணும் உங்கள் தகவலுக்கு நன்றி தம்பி ஆனா பெண் பிள்ளைகளைப்பற்றி தேவையிலாம கதை கட்டாதையுங்கோ என சொன்னா..... :oops: :oops: எனக்கு உச்சந்தலையில ஓங்கி டொள் என குட்டு ஒன்று விட்ட மாதிரி இருந்தது. :roll: :roll:

