10-30-2003, 01:37 PM
[b][size=18]பாலாவின் பிதாமகன் திரைப்பட விமர்சனம் !
<img src='http://www.tamilnet.dk/cinema/pidamagan04.jpg' border='0' alt='user posted image'>
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பாலாவின் பிதாமகன் நேற்று இரவு டென்மார்க்கிலும் திரையிடப்பட்டது. விக்ரம், சூர்யா, லைலா ஆகியோரின் முக்கோண நடிப்பில் கதையை பாலா வளர்த்துச் சென்றிருக்கிறார். வழமையாக வெளிவரும் மசாலா சினிமாப்படங்களின் வரிசையில் இது வேறுபட்டு நிற்கிறது பிதமகன். பல இடங்கள் பாராட்டும்படியாக இயக்குநரின் கைவண்ணம் மிளிர்கிறது.
மூலக்கதை !
யாரோ ஒரு பெண்மணி அவர் யார் ? ஏன் அந்த நிலைக்கு ஆளானார் என்பதை திரைப்படம் இறுதிவரை சொல்லவே இல்லை. முதலாவது காட்சியில் அப்பெண்மணி சுடலையில் வந்து, விக்கிரமை பெற்றுவிட்டு இறந்துவிடுகிறார். சுடலையில் வெட்டியானாக இருப்பவர் அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறார். சுடலை சிவன் இருக்கும் இடம், அங்கு யாரென்ரே தெரியாமல் பிறந்த காரணத்தால் அவரை சிவன் என்னும் பிதாமகன் என்கிறார் வெட்டியான் இதுதான் பிதாமகன் என்ற பெயருக்குக் காரணம். சித்தன் என்ற பெயரோடு உலகம் தெரியாத ஒருவனாக பிணம் எரிக்கும் வெட்டியானாக வளர்ந்து வருகிறார் விக்ரம்.
விக்கிரமை வளர்த்த தந்தையும் ஒரு நாள் சுடலையிலேயே இறந்துவிட, அவரையும் எரித்துவிட்டு சுடலையை விட்டு வெளியேறுகிறார். இந்த நேரத்தில் அநாதையாக பல் வேறு குறும்புகள் செய்து பணம் திரட்டி வருகிறது சூர்யா குழு. இவர்கள் சிறிய தெருச் சுதாட்டத்தில் லைலாவை ஏமாற்றுகிறார்கள். வீட்டை விட்டு வெளியேறிய விக்ரம் பல அடிதடிகள் பட்டு கஞ்சா விற்கும் ஒரு பெண்மணி மூலம் கஞ்சா முதலாளியிடம் சேர்த்து விடப்படுகிறார். அவரோடு சேர்ந்த விக்ரம் கைது செய்யப்படுகிறார். சூர்யாவையும் லைலா போலீசில் பிடித்துக் கொடுக்க அவரும் சிறை செல்கிறார். இருவரும் சிறையில் சந்திக்கிறார்கள். அங்கு வழமையாக நடைபெறும் சண்டைகள் நடைபெறுகின்றன. பின்னர் வெளியே வருகிறார்கள்.
அந்த நேரம் கஞ்சா வியாபாரம் நடைபெறும் இடத்தை உளவறியும் போலீஸ்காரனை வில்லன் கொலை செய்கிறான். அந்த சவத்தை விக்ரம் எரிக்கிறார். இதனால் அவர் கைது செய்யப்பட கலக்டரிடம் வித்தை சொல்லி விக்கிரமை மீட்கிறார் சூர்யா. கோபமடைந்த வில்லன் சூர்யாவை அடித்து கொன்று சாக்கில் கட்டி வீதியில் வீசுகிறான். இறுதியில் விக்ரம் கஞ்சா தோட்டத்தை கொழுத்தி, வில்லனையும் பழி தீர்க்கிறார், இதுதான் கதை.
கதைக்கு அழகு கொடுக்கும் நடிப்பு !
விக்ரம் கடைசிவரை பேசிய வசனங்கள் ஒன்று இரண்டு வரிகள்தான். மனநிலை பாதித்த அல்லது சித்தப்பிரமை பிடித்த ஒருவராக அவர் வருகிறார். இரண்டு கைகளையும் தொங்க விட்டபடி பாய்ந்து பாய்ந்து ஓடுவது அவருடைய நடிப்பின் சிறப்பு முத்திரை. ஏற்ற பாத்திரத்தை அழகுபட நடித்திருக்கிறார்.
சூர்யாவையும் ஒரு மசாலா கதாநாயகனாக அறிமுகம் செய்து காதல் காட்சிகளை அவர் வழங்கவில்லை. ஆனால் அவர் அளவுக்கு அதிகமாகக் கதைத்துப் புலம்பித் திரியும் ஒரு பாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளார். நடிப்பு சூர்யாவினுடைய சொந்த நடிப்பல்ல, இயக்குநருக்காக அவர் நடித்திருக்கிறார். இரண்டு பாத்திரங்களையும் வித்தியாசமாக நடிக்கப்பண்ணினாலும் கூட சூர்யாவின் நடிப்பில் செயற்கைத் தன்மை நன்கு தெரிகிறது.
லைலாவின் குரல் வித்தியாசமாக உள்ளது, சொந்தக் குரலில்தான் பேசினாரோ தெரியவில்லை. ஆனால் அவருடைய பாத்திரத்தை செம்மையாக நடித்துள்ளார். இருவரோடும் லைலாவும் போட்டி போட்டு நடித்திருக்கிறார். மூவரில் முன்னணி வகிப்பது லைலாவின் நடிப்புத்தான் என்றும் ஒரு சில இடங்களில் எண்ணத் தோன்றுகிறது. மற்ற நடிகர்களும் நடிப்பில் சோடை போகவில்லை.
இளையராஜாவின் இசையமைப்பு !
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவின் முத்திரை இசையமைப்பு இதில் இடம் பெறுகிறது என்றார்கள். அவருடைய கற்பனை வளத்திற்கேற்ப பல வகைகளிலும் முயற்சி எடுத்திருக்கிறார். பல இடங்களில் இசை கதையை நிமிர்த்துகிறது. மேலும் பல இடங்களில் பரிசோதனை முயற்சிகள் கதை நகர்வை தடுத்து நிறுத்துகிறது. பாடல்கள் போதிய வேகம் பெறவில்லை, சிம்ரன் வரும் ஆட்டத்தைக்கூட பழைய பாடல்களின் உதவியோடு சமாளித்துள்ளனர். இளையராஜாவின் பிடிவாதத்தை இசையில் காண முடிகிறது.
படப்பிடிப்பும், எடிட்டிங்கும்...
கிராமத்தின் இயற்கைக் காட்சிகள், கஞ்சா தோட்டங்கள், மலைச் சாரல்கள் ஆகியவற்றை மிகவும் அழகாக திரைக்குள் வைக்கிறார்கள். குழப்பமில்லாமல் நேர்கோட்டு வடிவத்தில் கதையை எடிட் செய்துள்ளனர். ஆகவே பார்ப்பவர்க்கு எந்தக் குழப்பமும் கிடையாது, பெரிய அரங்குகள் எதுவும் அமைக்காவிட்டாலும் கூட காட்சிப்படுத்திய நேர்த்தி வளர்ந்துவிட்ட திரைப்படங்களுடன் போட்டியிடுகிறது.
இயக்குநர் பாலாவின் பணி..
இன்றுள்ள இயக்குநரில் சற்று வித்தியாசமாக கதை சொல்ல வந்திருப்பவர் பாலா என்பதை மீண்டும் நிறுவுகிறார். தமிழ் சினிமா இயக்குநர்கள் கை வைக்கத் தயங்கும் இடங்களில் அவர் கை வைத்துள்ளார். தேவையில்லாத காதல் காட்சிகள், பொருத்தமில்லாத நகைச்சுவைகள் எதுவும் இல்லாமல் நடிப்பையும், கூடுதல் நிஜத்தன்மையையும் கவனத்தில் எடுத்தது அவருடைய சிறப்பம்சமாகும். அவர் படமெடுத்துள்ள முறையயைப் பார்த்தால் சிறந்த வர்த்தக சினிமாக் காட்சிகளை எடுப்பது அவருக்கு சிரமமான பணியல்ல என்பது தெரிகிறது. வித்தியாசமாக செய்ய வேண்டுமென எண்ணி ரிஸ்க் எடுத்து செயற்பட்டுள்ளார். சூர்யாவை கொன்று வீசிய இடத்தில் நாயை வைத்து அவரது சடலத்தை வீசியிருப்பது அவருடைய இயக்கத்திற்கு நல்ல முத்திரை. நடிகர்களை எந்த இடத்திலும் இயல்பை மீறி அழகுபடுத்தக்கூட அவர் அனுமதிக்கவில்லை. பாலாவின் முயற்சிக்கு பிதாமகன் படத்திற்கு கிடைத்த வரவேற்பும், விலையும் நல்ல உதாரணம்.
திரைப்படத்தில் உள்ள பின்னடைவுகள்..
விக்கிரமையும், சூர்யாவையும் வித்தியாசமாகக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்தால் உயிர் நாடியான கதையைக் கோட்டை விட்டுவிட்டார். நடிப்பும், கதையும் ஒன்றாகக் கைகோர்த்தால்தான் நடிப்பின் பரிசோதனைகள் வெற்றிபெறும். இடைவேளைவரை என்ன கதையென்றே தெரியவில்லை. இடைவேளைக்குப் பிறகும் தெளிவின்மை நீடிக்கிறது, கதை முடிவிற்கு சிறிது முன்னர்தான் கஞ்சாக் கடத்தல்தான் மூலக்கதை என்பது தெரிகிறது. கண்ணுக்கு தெரியாத சின்னஞ்சிறு கதையைச் சொல்ல இவ்வளவு ஆர்பாட்டம் அவசியமில்லை. ஏற்கெனவே வந்த போன மசாலா கதை ஒன்றைச் சொல்ல இவ்வளவு எடுப்புக்கள் தேவையில்லை. விக்கிரமையும் சூரியாவையும் நடிக்க வைக்க வேண்டும் என்பதில் எடுத்த கவனத்தால் மற்றதை எல்லாம் கோட்டை விட்டுவிட்டார். அதேவேளை ஏதோ பயங்கரப்படம் போல விளம்பரம் செய்ததும் தவறாகியிருக்கிறது. அது படத்தின் எதிர்பார்ப்பிற்கு பிழையான விளம்பரம் என்பதை படம் பார்க்கும்போது எளிதாகத் தெரிய முடிகிறது.
சூர்யாவின் நடிப்பு அவரால் இயலாத பாத்திரத்தைச் சொல்லப் புறப்படுகிறது. அவர் நடிக்கும் பாத்திரத்தை இயல்பாக அவரால் புரிய முடியவில்லை. பல இடங்களில் அவருடைய நடிப்பில் செயற்கைத் தன்மை தெளிவாகத் தெரிகிறது. விக்கிரமும் இவ்வளவு து}ரம் நடிப்பை வெளிப்படுத்தினாலும், அது மற்ற நடிகரால் இயலாத நடிப்பென்று கூற முடியவில்லை. இதே பாத்திரத்தை இதற்கு முன்னர் பல நடிகர்கள் மிகச் சிறப்பாக செய்துள்ளனர். நான் வணங்கும் தெய்வம் என்ற பழைய படத்தில் சிவாஜி இன்று போல தொழில் நுட்பமே இல்லாத காலத்தில் செய்து முடித்திருக்கிறார்.
இளையராஜாவின் இசையும் கைகொடுக்கவில்லை, மந்தமாகவே உள்ளது. படம் முடிந்து போகும்போது பலரிடம் விசாரித்தபோது இசையும் ஏமாற்றிவிட்டதாகவே சொன்னார்கள். முடிவாக என்னதான் இருக்கிறது என்று பார்த்தால் விக்கிரமின் நடிப்பு இருக்கிறது என்று சொல்லலாம். அதுமட்டும் இருந்து என்ன பயன் ? ஒரு திரைப்படத்திற்கு கூடிவரவேண்டிய மற்றைய அம்சங்கள் கூடி வரவேண்டாமா என்ற கேள்வியைக் கேட்டால் பிதாமகன் வெற்றிப்படமாகிவிட முடியாது. தீபாவளி ஓட்டத்தில் பிதாமகனை மற்றைய படங்கள் எளிதாக முந்திவிட முடியும். ஜெயம் போன்ற ஒரு சிறிய பட்ஜெட் படமே போதியது பிதாமகனை எளிதாகக் கடப்பதற்கு. ஆனால் வந்திருக்கும் படங்கள் எல்லாமே பத்தாம்பசலிப் படங்கள் என்றால் பிதாமகனுக்கே வாய்ப்பு அதிகம்.
சேது படத்திற்குப் பின்னர் எடுத்து வரும் சகல படங்களிலிமே பாலா எறத்தாழ ஒரே கதையைத்தான் சொல்லி வந்திருக்கிறார். பிதாமகனும் அப்படி ஒரு படம்தான், ஆனால் சேது போல ஒரு தாக்கமான படமல்ல. பாலாவால் நல்ல படங்களை தரமுடியும் என்பதை வெளிக்காட்டும் ஒரு படமே பிதாமகன்.
நடிப்பு 50 புள்ளிகள்.
இசை 30 புள்ளிகள்
படப்பிடிப்பு 55 புள்ளிகள்
இயக்கம் 45 புள்ளிகள்
பிதாமகன் சராசரி - 45 புள்ளிகள்.
நன்றி: அலைகள் திரை விமர்சனக் குழு 26.10.2003