Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிழல் யுத்தம்
#33
சிந்திக்கவைக்கும் சின்னத்திரை! எச்சில் போர்வை, நிழல் யுத்தம். தரங்கெட்ட இரண்டாந்தர தென்னிந்திய சினிமாக்களை பார்த்து புளித்துபோன நமக்கு இனிப்பாக இரண்டு குறும்படங்களை இலவசமாக தந்த அஜீவனுக்கு அன்பு வணக்கங்கள். குறும்படங்கள் நமது சமூகத்திற்கு மிகவும் புதியது. நாம் பழக்கப்பட்ட தென்னிந்திய சினிமா அரைத்தமாiயே திருப்பி திருப்பி அரைக்கும் கதைகளையும், கதாநாயகனை மிகவும் நல்லவராகவும் பின் ஒரு காதல் பிறகு அதற்கொரு சண்டை கடைசியில் கிளைமாக்ஸ். இதைவிட தென்னிந்திய சினிமாவில் வேறு எதையும் காண முடியாது. வியாபரமே அங்கு முன்னிலைப்படுவதால் அவர்கள் கதையில் மட்டும் நின்று விடுவார்கள். சினிமா என்பது கதை மட்டுல்ல, கமரா அது பேசும் வசனங்கள், எடிட்டிங் அது தரும் பரிமாணங்கள், இசை அது எல்லாவற்றையும் மெரு கூட்டும் பாணி. இது சினிமாவுக்கு பொவாக பலர் கூறும் விமர்சனம். ஒரு சில தென்னிந்திய சினிமாவில் இவற்றை பாரக்க முடியும். குறிப்பாக மணிரத்தினத்தின் படங்களில். அனால் அவரின் படங்களில் ஒரு ஓறிஜினாலிற்றி இருக்கிறாதா என்றால் அது கேள்விக்குறியே? மணிரத்தினம் அப்பட்டமாக எங்கு சுட்டார் என்பதை நான் பட்டியலிட்டு இங்கே போட முடியும். இங்கு அதுவல்ல நான் சொல்ல வந்தது. ஒரு சினிமாவுக்கான அந்தனை வரைவிலக்கணங்களையும் சுமந்தபடி நமது ஒறிஜினாலிட்டியுடன் இந்த குறும்படங்கள் அஜீவன் தந்தது அஜீவனதும் அவர் ரீமினதும் ஒரு சிறந்த முயற்சி. சபாஸ் அஜீவன்! ஒளித் தொகுப்பில் மிகுந்த கவனம் செலுத்தியிருப்பதுடன் ஒரு குறும்படத்திற்கான அனைத்து அம்சங்களையும் இந்த இரு படத்திலும் பார்க்க கூடியதாக இருந்தாலும் அது முழுமையடைய ஒரு நல்ல அனுபத்தை இந்த இரு படங்களும் நிச்சயமாக அஜீவனுக்கு கொடுத்திருக்கும். குறும்படங்கள் கதை சொல்ல வருபவை அல்ல, மாறாக படம் பாரக்கும் ஒவ்வருவருக்கும் அது பல கதைகளை சொல்லி நிற்கும். அதை இந்த களத்தில் உள்ள விமர்சனங்கள் மூலம் பாரக்க முடிகிறது. இந்த படத்தை பாரக்கும் ஒரு பெண்ணிலைவாதி ஆணாதிக்கம் இந்த படத்தில் (நிழல் யுத்தம்) உள்ளது என்று குற்றம் சாட்ட முடியும், அனால் அதையே மாற்றி கடுமையாக உழைக்கும் ஒரு ஆணின் மனதை ஏன் இந்த பெண் புரிந்து கொள்ள மறுக்கிறாள் என்று விவாதிக்கவும் முடியும். பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இயக்குனர் கூற முனைகிறார் என்று ஒரு பெண்ணிலைவாதி வாதாடினல், இல்லை இல்லை நமது சமுதாயத்தில் பெண்கள் வளர்க்கபடும் விதமே இந்த தவறுக்கு காரணம் என்று மறுதலிக்க முடியும். இது தான் இயக்குனருக்கு கிடைத்த பெரிய வெற்றி. பொதுவாக சினிமாவே அல்லது நாடகங்களோ ஒரு பிரச்சனைக்கு தீர்வை வைக்க கூடாது. மாறாக பல கேள்விகளை கேட்க வைத்து அதை பல விதமான பரிமாணங்களில் சிந்திக்கவைத்து வித்தியாசமான கருத்துக்களை கொண்டு வரவைப்பதன் மூலம் ரசிகர்களே ஒரு முடிவை எடுக்கவைப்பதாக இருக்கவேண்டும். அதை இந்த இரு குறுந்திரைகளிலும் காண முடிகிறது. எச்சில் பேர்வை எடுத்த விடயம் நமது புலம்பெயர்வாழ்வின் யதார்த்தம், ஒரே வசனங்கள் அடிக்கடி வருவது ஒரு சலிப்பதை;தருவது பேல் ஒரு உணர்வு ஏற்பட்டால் நமது வாழ்வின் யதார்தமும் அது தானே! இந்த இரு குறுந்திரைகளிலும் இசை இன்னும் கொஞ்சம் மெருகூட்டப்பட்டிருக்கலாம் என்பது ஒரு ஆதங்கம். இந்த குறும்படங்களில் எனக்கு மிகப்பிடித்த விடயம் இந்த இரண்டு படங்களும் ஒரு வெகுஜன சினாவுக்கு எடுக்கப்பட்டதே. ஆட் பிலிம் (கலைப்படம்) என்ற பெயரில் ஒரு நான்கு முற்போக்குவாதிகள் என்று தம்மை தாமே கூறிக்கொள்பவர்களை சந்தோசப்படுத்த எடுக்கும் படங்கள் பல பார்த்திருக்கிறேன். அவற்றின் தேவையை கூற நான் கேள்விக்குள்ளகியிருக்கிறேன். நால்வர் மட்டும் பார்பதற்கு தான் அந்த படங்கள் என்றால் அவை நமக்கு தேவையில்லை. குறும்படங்கள் நமது சமூகத்தின் யதார்த்ததை வெளிப்படுத்தி அதன் பிற்போக்கு தன்மையை கேள்pவிக்குள்ளாக்கி அதன் நல்ல அம்சங்களை புடம் போட்டு காட்ட முனைந்தால் அது அனைவரையும் சற்று நேரம் சிந்திக்க வைக்கும். இதை நான் இந்த இரண்டு படங்களிலும் பாரக்க முடிந்தது. இது அஜீவனுக்கும் அவர் குழுவுக்கும் கிடைத்த முதல் வெற்றி. புலம்பெயர்ந்த நமது சமூக அவலங்களை இன்னமும் கொண்டுவாருங்கள். நமக்கு தென்னிந்திய தரங்கெட்ட சினிமா தேவையில்லை என்று நம் மக்கள் து}க்கியெறியும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆனால் இந்த படைப்புகளை நாம் வெற்றிபெற வைக்க நாம் புலம் பெயர் மண்ணில் நமது சினிமா சந்தையை ஆக்கிரமித்து நிக்கும் தென்னிந்திய தரங்கெட்ட படைப்புகளை நிராகரிப்பதற்கு நாம் நமக்கென ஒரு சந்தையை உருவாக்க வேண்டும். அதற்கு தரமான படைப்புகளை நாம் தரவேண்டும். தற்போது கனடா, சுவிஸ், ஜேர்மன், பாரீஸ், லண்டன் ஆகிய நாடுகளில் இதற்கான முயற்சிகள் நடைபெறுவதை நன்கே காண முடிகிறது. அனைவரும் இந்த விடயத்தில் ஒன்று பட்டு படைப்புகளை கொண்டு வருவதிலும் சரி அதை சந்தைப்படுத்துவதிலும் சரி ஒன்று படடு நிற்கவேண்டும். விமர்சனம் என்று வரும்போது முகஸ்துதி பாடி நமது படைப்புகளை உற்சாகப்படுத்துவதை விடுத்து தரமான விமர்சனங்களை வைப்பதன் மூலம் அவர்கள் தொரந்தும் முன்னேற வழி செய்வோம். தரமான படைப்போ இல்லையோ அவர்கள் அதை முயற்சி எடுத்து எடுத்திருக்கிறார்கள் என்பதை மனதில் நிறுத்தி அவரகள் படைப்பக்கு ஆதரவு தருவோம். அதேவேளை உண்மையான விமர்சனத்தை வைப்போம். ஈழவர் சினிமா வெற்றியடைய ரசிகர்கள் ஆகிய நாமும் தொடர்ந்து பங்களிப்போம்.
Reply


Messages In This Thread
நிழல் யுத்தம் - by Ilango - 10-27-2003, 04:06 PM
[No subject] - by yarl - 10-27-2003, 09:00 PM
[No subject] - by Paranee - 10-28-2003, 05:37 AM
[No subject] - by AJeevan - 10-28-2003, 10:00 AM
[No subject] - by தணிக்கை - 10-28-2003, 10:06 AM
[No subject] - by AJeevan - 10-28-2003, 11:41 AM
[No subject] - by Kanani - 10-28-2003, 11:43 AM
[No subject] - by yarl - 10-28-2003, 11:45 AM
[No subject] - by Ilango - 10-28-2003, 12:30 PM
[No subject] - by veera - 10-28-2003, 12:34 PM
[No subject] - by tamilmaravan - 10-28-2003, 12:40 PM
[No subject] - by AJeevan - 10-28-2003, 12:44 PM
[No subject] - by Chandravathanaa - 10-28-2003, 12:47 PM
[No subject] - by tamilmaravan - 10-28-2003, 12:49 PM
[No subject] - by veera - 10-28-2003, 01:05 PM
[No subject] - by tamilmaravan - 10-28-2003, 01:07 PM
[No subject] - by AJeevan - 10-28-2003, 01:15 PM
[No subject] - by Shan - 10-28-2003, 02:21 PM
[No subject] - by veera - 10-28-2003, 02:37 PM
[No subject] - by AJeevan - 10-28-2003, 02:38 PM
[No subject] - by aathipan - 10-28-2003, 07:13 PM
[No subject] - by AJeevan - 10-28-2003, 11:43 PM
[No subject] - by AJeevan - 10-28-2003, 11:55 PM
[No subject] - by Kanakkayanaar - 10-29-2003, 05:01 AM
[No subject] - by shanmuhi - 10-29-2003, 09:16 AM
[No subject] - by AJeevan - 10-29-2003, 11:32 AM
[No subject] - by shanmuhi - 10-29-2003, 11:41 AM
[No subject] - by AJeevan - 10-29-2003, 11:50 AM
[No subject] - by AJeevan - 10-29-2003, 01:50 PM
[No subject] - by tamilchellam - 10-29-2003, 04:12 PM
[No subject] - by AJeevan - 10-29-2003, 05:44 PM
[No subject] - by tamilchellam - 10-29-2003, 06:31 PM
[No subject] - by mohamed - 10-30-2003, 11:41 AM
[No subject] - by AJeevan - 10-30-2003, 01:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)