Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிதாமகன்
#2
பிதாமகன்: திரை விமர்சனம்

மயானத்தில் பிறந்து, அங்கேயே வெட்டியானிடம் வளர்ந்து, சுடலையில் சடலங்களை எந்த உணர்வுகளுமின்றி எரியூட்டி, மிச்சம் மீதி இருக்கிற கபாலத்தைப் பார்த்து ஈயென்று இளித்தபடி, அந்த நெருப்பிலேயே பீடி பற்ற வைக்கிற ஒருவன் தன் வாழ்நாளில் முதன் முதலாக அழுகிறான்ஒரு மரணத்தின்போது!

அப்படியொரு விநோத மனிதப்பிறவியின் கண்ணீர்த் துளிதான் பிதாமகன்!

செம்பட்டை தலை, மொச்சைக்கொட்டை பற்கள், அழுக்கு அப்பிய உடம்பு, கந்தல் துணியோடு நடமாடி.. அடுத்தவர் கை பட்டாலே உறுமுகிற மிருகவெறி சித்தனாக விக்கரம்.

வயிற்றுப் பிழைப்புக்காக, எந்த வித தில்லுமுல்லு தில்லாங்கடி செய்யவும் தயாராகத் திரிகிற போக்கிரிப் பயல் சக்தியாக சூர்யா.

முரண்பட்ட இந்த இரண்டு ஜீவன்களையும் இணைகோடுகளாக்கி அதன்மீது பயணிக்கிறது கதை.

மயான பூமி, கிராமத்துச் சந்தை, மலையின் மடிப்புகளிடையே மறைந்து கிடக்கும் கஞ்சாக்காடு என்று கதையின் தளம், களம் ரெண்டுமே புதுசு.

தன்னை வளர்ந்தெடுத்த வெட்டியான் செத்துப் போனதும் ஊருக்குள் நுழைகிறார் விக்ரம். தெருவோரப் புரோட்டாக்கடைக்குள் பசியுடன் நுழைகிற அவரை அருவருப்பபோடு துரத்தியடிக்கிறார்கள். அசுர பலத்துடன் அவர்களைத் துõக்கியெறிகிற விக்ரமுக்கு சோறு போட்டு ஆதரவு தருகிறார் சில்லறை கஞ்சா வியாபாரி சங்கீதா (பழைய ரசிகா). கஞ்சாத் தோட்ட எடுபிடி வேலையிலும் சேர்த்து விடுகிறார். அங்கே போலீஸிடம் சிக்கி சிறையில் அடைபடுகிறார் விக்ரம் சிறையிலும் மிருகமாகவே முரட்டுத் தனம் காட்டி... ஜெயில் அதிகாரிகளிடம் ரத்தவிளாறாக அடிபடுகிற விக்ரமுக்கு அதே சிறை அறையில் அடைபட்டிருக்கும் சூர்யா பரிவு காட்டுகிறார்.

அந்த அன்புதான் அவர்கள் இருவரையும் பிணைக்கிறது. அதன்பிறகு விசுவாசமான நாயக சூர்யாவையே சுற்றி வருகிறார் விக்ரம். செய்யாத கொலைக்குற்றத்துக்காக மறுபடி விக்ரமை போலீஸ் தேடிவர... அவரைக் காப்பாற்றுவதற்காக நிஜ கொலையாளியான கஞ்சாத் தோட்ட முதலாளியை காட்டிக் கொடுக்கிறார் சூர்யா. முதலாளி வெறிகொண்டு சூர்யாவை காவு வாங்க... பழி தீர்க்கப் புறப்படும் விக்ரமின் ருத்தரதாண்டவம்தான் கிளைமாக்ஸ் பயங்கரம்!

பஞ்ச் டயலாக் வைத்தே பரபரப்பு புண்ணும் ஹீரோயிஸ உலகத்தில் முகபாவங்களையும் உடல் அசைவுகளையுமே மொழியாக்கியிருக்கிற விக்ரமின் நடிப்பு... பிரமிப்பு! மரக்கட்டøயாக இறுகிப் போன உடம்பு, ஓடும்போதுகூட மடங்காத விரைத்த கைகள், வெறியேறும்போதெல்லாம் துடிக்கிற உதடுகள்... விடைக்கிற நாசி... ஒரு ஆதிமனிதனின் வேட்டை வெளி துல்லியமாக வெளிப்படுகிறது.

உற்சாக மின்சாரமாக சூர்யா! இந்த மனிதருக்குள் இப்படியொரு நவரச நடிகரா என வியப்பு மேலிடுகிறது. திருட்டு முழியும் அடுக்கு மொழிப் பேச்சும், நக்கல் சிரிப்பும் நையாண்டி நடனமுமாக காமெடியன்களையே கலவரப்படுத்துகிற வகையில் கலலகப்லை ஜோராக கல்லா கட்டியிருக்கிறார் (நாட்டு வைத்தியராக வாயுத் தொல்லை பற்றி அவர் ஃபிராடு லெக்சர் அடிப்பது வயிறு கிழியும் சிரிப்பு?.

நெஞ்சுக்கூட்டுக்குள் இன்னும் குழந்தையாகவே இருக்கிற பாலிடெக்னிக் குமரியாக லைலா, பத்மினி ஒன்ருப்பீ என்றபடி சூர்யா போடுகிற லங்கர் எனும் சூதாட்ட பலகையில் காசு வைத்து ஏமாறுகிற அப்பாவித் தனம்... பணம் .. வாச். சங்கிலி என்று அத்தனையும் தோற்றவிட்டு கைகால்களை உதைத்தபடி மண்ணில் விழுந்து புரண்டு அழுது அழிச்சாட்டியம் பண்ணுகிற அழகு... லைலாவின் கன்னத்துக் குழியில் ஒரு திருஷ்டி பொட்டு வைக்கலாம்.

இந்த மூவரையுமே பிதாமகன் அடுத்த தளத்துக்கு அபாரமாக உயர்த்தியிருக்கிறது.

இடைச் செருகல்தான் என்றாலும் அந்தக் காலப் பாடல்களை கதம்பமாக்கி செம கூத்தடிக்கிற சிம்ரன் சூர்யாவின் ஆட்டம் ஜாலியான ஜனரஞ்சக காம்ப்ரமைஸ். அதற்காக கலை நிகழ்ச்சி ரேஞ்சுக்கு இத்தனை நீளமா?!

படமே பேசட்டும் என்று ஆங்காங்கே அமைதி காத்திருக்கிற இசைஞானி இளையராஜா, தேவைப்படுகிற இடங்களில் மட்டும் தனது பின்னணி இசையால் நமது உணர்வுகளின் உச்சத்தை மீட்டிப் பார்க்கிறார். அடர்ந்த மரங்களுக்கிடையே முரட்டுப் பாதையில் கஞ்சா கும்பல் மலையேறுகிற காட்சிகளில் மெலிதான மர்மத்தையும் அந்த மலைப்பாதை பயணத்தின் பின்னே பொதிந்திருக்கிற அபாயத்தையும் இசையாலேய உணர வைத்திருக்கிறார்.

மயான பூமியில் கழுகாக, கஞ்சா காட்டில் குதிரையாக, கிராமத்துத் தெருக்களில் நாய்க்குட்டியாக படம் முழுக்க சக பயணியாக வருகிற பாலசுப்பிரமணியம் காமிரா வகையாகத் தோள் கொடுக்கிற பங்களிப்பு.

வெறியாட்டத்தை ரகளையான வேகத்தில் புரட்டியெடுத்திருக்கிற ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவாவுக்கு தனி சபாஷ்!

காட்சிக்கு காட்சி இரும்பாகவே விரக்ரமை காட்டியவர்கள், அவரை உருக்குவதற்கேற்ற கணகணப்பை சூர்யா காட்டுகிற பரிவில் இன்னும் அழுத்தமாகவே சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்லாததாலேயே, சூர்யாவின் முடிவைக்கண்டு விக்ரம் அடைகிற அதிர்ச்சிக்கும் அழுத்தம் கிடைக்காமலே போகிறது.

கட்டுப்பாடான குடும்பத்திலிருந்து வந்தும், தட்டிக் கேட்கவே ஆளில்லாமல் பிற்பாதி முழுக்க சூர்யா அண்டு கோவுடன் லைலா அலைவது எப்படி?

மனிதாபிமானம் கொண்ட ஒரு வெட்டியானிடம் வளர்ந்த விக்ரம் இப்படியொரு மிருகமாக மாறிப் போனதற்கான நியாயங்களும் புரியவில்லை.

இவர்கள் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்தது என்று சில மனிதர்களின் வாழ்க்கைக் கதையைப் பதிவு செய்யும் பாணியில் படம் இருப்பதால் சராசரி ரசிகர்கள் எதிர்பார்க்கக்கூடிய த்ரில் திருப்பங்கள் இதில் இல்லை. கூடியவரையில், ஜிகினாத்தனமான வண்ணக் கலவைகளைச் சேர்க்காத இந்த பரீட்சார்த்த தைரியம் வரவேற்கத்தக்கதே!

கலைக்கும் வணிகத்துக்கும் நடுவே தனக்கென ஒரு தனிப்பாதை போட்டுக்கொண்டு... கதை சொல்லும் விதத்திலும் காட்சி அமைப்பின் நேர்த்தியிலும்புதிய தலைமுறை இயக்குநர்களில், பாலா தமிழ்த்திரையுலகிற்கு நம்பிக்கை தரும் ஒரு பிதாமகன் தான்!

நன்றி: தினமலர்
[i][b]
!
Reply


Messages In This Thread
பிதாமகன் - by aathipan - 10-29-2003, 07:04 PM
[No subject] - by சாமி - 10-29-2003, 08:42 PM
[No subject] - by aathipan - 10-30-2003, 02:36 AM
[No subject] - by AJeevan - 10-30-2003, 10:07 AM
[No subject] - by veera - 10-30-2003, 12:24 PM
[No subject] - by AJeevan - 10-30-2003, 01:37 PM
[No subject] - by aathipan - 10-30-2003, 01:49 PM
[No subject] - by AJeevan - 10-30-2003, 01:59 PM
[No subject] - by aathipan - 10-30-2003, 02:28 PM
[No subject] - by Paranee - 10-30-2003, 04:11 PM
[No subject] - by shanmuhi - 10-31-2003, 08:21 PM
[No subject] - by aathipan - 11-01-2003, 03:55 AM
[No subject] - by சாமி - 11-01-2003, 10:22 PM
[No subject] - by Paranee - 11-05-2003, 01:24 PM
[No subject] - by vasisutha - 11-06-2003, 12:40 PM
[No subject] - by kuruvikal - 11-06-2003, 05:27 PM
[No subject] - by aathipan - 11-06-2003, 05:52 PM
[No subject] - by vasisutha - 11-06-2003, 11:39 PM
[No subject] - by AJeevan - 11-07-2003, 12:15 AM
[No subject] - by சாமி - 11-11-2003, 09:22 PM
[No subject] - by சாமி - 11-11-2003, 09:32 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)