10-29-2003, 08:15 PM
நலமாக வாழ நல்ல வழிகள்
மனமும், உடலும் ஒன்றோடொன்று இணைந்ததாகும். தினமும் அதிகப்படியான வேலை களால் மனமும், உடலும் களைப்பாகி சோர்ந்து விடுகிறது. எனவே, அவற்றிற்கு புத்துணர்ச்சி யூட்ட உடற்பயிற்சிகள் குறிப்பாக "பிரணாயாமா' எனப்படும் மூச்சு பயிற்சிகளும், யோகா சனங்களும் அவசியம். இதன்மூலம் மன அழுத்தத்திலிருந்து எளிதாக வெளிவரலாம்.
முப்பது வருடங்களாக அழகு பராமரிப்பு துறையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு, தனக்கென்று ஒரு முத்திரையை பதித்துள்ள வர்களும் இதையே கூறுகின்றார்கள். ""ஆழ்ந்த மூச்சுப்பயிற்சிகளில் ஈடுபடுவதால் உடலில் உள்ள கழிவுகளும், விஷத்தன்மை வாய்ந்த பொருள்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. ஒட்டு மொத்த உடல் நலத்திற்கும் இது நன்மை அளிக்கிறது'', என்கிறார்கள் அவர்கள்.
யோகாசனங்கள் உடலுக்கு வளையும் தன்மையை ஏற்படுத்தி, முதுகெலும்பை வலுவடைய செய்கிறது. இதனால் முதுகு வலிகள் ஏற்படாமல் தடுக்கலாம். வயது ஏறினாலும், இதே உடற்பயிற்சிகளை தொடரலாம். உடற்பயிற்சிகளை போலவே மனதை நிதானப்படுத்தி, சாந்தப்படுத்தும் பயிற்சிகளும் மிக அவசியம். அதிக அழுத்தமான சூழ்நிலைகளில் இருக்கும் பொழுதும், அழுத்தம் தரும் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பொழுதும், தசைகளையும், மனதையும் அழுத்தத்திலிந்து தளர்த்த சிறிய இடைவெளி எடுத்து கொண்டு தகுந்த பயிற்சிகளை செய்ய வேண்டும்.
அதோடு, உணவு கட்டுப்பாடும் அவசியம். ""அழகும், சுகாதாரமும் வேண்டுமென்றால் பட்டினி கிடக்க வேணடும், என்பதில்லை. இதற்கு ஒரு சுகாதாரமான உணவு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேணடும். பழங்கள், பழச்சாறுகள், பச்சை காய்கறிகள், முளைவிட்ட தானியங்கள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். வறுத்த, பொறித்த உணவுகள் நாவிற்கு சுவையாக இருந்தாலும் உடலுக்கு தீங்கையே விளைவிக்கும். பருப்பு வகைகளை தினமும் உணவில் சேர்த்து கொண்டு, கார்போஹைட்ரேட், கொழுப்பு சேர்ந்த உணவுகளை குறைத்து கொள்ள வேண்டும்'', என்கிறார்கள் நிபுணர்கள்.
உடலுக்கு தேவையான புரதங்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்த உணவுகள் நம் அன்றாட உணவு பட்டியலில் இடம் பெறுமாறு பார்த்து கொள்ள வேண்டும். அதோடு, யோகா போன்ற உடலையும், மனதையும் சுத்தப்படுத்தும் பயிற்சிகளையும் செய்து வந்தால் நலமுடன் பல்லாண்டுகள் வாழலாம்.
நன்றி: தினமலர்

[i][b]
!
!