Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிழல் யுத்தம்
#31
[quote=tamilchellam]<b>புலம்பெயர் அகதி வாழ்க்கையின் அவதி... அவசர வாழ்க்கை குறும்படத்தில் தெரிகிறது.

இது நிழலின் யுத்தம். நிஜம் இல்லை. குடும்பத்தில் யுத்தம் தொடங்குவதற்கான நிழல்களாக....உருவகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

எம்மவரது படைப்புக்களை மிக ஆர்வமாக பார்வையிடுவேன். விமர்சனம் எழுதவேண்டும் என்பதற்காக பலதடவைகள் போட்டு பார்த்தேன். ஓவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்துக்கள் இருக்கும். எனது பார்வையில்....எனது கோணத்தில் ஏற்பட்ட சில கருத்துக்களைத்தான் முன்வைத்துள்ளேன். இதைப்பற்றி எழுத இன்னும் நிறைய யோசித்தேன். அதிகமாகி விடுமோ என்று நினைத்து நிறுத்திவிட்டேன்.
தவறாக எழுதி இருப்பின் தெரிவிக்கவும்.

நட்புடன்,
தமிழ்செல்லம்.</b>[/quote]

நன்றி தமிழ்செல்லம்,
அதிகமாக எதையும் நீங்கள் எழுதவில்லை.இன்னும் எழுதியிருக்கலாம்................ஒரு குறும்படத்தால் என்ன செய்ய முடியும் என்று கேட்பவர்களுக்கு உங்களைப் போன்றோரது விமர்சனங்கள் பதிலாக இருக்கும்.

[quote=tamilchellam]கோயிலுக்கு வெளிக்கிடும்போது பெண்ணின் மனதில்.... மகிழ்ச்சியின் பிரவாகமாக புன்னகையை சிந்த விட்டிருக்கலாம் போல் தெரிகிறது.

இது மட்டுமல்ல,இதைவிட ஒரு பெரிய தவறு இங்கே என்னால் விடப்பட்டிருக்கிறது.
கதாநாயகியை கோயிலுக்கு போவதற்கான ஒரு உடையை அணியும்படி ராதிகாவுக்கு(கதாநாயகி) சொன்னேன்.

இக்காட்சியை எடுப்பதற்கு முன் ராதிகா Birthday பரிசை உடைத்துப் பார்ப்பது போன்ற ஒரு காட்சியை எடுப்பதற்கு தயாரான போது அவர் ஏற்கனவே பார்சலை உடைத்து அதனுள்ளிருந்த உடையை அணிந்து கொண்டிருந்தார்.

இதனால் ஆத்திரமுற்ற பாலா(கதாநாயகன்) கொஞ்சம் கடுமையாக ராதிகாவை ஏசினார்.
(இருவரும் கணவன்-மனைவி என்பதும் எனது நெருங்கிய நண்பர்களும் என்பதும் குறிப்பிட வேண்டியது.) நான் அவரை சமாதானப்படுத்தினாலும் அவரது முக வாட்டம் தணியவேயில்லை.அதுவே உங்களுக்கு சிரிக்காத முகமாக தெரிகிறது.

இக்காட்சி அதிகாலை 1.00 மணியளவில் எடுக்கப்பட்டது.

எனவே அவர் பார்சலை உடைத்து பரிசாக இருக்கும் உடையைப் பார்ப்பது போன்று எடுப்பதற்கு திட்டமிட்டிருந்த காட்சியை மாற்றி, பார்சலைச் சுற்றிய பேப்பரை உடலோடு இறுக அவர் நினைவாக அன்பாக அணைத்துக் கொண்டிருப்பது போலவும் கனவொன்று கண்டு எழுந்திருப்பது போலவும்,புதியதொரு காட்சியை உருவாக்கினேன்.

இவ்விபத்தில் உருவான காட்சி படத்துக்கு உரம் போட்டது என்பது மிகையல்ல,
எப்படியான கனவைக் காட்டுவது?...............என்று யோசித்த போதுதான்,
<b>கார் விபத்தை படத்துக்குள் கொண்டு வருவதற்கான எண்ணம் உருவானது.</b> ஆரம்பத்தில் கார் விபத்து என்பது கதையில் சிந்திக்கப்படவேயில்லை.
சில தவறுகள் கூட வெற்றிக்கு உறுதுணையாகி விடுவதுண்டு.இது ராதிகாவினால் எனக்குக் கிடைத்த வெற்றி என்பதை யுனிட்டில் அனைவருக்கும் சொன்னேன்.எனவேதான் சினிமா என்பது ஒரு தனிமனித வெற்றியாக முடியாது என்கிறேன்.

இங்கே நீங்கள் பாராட்டுவதோ,ஏசுவதோ அனைவரையும் சாரும்.இருப்பினும் தலை போவது என்னவோ இயக்குனரதுதான்.....................

இதற்கு பிறகு அவர் கோயிலுக்கு போவதற்காக உடுத்திய உடை, அவரது திருமண உடையாகும்.........
கோயிலுக்கு போக இப்படியாக அலங்கரிப்பதில்லை. ராதிகாவை சுமுக நிலைக்கு கொண்டு வர அந்த இடத்தில் நான் மெளனமாக வேண்டியிருந்தது.

இங்கே தவறு இயக்குனரான என்னுடயது என்பதை முதன் முறையாக இங்கே சொல்கிறேன்.அதை எவரும் கண்டு கொள்ளவில்லை.

ஒரு படைப்பின் தவறுக்கு அதன் தலைவனாக செயல்படும் இயக்குனர் பொறுப்பேற்க வேண்டும்.இது ஒரு சிறிய தவறாக இருக்கலாம்.இருப்பினும் தவறு தவறுதான்.

தவறுகளை சுட்டிக் காட்டுங்கள்,நாங்கள் திருந்தவும் , கற்றுக் கொள்ளவும் எவ்வளவோ இருக்கிறது..........................

நட்புடன்,
அஜீவன்
Reply


Messages In This Thread
நிழல் யுத்தம் - by Ilango - 10-27-2003, 04:06 PM
[No subject] - by yarl - 10-27-2003, 09:00 PM
[No subject] - by Paranee - 10-28-2003, 05:37 AM
[No subject] - by AJeevan - 10-28-2003, 10:00 AM
[No subject] - by தணிக்கை - 10-28-2003, 10:06 AM
[No subject] - by AJeevan - 10-28-2003, 11:41 AM
[No subject] - by Kanani - 10-28-2003, 11:43 AM
[No subject] - by yarl - 10-28-2003, 11:45 AM
[No subject] - by Ilango - 10-28-2003, 12:30 PM
[No subject] - by veera - 10-28-2003, 12:34 PM
[No subject] - by tamilmaravan - 10-28-2003, 12:40 PM
[No subject] - by AJeevan - 10-28-2003, 12:44 PM
[No subject] - by Chandravathanaa - 10-28-2003, 12:47 PM
[No subject] - by tamilmaravan - 10-28-2003, 12:49 PM
[No subject] - by veera - 10-28-2003, 01:05 PM
[No subject] - by tamilmaravan - 10-28-2003, 01:07 PM
[No subject] - by AJeevan - 10-28-2003, 01:15 PM
[No subject] - by Shan - 10-28-2003, 02:21 PM
[No subject] - by veera - 10-28-2003, 02:37 PM
[No subject] - by AJeevan - 10-28-2003, 02:38 PM
[No subject] - by aathipan - 10-28-2003, 07:13 PM
[No subject] - by AJeevan - 10-28-2003, 11:43 PM
[No subject] - by AJeevan - 10-28-2003, 11:55 PM
[No subject] - by Kanakkayanaar - 10-29-2003, 05:01 AM
[No subject] - by shanmuhi - 10-29-2003, 09:16 AM
[No subject] - by AJeevan - 10-29-2003, 11:32 AM
[No subject] - by shanmuhi - 10-29-2003, 11:41 AM
[No subject] - by AJeevan - 10-29-2003, 11:50 AM
[No subject] - by AJeevan - 10-29-2003, 01:50 PM
[No subject] - by tamilchellam - 10-29-2003, 04:12 PM
[No subject] - by AJeevan - 10-29-2003, 05:44 PM
[No subject] - by tamilchellam - 10-29-2003, 06:31 PM
[No subject] - by mohamed - 10-30-2003, 11:41 AM
[No subject] - by AJeevan - 10-30-2003, 01:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)