10-29-2003, 04:12 PM
<b>புலம்பெயர் அகதி வாழ்க்கையின் அவதி... அவசர வாழ்க்கை குறும்படத்தில் தெரிகிறது.
இது நிழலின் யுத்தம். நிஜம் இல்லை. குடும்பத்தில் யுத்தம் தொடங்குவதற்கான நிழல்களாக....உருவகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
குடும்பத்தில் பிரச்சனை பஞ்சாபி மூலம் உருவெடுக்கப்படுகிறது.
அந்தப் பெண்ணுக்கு தன் கணவன் தனக்கு மட்டுந்தான் என்ற மன உந்தல்தான்..... அந்த மனயுத்தத்திற்கு காரணமாக இருந்திருக்கும்.
மனதின் கொந்தளிப்பு.... கடலின் கொந்தளிப்போடு ஒப்பிட்ட கமராவின் தனித்தன்மை புலப்படுகிறது.
அதற்கு ஆதாரமாக கறியை தீப்பிடிக்க காட்டியிருப்பது... .அங்கே தீப்பிடித்தது கறி இல்லை. பெண்ணின் எதிர்பார்ப்புக்கள்தான் ! நிழலின் யுத்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
கோயிலுக்கு வெளிக்கிடும்போது பெண்ணின் மனதில்.... மகிழ்ச்சியின் பிரவாகமாக புன்னகையை சிந்த விட்டிருக்கலாம் போல் தெரிகிறது.
கோயிலுக்கு போக முடியாமல் போனதற்காக அதை வெளிப்படுத்த ..... அந்த அலங்காரத்துடன் படுத்திருப்பது. ஓர் ஏமாற்றத்தின் வெளிப்பாடு.
டெலிபோன் உரையாடல்களை மட்டும் நம்பி வருகின்ற பெண்களின் நிலை.... இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதற்கு இக்குறும்படம் நல்ல உதாரணமாக விளங்குகின்றது.
உற்றார் உறவினரை விட்டு இங்கு வரும் பெண்களின் எதிர்பார்ப்புகள்.. இங்கே நிர்மூலமாக மாறும் போது இதுபோன்ற நிழல் யுத்தங்கள் ஆரம்பமாவதற்கு வழி அமைக்கின்றன.
இயந்திரமாக வாழ்கின்ற அவனது நிலைப்பாடு....
குடும்பத்துக்காக உழைத்து தனக்கேன ஓர் வாழ்க்கையை அமைக்க முற்படும் போதும்....ஏற்படும் பிரச்சனைகள் சாதாரணமானவையானலும் அதைக் கையாளும் முறை .... தீர்க்கவேண்டிய முறை ஆணின் கையிலும் இருக்கின்றது.
பஞ்சாபி சிறு பிரச்சனை என்றாலும்... அதை நினைத்து பியர் அருந்தி யோசிப்பது.... ஏதைப்பற்றியதாக இருக்கும் ஒருவேளை ஆணின் மனதில் சஞ்சலங்கள் இருக்கின்றதோ... என்ற நினைப்பைத் தான் என்னுள் தோற்றுவிக்கின்றது.
சிதறிக்கிடக்கும் அழைப்பதழை அடுக்கிவைப்பதில் அவனது பொறுமை நிதானம் தெரிகிறது.
புலம்பெயர் நாட்டில் ஒருவருக்கு உதவிசெய்தால் தான் அவர் எமக்கு உதவி செய்வார் என்ற யதார்த்தம் தெரிகிறது.
தன் குடும்பத்தை பார்ப்பது, பெண்ணை இங்கு அழைத்தது என்பதையெல்லாம் ஒப்புவிக்கும்போது.... தான் உழைப்பது தன் குடும்பத்தை கவனிக்கத்தான் என்று நினைக்கத்தோன்றுகிறது. மனைவியின் பெற்றோரை மனைவி உழைத்துத்தான் பணம் அனுப்பவேண்டுமா ? இங்கே .... ஆணின் ஆளுமை அதிகரித்திருப்பது போன்ற ஓர் நெருடல் ஏற்படுகிறது.
இறுதியில் நிழல் யுத்தம் ஓர் மௌன யுத்தம்.
பங்குபற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.</b>
எம்மவரது படைப்புக்களை மிக ஆர்வமாக பார்வையிடுவேன். விமர்சனம் எழுதவேண்டும் என்பதற்காக பலதடவைகள் போட்டு பார்த்தேன். ஓவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்துக்கள் இருக்கும். எனது பார்வையில்....எனது கோணத்தில் ஏற்பட்ட சில கருத்துக்களைத்தான் முன்வைத்துள்ளேன். இதைப்பற்றி எழுத இன்னும் நிறைய யோசித்தேன். அதிகமாகி விடுமோ என்று நினைத்து நிறுத்திவிட்டேன்.
தவறாக எழுதி இருப்பின் தெரிவிக்கவும்.
நட்புடன்,
தமிழ்செல்லம்.