08-27-2005, 11:50 AM
தமிழ்த் தேசியத்திற்கு எதிரான சதிவலைகள் காலத்திற்குக் காலம் பின்னப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல. இந்த சதிவலைகளைப் பின்னியவர்களே அந்த வலையில் அகப்படுவதும் ஒரு பழைய விடயம்தான். ~தனக்கு அடாத்தொழில் தன் பிடரிக்குச் சேதம்| என்பார்கள், அதேபோல் தனக்கு அடாத தொழிலால் தமிழறியாத் தமிழன் ஒருவன் தன்னுயிரை இழந்துள்ளார் என்ற உண்மை அனைவர்க்கும் தெரிந்திருக்க நியாயமில்லைத்தான். இது தொடர்பான செய்திகள் இப்போது மெல்ல மெல்லக் கசியத் தொடங்கியிருக்கின்றது.
அந்த உண்மை என்னவெனில் தமிழர்க்கு எதிரான இந்தச் சதிவலையின் நாயகன் ஆனந்தசங்கரிதான் என்ற தகவல்களும் வெளியாகியிருக்கின்றது. இதில் விமல் வீரவன்சவும் இன்னும் ஒரு அதிதீவிர பௌத்த பேரினவாதியும் சம்பந்தப்பட்டிருந்தார்கள். தமிழ்த் தேசியத்துக்கு எதிரான கூட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்துவதற்காக இவர்கள் இரகசியமாக ஓரிடத்தில் சந்தித்தனர். அமைச்;சர் கதிர்காமர் படுகொலை செய்யப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் இச்சந்திப்பு நடந்தது. இந்த இரகசியச் சந்திப்பின் ஏற்பாட்டாளராக அமைச்சர் கதிர்காமரே இருந்ததுடன், அவரும் அந்தரங்கமான இந்தச் சதியாலோசனையில் பிரசன்னமாயிருந்தாராம்.
மறைந்த சங்கர் ராஜி தலைமையிலான ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப். (வரதர் அணி), ஈ.என்.டி.எல்.எப். முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான ஈ.பி.டி.பி. ஒரு பிரிவு, புளொட், மற்றும் ஆனந்தசங்கரியும் அவரது ஆதரவாளர்களும் வலுவான பின்னணிச் சக்தி ஒன்றின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டதும், அதன் தலைவராக ஆனந்தசங்கரி தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் ஏற்கனவே தெரிந்த விடயம்.
தமிழ்த் தேசியத்திற்கு எதிரான இந்தக் கூட்டமைப்பின் தலைவர் ஆனந்தசங்கரியுடன் பௌத்த பேரினவாத கட்சிகளையும் இணைத்து அகன்ற சதிவலைக் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது, அம்மையாரின் அரசியல் அஸ்த்;தமனத்திற்கு அப்பால் அடுத்த தலைமைக்கு வலுச்சேர்ப்பதன் மூலம் தனது அரசியல் எதிர்காலத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வது போன்ற பல்நோக்குத் திட்டத்துடன் அமரர் கதிர்காமர் தன்னுடைய சதித் திட்டத்தை தீட்டியிருந்தமையையும் அறிந்துகொள்ள முடிகின்றது.
அந்தரங்கமாய் நடந்த விடயம் எப்படியோ அம்மையாருக்குத் தெரிந்து விட்டது. உண்மையில் இந்தச் சதித்திட்டம் நிறைவேற்றப்பட்;டால் தனது தம்பியாரின் அரசியல் மட்டுமல்ல பண்டாரநாயக்கா வம்சத்தின் அரசியல் எதிர்காலமே அஸ்த்தமனமாகி விடுமென ஆழமாகச் சிந்தித்தார் அம்மையார். அமைச்சர் அவர்கள் அமரரானார். அனுரா (வெளிவிவகார) அமைச்சரானார்.
இவை தவிர கதிர்காமர் வீட்டிற்குத் துக்கம் விசாரிக்கச் சென்ற ஜே.வி.பி. மற்றும் சுதந்திரக் கட்சி முக்கியர்;தர்கள், கதிர்காமரின் கொலை தொடர்பாக ஜனாதிபதி தேசிய தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் விடுதலைப் புலிகள் அமைப்பை கடுமையாக விமர்சிக்;கவில்லையென சுகந்தி கதிர்காமருடன் உரையாடும் போது சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். இவ்விடயமும் ஜனாதிபதியின் காதுக்கு எட்டியமை தொடர்பாக கடந்த 14 ஆம் திகதிய ~சண்டே லீடர்| பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த அகன்ற சதிவலைக் கூட்டமைப்புத் திட்டம் அமைச்சரின் படுகொலையுடன் அபசகுணமாய் முடிந்துள்ளது. அந்தரங்கமான நடவடிக்கைகள் கூட உடனுக்குடன் அம்மையாருக்கு எப்படியோ கசிந்து விடுகின்றது. இந்நிலையில் அகன்ற சதிவலைக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்னாகும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியல்வாதியாய் அமைச்சராய் அகிலத்திற்கு அறியவைத்த அம்மையாரையே கதிர்காமர் வெட்டியோடினார். ஆனந்தசங்கரி ஆழக்குழி பறிக்க மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அரசியலில் எதுவும் நடக்கலாம். அதனால் அப்பாவிச் சிங்கள மக்கள் விழிப்பாய் இருக்க வேண்டும்.
.........தமிழ்நாதத்திலிருந்து.........

" "