10-29-2003, 05:01 AM
அயீவன் அவர்கள் ஆக்கிய 'நிழல் யுத்தம்' மிக அருமையாய் இருந்து. காட்சிகள் தொடுத்த விதம் நன்கே அமைந்திருந்தது. திறம்பட பின்னிய பின்னணி இசையும், அழகிய தகுந்த காட்சி உவமைகளும் (எ.க கடல் அலை) பாத்திரங்களின் உள்ள நிலைகளைப் பார்ப்போர்க்கு உயிர்ப்புடன் உணர்த்தியது. இதை நீங்கள் பிற, புலம்பெயர்ந்த நாட்டு ஊடகங்களுக்கும் குறிப்பாக இலங்கை ஒளிபரப்பு ஊடகங்களுக்கும் அனுப்பலாமே. அவர்கள் தரும் (ஏமாற்றாவிடில் ) காசு உங்கள் அடுத்த குறும்படத்துக்கோ நெடும் படத்துக்கோ உதவது மட்டுமன்றி, ஈழத்தமிழ் மக்கள் பரவி வாழும் இடங்களெல்லாம் (இலங்கை உட்பட) புலம்பெயர்ந்து வாழும் கலைஞர்கள் புகழ் பரவ வாய்ப்புண்டல்லவோ?
'நிழல் யுத்தம்' படம் பார்க்க இடம் தந்த யாழுக்கும், இணைப்பளித்த இளங்கோ அவர்கட்கும், படம் செய்து வழங்கிய அயீவன் அவர்கட்கும் என் உளமார்ந்த நன்றி. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இளங்கோ அறிக, நான் நீங்கள் தந்த இணைப்பை சொடுக்கி பார்த்த பொழுது படம் விக்கி விக்கியே ஓடியது :mrgreen: (என்னிடம் Broad band தொடுப்பு உள்ளது). ஆதலால் தரவிறக்கம் செய்து பார்த்து மகிழ்ந்தேன். மீண்டும் மிக்க நன்றி.
'நிழல் யுத்தம்' படம் பார்க்க இடம் தந்த யாழுக்கும், இணைப்பளித்த இளங்கோ அவர்கட்கும், படம் செய்து வழங்கிய அயீவன் அவர்கட்கும் என் உளமார்ந்த நன்றி. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இளங்கோ அறிக, நான் நீங்கள் தந்த இணைப்பை சொடுக்கி பார்த்த பொழுது படம் விக்கி விக்கியே ஓடியது :mrgreen: (என்னிடம் Broad band தொடுப்பு உள்ளது). ஆதலால் தரவிறக்கம் செய்து பார்த்து மகிழ்ந்தேன். மீண்டும் மிக்க நன்றி.
-

