08-26-2005, 10:18 AM
மடத்தில அப்போது தான் இராப் போசனத்தை வழங்க ஆயத்தம் செய்து கொன்டிருந்தனர்.வரும் வழிப்போக்கர்களுக்கென்று சங்கிலிய மன்னனால் கட்டப்பட்டது அந்த மடம்.
அன்று நிலா வெளிச்சமாகையால் பலர் தமது பயணத்தை மேற்கொண்டிரிந்தனர்.ஆனையிறவைக் கடப்பதற்கு முன் சற்றுத் தூரத்திலேயே அந்த மடம் இருந்தது.தெற்கே வன்னி நாட்டிற்கும்,தென் கிழக்கே வணிகத் துறைமுகம் உள்ள மாந்தோட்ட நகரிற்கும் செல்லும் வழிப் போக்கர்கள் இளைப் பாறி செல்லும் இடமாக அந்த மடம் இருந்தது.
அனேகமானோர் வணிகர்களாகவும் ,பயணிகளாகவும் இருந்தனர்.மாறு வேடம் பூண்டிருந்த பத்மினி பெண்கள் எவரையுமே காணவில்லை.தனது மாறு வேடம் கலையாமல் அவள் அந்தக் கூட்டத்திற்குள் காரியம் ஆற்றவேண்டி இருந்தது.
அவள் தனது தட்டை எடுத்துக் கொண்டு ஒரு ஒரத்தில் இருந்த திண்ணையில் அமரப் போன போது ,பின்னால் இருந்து ஒரு குரல் 'தாங்கள் எங்கு செல்கிறீர்கள் வணிகரே' என்று ஒலித்தது.