08-26-2005, 06:56 AM
<b>ஏமாந்த கனடா வாலிபர் : ஆசின் வேதனை!</b>
<img src='http://thatstamil.indiainfo.com/images29/optimized/asin-surya27-400.jpg' border='0' alt='user posted image'>
ஆசின் - சூர்யா
எனது புகைப்படத்தைப் பார்த்து ஊனமுற்ற பெண்ணிடம் ஏமாந்த கனடா நாட்டு இளைஞருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவிப்பதாக நடிகை ஆசின் கூறியுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பூங்கொடி என்ற ஊனமுற்ற பெண், நடிகை ஆசினின் படத்தை தனது படமாக கூறி கனடா நாட்டைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் சௌந்தர் என்பவரை ஏமாற்றி பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை சுருட்டிய செய்தியை நாம் நேற்று வெளியிட்டோம்.
இச் சம்பவம் குறித்து ஆசின் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, என் படத்தை நம்பி கனடா நாட்டு வாலிபர் ஏமாந்தது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவருக்காக அனுதாபப்படுகிறேன். இது எனக்கு வேதனையைக் கொடுத்துள்ளது.
அந்தப் பெண் அப்பாவித்தனமாக செய்திருந்தாலும் ஒரு நபரை ஏமாற்றியது மிகவும் தவறானது, வேதனையானது. இதுபோன்ற தொழில்நுட்ப மோசடிகளை யாரும் தடுக்க முடியாது. எனவே இதுபோன்ற மோசடிகளிலிருந்து நாம்தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
அந்த ஊனமுற்ற பெண்ணின் நிலையும் மோசமானதுதான். ஒவ்வொருவரும் நேர்மையாக, மனசாட்சியுடன் நடக்க வேண்டும் என்பதையே இச் சம்பவம் உணர்த்துகிறது. எனது படத்தால் ஒரு இலங்கைத் தமிழர் ஏமாற நேர்ந்ததற்காக நான் ரொம்பவே வருத்தப்பட்டேன் என்றார் ஆசின்.
thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>