08-25-2005, 04:09 PM
<b>யேர்மனியிலிருந்து 50 இலங்கையர் திருப்பி அனுப்பப்பட்டனர்! </b>
யேர்மனியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் 50 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்த நாட்டின் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
யேர்மனியிலிருந்து விசேட விமானம் மூலம் இன்று வியாழக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை இக்குழுவினர் வந்தடைந்ததாக விமான நிலைய பாதுகாப்புப்பிரிவினர் தெரிவித்தனர்.
நாடு திரும்பிய 50 பேரில் யுவதிகளும் குழந்தைகளும் இருந்தனர். இவர்கள் நாடு திரும்பியதும் விமான நிலைய குற்றத் தடுப்பு திணைக்கள அதிகாரிகள் அவர்களை அழைத்துச் சென்று விசாரணைகளை நடத்தி வாக்குமூலங்களை பதிவுசெய்த பின்னர் விடுவித்துள்ளனர்.
இலங்கை திரும்பியவர்களுடன் யேர்மன் காவல்துறை அதிகாரிகள் 50 பேரும் வைத்தியர்கள் சிலரும் வந்திருந்ததாக விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினர் கூறினர்.
புதினம்.கொம்

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>