08-25-2005, 03:26 PM
sinnakuddy Wrote:முந்தி அனுப்பபோறாங்கள் என்று துடிச்ச கனபேர் குடியும் குடித்தனமா நஸனலிற்றியுடன் செட்டிலாய் போட்டினம்.. மற்ற சனங்களைப்பற்றி அக்கறையில்லாமல் இருக்கினம். ஒருக்கா பேச்சுக்கு சொல்லிப்பாருங்கோ நஸனிலிற்றிக்காரற்ரை பாஸ்போர்ட்டையும் பறிச்சுப்போட்டு ஏத்தப்போறங்களென்று...அப்ப தான் சுடு தண்ணி குடிச்ச நாய் மாதிரி திரிவினை..
நீங்கள் கூறுவது சரி தான் சின்னக்குட்டி நாங்கள் இப்படி இங்கு நிறைய தமிழரை பார்த்து இருக்கிறோம். அதவது அவர்கள் நாங்கள் இலங்கையர் அல்ல, நாங்கள் ஜேர்மன்காரர் (Wir sind keine Srilankaner, sondern deutscher) என்று சொல்கிறார்கள். எல்லாம் காலம் செய்த கோலம் தான். அவர்களை மாதிரியானவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஜேர்மனியின் வரலாறுகளை சற்று திரும்பி பாருங்கள். இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன் டொச் தேசிய இனமாக்கப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை அவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய இனமாக்கப்பட்ட சட்டமூலத்தினை மீளப்பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜேர்மன் கடவுச்சீட்டு அடையாள அட்டை என்பவற்றையும் மீளப்பெற்று Duldung எனும் நாடுகடத்தும் 1 நாள் வதிவிட அனுமதி வழங்கி சில கப்பல்களை வாடகைக்கு அமர்த்தி அவர்களை பலவந்தமாக அவர்களின் தாய் நாட்டிற்கு நாடு கடத்தியதை ஒருகணம் உங்கள் மனதில் வையுங்கள்.
[size=18]சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா?????

