08-25-2005, 12:58 PM
இவர்களில் Essen நகரில் இருந்து அனுப்பபட்டவர்களில் ஒரு குடும்பத்தை எமக்கு தெரியும் அவர்களில் கணவன் சுமார் 11 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனிக்கு வந்துள்ளார். அவருடைய அரசியல் தஞ்ச விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தது. மேலும் அவருடைய மனைவியும் 11 வயசு மகனும் இந்த வருடமே ஜேர்மனிக்கு வந்தனர்.இவர்களுடைய அரசியல் தஞ்ச விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. பின்னர் இவர்கள் தங்களுக்கு உடல்நலக்கோளாறு என சட்டத்தரணியின் உதவியுடன் வழக்கொன்றை ஜேர்மன் அரசுக்கு எதிராக ஏற்படுத்தியிருந்தனர். அதாவது 24.08.2005 அன்று அவர்களுக்கு வைத்திய சோதனைக்கான நாளும் குறிக்கப்பட்ட நிலையில் அன்று அதிகாலை இவர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டனர். இப்பொழுது ஏனயவர்கள் அதாவது வதிவிட அனுமதி நிராகரிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பீதியுடனேயே காணப்படுகின்றனர். இந்த நிலையை இங்கு இருக்கும் தமிழ் அமைப்புக்கள் நிச்சயமாக இதை கண்டித்து ஜேர்மன் உள்நாட்டு அமைச்சுக்கு எதிராக ஒரு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு இங்கு இப்போது வதிவிட அனுமதி நிராகரிக்கப்பட்டிருப்பவர்களையாவது இனி காக்க முன் வரவேண்டும்.

