Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண் என்று பிறந்து விட்டால்......
#1
<b>பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த தாய், பாட்டி</b>

பிறந்த 3 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிருடன் புதைத்து கொல்ல முயன்ற தாயையும் பாட்டியையும் போலீசார் கைது செய்தனர். மண்ணில் புதைக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த அந்தக் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடூரமான சம்பவம் மதுரையில் நடந்தது.

ஈஸ்வரி என்ற 25 வயது பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த 21ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்ததால் அதைக் கொல்ல முடிவு செய்தனர் ஈஸ்வரியும் அவரது தாயாரும்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஈஸ்வரி குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு வைகை ஆற்றங்கரைக்குச் சென்றார்.. கூடவே அவரது தாயாரும் சென்றார்.

அப் பகுதியில் ரோந்து சென்ற போலீசார், குழந்தையை உயிருடன் பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு சென்ற பெண்களைப் பார்த்து சந்தேகமடைந்தனர். இருவரையும் அழைத்து விசாரித்தனர்.

குழந்தையை மருத்துவர்கள் தான் பிளாஸ்டிக் பையில் போட்டு பத்திரமாக எடுத்துச் செல்லும்படி கூறியதாக அவர்கள் கதைவிட்டனர். ஆனால் அவர்களைத் திட்டிய போலீசார் குழந்தையை கையில் எடுத்துச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இரு பெண்களும் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு ஆற்றுக்குள் இறங்கினர்.

ஆனாலும் இருவர் மீதும் சந்தேகம் இருந்ததால், அவர்களை பின் தொடர முடிவு செய்தனர்.

ஆனால், இயற்கை உபாதைக்காக இருவரும் ஆற்றுக்குச் செல்வதாகக் கூறவே அவர்களை போலீசார் உடனே பின் தொடரவில்லை.

இரு பெண்களும் தொடர்ந்து ஆற்றுக்குள்ளேயே இருக்கவே, சந்தேகமடைந்த போலீசார் அங்கு விரைந்தனர்.

அப்போது அவர்கள் கண்ட காட்சி உயிர் உறைய வைத்தது. இரு பெண்களும் கையாலேயே ஆற்று மணலில் குழி தோண்டு குழந்தையை புதைத்துவிட்டு மூடிக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து ஓடி வந்த போலீசார் குழந்தையை உடனடியாக மண்ணில் இருந்து மீட்டனர். பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்ட குழந்தை மயங்கிப் போய் இருந்தது.

உடனடியாக குழந்தையைத் தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் ஓடி வந்தனர். மருத்துவர்கள் உடனே குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சையை ஆரம்பித்தனர்.

குழந்தையைப் புதைத்த தாய் ஈஸ்வரியையும் அவரது தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்தக் குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் கூறுகையில், ஈஸ்வரியின் கணவர் ஒரு கூலித் தொழிலாளி. தனக்கு பையன் தான் வேண்டும் என அவரது கணவர் கூறியுள்ளார். பெண் குழந்தை பிறந்ததால் ஈஸ்வரியிடம் அவர் பேசக் கூட இல்லை என்று தெரிகிறது.

இதனால் வெறுத்துப் போய் குழந்தையை புதைத்துக் கொல்ல முடிவு செய்ததாக ஈஸ்வரி விசாரணையின்போது கூறினார் என்றனர்.

குழந்தையை வளர்க்க முடியாதவர்களுக்கு உதவவே தொட்டில் குழந்தைத் திட்டம் என்ற திட்டத்தை அரசு நடத்தி வருகிறது. குழந்தையை வளர்க்க முடியாமல் சிரமப்படுபவர்கள் அதை அரசிடம் ஒப்படைக்கலாம் என்ற நிலை உள்ளது.

அதைக் கூட செய்யாமல், குழந்தையை கொன்றுவிட முடிவு செய்த ஈஸ்வரியை என்னவென்று சொல்வது? பெண் குழந்தை பிறந்ததால் மனைவியிடம் பேசுவதையே நிறுத்திவிட்ட கணவரை என்ன செய்வது?

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
பெண் என்று பிறந்து விட்டால்...... - by kuruvikal - 08-25-2005, 08:02 AM
[No subject] - by வெண்ணிலா - 08-25-2005, 08:09 AM
[No subject] - by Danklas - 08-25-2005, 08:32 AM
[No subject] - by அனிதா - 08-25-2005, 10:06 AM
[No subject] - by Thala - 08-25-2005, 10:09 AM
[No subject] - by Niththila - 08-25-2005, 11:24 AM
[No subject] - by MUGATHTHAR - 08-25-2005, 12:00 PM
[No subject] - by Rasikai - 08-25-2005, 02:17 PM
[No subject] - by ப்ரியசகி - 08-25-2005, 03:15 PM
[No subject] - by Danklas - 08-25-2005, 04:47 PM
[No subject] - by ப்ரியசகி - 08-25-2005, 07:16 PM
[No subject] - by shobana - 08-25-2005, 07:24 PM
[No subject] - by கீதா - 08-25-2005, 07:56 PM
[No subject] - by கீதா - 08-25-2005, 08:01 PM
[No subject] - by sinnappu - 08-26-2005, 07:39 AM
[No subject] - by Rasikai - 08-26-2005, 12:28 PM
[No subject] - by ப்ரியசகி - 08-26-2005, 12:58 PM
[No subject] - by Jenany - 08-26-2005, 02:00 PM
[No subject] - by RaMa - 08-27-2005, 03:45 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)