10-28-2003, 11:45 AM
AJeevan Wrote:கடின உழைப்போடு ஓசியிலும் பார்க்க விரும்பாதவர்கள் இருக்கிறார்கள்.சிலர் பார்த்தாலும் ஓரிரு வார்த்தை எழுதி பாராட்டலாமே என்ற மனசு கூட இல்லாதவர்கள்.
எனது அனுபவத்தில் ஈழத்தமிழர்கள் பாராட்டுவது என்பதில் சற்று கஞ்சத்தனமுள்ளவர்கள். பிழை பிடித்து விவாதிப்பவர்களில் வள்ளல்கள்.விதிவிலக்கு நீங்கள் தமிழகத்தவராகவிருந்தால்...
ஒருவர் ஒரு நிகழ்வை பார்த்தும் அது பற்றி
எழுதமுடியாமைக்கு பல காரணமிருக்கலாம்.
ஆனால் எங்கோ எப்போதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர் முhலம் உங்களுக்கான விமர்சனம் ஒரு நண்பருககோ எதிரிககோ வெளியேறும்.இது நான் கண்ட அனுபவம்.
அதே போல்
நண்பர்கள் என்னை ஊக்குவித்ததை விட
நண்பர்களபோலிருந்து ஊக்குவித்த எதிரிகளே எனக்கு அதிகம்.அதற்காக அவர்களது படைப்பையோ ஆக்கத்தையோ
திறமையையோ நான் பாராட்ட மறுப்பதில்லை.
வேறெருவிடயம்.
ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்.
இந்தியாவில் பல படப்பிடிப்புகளில் பலசமயம் படப்பிடிப்புக்கே சம்பந்தமில்லாது பல நடிகர்கள நின்றுகொண்டிருப்பார்கள்.அது பற்றி விசாரித்தபோது சொன்னார்கள்.
தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் கண்ணில் படாவிட்டால் இவர்கள் மறக்கப்பட்டுவிடுவார்கள்.எனவே தமது இருப்பை ஞாபகப்படுத்தி இப்படிகாண்பித்துக்கொள்கிறார்கள் என்றார் ஒரு இயக்குனர்.
சிந்தித்துப்பார்த்ததில் அது எவ்வளவு உண்மை என தோன்றியது.
எமது திறமையான கலைஞர்கள் எல்லாம் எங்கே??..இருப்பை உறுதிப்படுத்தாது மறநது மறைந்துவிட்டார்கள்...உடலளவில் மட்டும் உள்ளார்கள்.
உதாரணம்
இங்கும் சோர்ந்திருந்திருந்தால் நாச்சிமார்கோயிலடி ராஜன் என்ற ஒரு வில்லிசைக்கலைஞன் கூட மறைக்கப்பட்டு மறைந்திருப்பான்.
எனவே யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் முடிந்தவரை களமாடிக்கொண்டேயிருப்போம்.

