08-25-2005, 01:38 AM
<span style='font-size:25pt;line-height:100%'>ஜேர்மனியில் வசித்த 35 தமிழ்க்குடும்பங்களுக்கும் மறக்கமுடியாத நாள்</span>
நீதிமன்றத்தின் முன் அனுமதியைப் பெற்று ஜேர்மனியில் 24.08.2005 அதாவது நேற்று அதிகாலை காவல்த்துறையினரும் வெளிநாட்டவர் பணிமனைகளும் கூட்டாக பாரிய அதிரடி நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். முன்னிரவு சரியாக 2.30 மணிக்கு ஒரே நேரத்தில் காவல்த்துறையினரும் வெளிநாட்டவர் பணிமனையினரும் அனைத்து நாடு கடத்தவிருக்கும் 35 தமிழர்களின் வீடுகளுக்குள்ளும் கதவுகளை கோடரிகளால் கொத்தியும், கதவுப்பூட்டுக்களை உடைத்தும் உள் நுளைந்தனர். அவர்களில் சிலர் பொருட்களை பொதிசெய்யும் பெட்டிகளுடன் காணப்பட்டனர் அவர்கள் அலுமாரிகளில் கிடந்த உடுப்புகளை பொதிசெய்தனர். சிலர் புதிய கதவுகளை வீடுகளுக்குள் கொண்டுவந்தனர் ( உடைத்த கதவுக்குப் பதிலாக பூட்ட) இன்னும் சிலர் அனைவருக்கும் கைவிலங்கிட்டனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நேரடியாக Duesseldorf விமான நிலையம் கொண்டுசெல்லப்பட்டு காலை 8 மணியளவில் இலங்கைக்கு விஷேட விமானம் மூலம் நாடுகடத்தப்பட்டனர். இந்த நடவடிகையில் இருந்து Essen நகரத்தில் வசித்த எனது உறவினன் ஒருவர் மட்டுமே தப்பியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. பாரிய திட்டமிடலுடன் நடத்தப்பட்ட இந்த நாடுகடத்தும் நடவடிக்கையானது அதிகாலையில் நடைபெற்று அத்தோடு விமானம் காலை 8 மணியளவில் வானில் பயணிக்கத்தொடங்கியது. காரணம் மாலையிலோ அல்லது இரவிலோ விமானம் புறப்பட்டால் அதற்குள் சட்டத்தரணிகளின் உதவியை நாடி சிலர் தப்பித்துவிடுவார்கள் எனும் காரணத்தால் சட்டத்தரணிகளின் அலுவலகங்கள், நீதிமன்றங்கள் திறப்பதற்கு முன்னரே விமானம் வானில் கிளம்பியது.