10-28-2003, 11:21 AM
தீர்வுத்திட்டம் ஒரு பதிய நம்பிக்கையை தந்தாலும் தற்போதைய அரசியல் நிலவரம் கொஞ்சம் நம்மை பயப்படவைக்கிறது. அண்மையில் வெளிவந்த சீலங்கா சம்பந்தப்பட்ட பொருளாதார முடிவுகள் சிறீலங்காவின் தற்போதைய அரசை மீண்டும் போருக்கு இட்டுச்செல்லுமா என்பது சந்தேகமே. அனால் பதவி இழுபறியில் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்த நினைக்கும் ஆம்மையார் நிச்சயம் பேரை திரும்ப கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். முப்படை தளபதிகள் அரசிற்கும் அதிகாரத்திற்கும் (அம்மையாருக்கும்) இடையில் சிக்கி தவிக்கிறார். விடுதலைப்புலிகள் மீண்டும் ஒரு யுத்தத்தை தாமாக தொடங்கப்பேவதில்லை. அதில் அவர்கள் மிகவும் அக்கறையாக உள்ளார்கள். ஆனால் அதற்காகக எவ்வளவு து} ரம் தமது தரப்பு இளப்புகளை சகித்துக்கொள்வாரகள்? யுத்தம் வருகுதோ இல்லையோ அம்மையார் தன ஸ்ரண்டுகளை மட்டும் நிறுதத மாட்டார். ஆனால் யுத்தம் ஒன்று வெடித்தால் அதற்கான முழுப்பொறுப்பும் அம்மையார் தலையில்தான் போய் முடியும். இதை அவர் விரும்புவாரா? அரசியலி; இது அவருக்கு எவ்வளவு பாதிப்பை கொண்டுவரும் என்பதை அவர் அறியாதவர் அல்ல. எல்லாம் ஒரு அரசியல் ஸ்ரண்ட்தான் ஆனால் முடிவு விபரீதமாக மாறினால்?????

