10-28-2003, 06:22 AM
புலிகளின் தீர்வுத்திட்டம்
அக்டோபர் 27 2003
thatstamil.com
இடைக்கால நிர்வாகத்தில் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கும் பிரதிநித்துவம்: புலிகள்
கொழும்பு:
வடகிழக்கில் அமையவுள்ள இடைக்கால நிர்வாகத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க விடுதலைப் புலிகள் இயக்கம் முன் வந்துள்ளது. இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இது முக்கியமான மைல் கல்லாக கருதப்படுகிறது.
அதிகாரப் பகிர்வு குறித்த தங்களது புதிய திட்டத்தில் விடுதலைப் புலிகள் இதனைத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
புலிகளின் திட்டத்தில் இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
வட கிழக்கில் 100 பேர் கொண்ட இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்கலாம். அதில்இ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து தலா 50 பேர் இடம்பெற வேண்டும் .அக்குழுவில் 25 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டும்.
மக்கள் தொகை அடிப்படையில்இ அனைத்து இனத்தவருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.
நிர்வாகக் குழுவுக்கு 20 பேர் கொண்ட காபினெட் அமைச்சரவை தலைமை வகிக்க வேண்டும். அதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து தலா 10 பேர் இடம் பெற வேண்டும்.
6 ஆண்டுகளுக்குள் முழுமையானஇ நிரந்தரமான அதிகாரப் பகிர்வுக்கு வழி வகுக்கும் வகையில் புதிய அரசியல் சாசனத்தை இலங்கை அரசு உருவாக்க வேண்டும்.
அதுவரை ஆயுதங்களை நாங்கள் கைவிட மாட்டோம். எங்களது ராணுவப் பிரிவும் கலைக்கப்படாது.
இடைக்கால ஆட்சியில் விடுதலைப் புலிகள்இ கடற்புலிகள் மற்றும் ராணுவம் ஆகியவை எவ்வாறு இயங்க வேண்டும் என்று தனியான விதிமுறைகளை வகுத்துக் கொண்டுஇ அதன்படி செயல்படலாம்.
இவ்வாறு புலிகள் தங்களது புதிய திட்டத்தில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. புலிகளின் கோரிக்கைகள் நியாயமானவையாக இருப்பதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புலிகளின் யோசனைகளை இலங்கை அரசின் தலைமை அமைதிப் பேச்சாளரும் அமைச்சருமான பெரிஸ் பாராட்டியுள்ளார்.