08-24-2005, 06:53 AM
இந்த இணைய ஏமாற்றல் தொடர்பான மேலதிக விபரங்களுடன் விரிவான செய்தி....தருவது தற்ஸ்தமிழ்.கொம்...
நடிகை அசினின் புகைப்படத்தை தனது புகைப்படம் என்று கூறி கனடாவைச் சேர்ந்த வாலிபரை ஏமாற்றி பல லட்சம் மதிப்புள்ள பொருட்களைப் பறித்து மோசடி செய்ததாக கோவையைச் சேர்ந்த ஊனமுற்ற பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கனடாவில் வசித்து வருபவர் சௌந்தர். இவருக்கு இன்டர்நெட்டில் சாட்டிங் மூலம் கோவையைச் சேர்ந்த பூங்கொடி என்ற பெண் அறிமுகமானார். சாட்டிங் மூலம் உரையாடி வந்த இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பைப் பயன்படுத்தி சௌந்தரிடமிருந்து பல்வேறு விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொண்டார் பூங்கொடி. இந் நிலையில் பூங்கொடியின் புகைப்படத்தை அனுப்புமாறு சௌந்தர் கோரவே, தனது புகைப்படத்திற்குப் பதில் நடிகை அசினின் புகைப்படத்தை சௌந்தருக்கு அனுப்பியுள்ளார் பூங்கொடி.
சினிமா விஷயங்களில் சுத்தமாக ஆர்வமில்லாத சௌர்ந்தருக்கு அது நடிகை ஆசினின் புகைப்படம் என்று தெரியாமல் போய்விட்டதாம்.
பூங்கொடி அனுப்பி ஆசினின் படத்தைப் பார்த்து மயங்கிய சௌந்தர், உடனடியாக அவரைக் காண விரும்பியுள்ளார். ஆனால், பூங்கொடி ஜகா வாங்கிவிட்டார். தனது முகவரியைத் தரவில்லை.
ஆனாலும் கனடாவிலிருந்து கோவைக்குப் பறந்து வந்தார் சௌந்தர். பூங்கொடியின் இமெயில் முகவரி மட்டுமே அவரிடம் இருந்ததால் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாமல், அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்து மெயில்கள் அனுப்பினார். ஆனால் பூங்கொடி சந்திப்பைத் தவிர்த்து வந்தார்.
இந் நிலையில் சௌந்தரின் கனடா நண்பர்கள் அவரைத் தொடர்பு கொண்டு பூங்கொடியின் புகைப்படம் நடிகை அசினுடைய புகைப்படம் என்பதைத் தெரிவிக்கவே அதிர்ச்சி அடைந்தார் சௌந்தர். இதுகுறித்து கோவை போலீஸில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி பூங்கொடியைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். ஊனமுற்ற பெண்ணான பூங்கொடி ஏற்கனவே ஒருவரை வேறு வகையில் ஏமாற்றித் திருமணம் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கனடாவில் இருந்து சௌந்தர் அனுப்பி வைத்த பல விலை உயர்ந்த பொருட்களை பூங்கொடியிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>