Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
for testing
#15
வணக்கம் ஆதீபன்,
உங்கள் ஆதங்கங்கள் நிறைவேற வேண்டும்.அதுவே என் வாழ்த்துகள்.வெகு விரைவில் தமிழகத்தில் உங்களை சந்திப்பேன் என நம்புகிறேன்.நான் சென்னையில் வாழ்ந்த காலத்தில் திரைப்பட மாணவர்களான என் நண்பர்கள் சிலர் திரை நட்சத்திரம் என்ற சினிமா இதழை வெளியிட்டு வந்தார்கள். அத்தோடு திரைப்பட பயிற்சி வகுப்புகளையும் நடத்தினார்கள். அவர்களில் சிலர் சினிமா மற்றும் தொலைக் காட்சிகளில் கோலோச்சுகிறார்கள். சிலர் வாய்ப்பில்லாமலும் இருக்கிறார்கள். தேவைப்படின் சிலரது தொடர்புகளை தர முடியும்.உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி தொடர்புகளை எழுதுங்கள்.

உங்கள் சஞ்சிகை பற்றி பேசியிருக்கிறேன்.முதல் பிரதி என் கைக்கு வந்த பின்னர் முடிவு சொல்கிறேன். நிச்சயம் முடிந்ததை உதவுவேன்.

நான் இந்தியாவில் இருக்கும் போது கையில் பணமிருந்தும் உங்களைப் போல் மனதால் மிகவும் சிரமப்பட்டவன். எனக்கு உங்களைப் போன்றவர்களின் மன உளைச்சல் புரியும்.

நீங்கள் எதிர்பார்க்கும் இடத்தை விட்டு வேறெங்காவது கூட அந்த எண்ணம் நிறைவேறலாம். நான் கூட இங்கு சுவிசின் German மொழி படைப்புகளில்தான் பங்கு கொள்ள முடிகிறது. தமிழில் என் ஆதங்கத்துக்காக ஏதோ ஒரு சில குறும்படங்களை உருவாக்குகிறேன். அவை ஒரு சில பரிசுகளையும் , பாராட்டுகளையும் பெறுவதோடு சரி. அதனால் ஒரு சதமும் வராது.என் படைப்புகளில் வேலை செய்பவர்கள் இலவசமாக வேலை செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் அவர்களை பாவிப்பது தவறு. எமது படைப்புகளுக்கு இங்குள்ள தமிழ் ஊடகங்கள் கூட ஒரு சதமும் தருவதில்லை.

அது மட்டுமல்ல எமது படைப்புகள் உருவாக வேண்டும் என்று பலர் பேசுவதோடு நின்பவர்களே தவிர அதைப் பார்ப்பவர்களில்லை. எனவே இவற்றின் தாக்கம் கொண்டவன் என்ற காரணத்தால் சொல்கிறேன்.இவை அலச வேண்டிய பெரியதொரு விடயம்.................

எனவே திட மனதுடன் ஒருநாள் என் எண்ணங்கள் நிறைவேறும் என்று Posative ஆக நினையுங்கள். நிச்சயம் உங்கள் எண்ணங்கள் எங்கோ ஓரிடத்தில் நிச்சயம் நிறைவேறும்.

வாழ்த்துகளுடன்
AJeevan
www.ajeevan.com

நீ வென்றால் உலகமே உன்னோடு நிற்கும், அதுவரை நேர்மையுடன் போராடு.ஒரு நாள் நிச்சயம் நீ வெல்வாய்........... உலகம் உன்னைப் போற்றும்.........
-அஜீவன்
Reply


Messages In This Thread
for testing - by aathipan - 10-21-2003, 07:45 PM
[No subject] - by yarl - 10-21-2003, 08:32 PM
Re: for testing - by AJeevan - 10-22-2003, 12:40 AM
[No subject] - by Paranee - 10-22-2003, 05:16 AM
[No subject] - by இளைஞன் - 10-22-2003, 08:29 AM
ithayam kanintha nanri - by aathipan - 10-23-2003, 03:15 AM
[No subject] - by Paranee - 10-23-2003, 05:33 AM
[No subject] - by Kanakkayanaar - 10-23-2003, 05:41 AM
[No subject] - by kuruvikal - 10-23-2003, 12:03 PM
[No subject] - by aathipan - 10-27-2003, 03:43 AM
[No subject] - by aathipan - 10-27-2003, 04:30 AM
[No subject] - by Paranee - 10-27-2003, 05:27 AM
[No subject] - by Kanakkayanaar - 10-27-2003, 06:53 AM
[No subject] - by shanmuhi - 10-27-2003, 08:01 AM
[No subject] - by AJeevan - 10-27-2003, 09:29 AM
[No subject] - by வலைஞன் - 10-27-2003, 12:45 PM
[No subject] - by aathipan - 10-27-2003, 07:15 PM
[No subject] - by AJeevan - 10-27-2003, 11:57 PM
[No subject] - by Aalavanthan - 01-09-2004, 06:16 PM
[No subject] - by aathipan - 01-11-2004, 12:23 PM
[No subject] - by Guest - 01-20-2004, 11:20 AM
[No subject] - by Eelavan - 01-28-2004, 09:59 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)