Yarl Forum
for testing - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: for testing (/showthread.php?tid=7952)

Pages: 1 2


for testing - aathipan - 10-21-2003

tzf;fk;


- yarl - 10-21-2003

http://www.yarl.com/forum/viewtopic.php?p=10742#10742


Re: for testing - AJeevan - 10-22-2003

aathipan Wrote:வணக்கம்

<img src='http://www.ekkcom.com/A10mail.gif' border='0' alt='user posted image'>

வணக்கம் ஆதீபன்.

புதிதாக களத்துக்குள் சென்னையிலிருந்து வந்திருக்கிறீர்கள். மனநிறைவோடு உங்களை கள நண்பர்களுடன் வரவேற்பதில் மகிழ்ச்சி.

உங்கள் எழுத்து தமிழில் வராமல் இருந்தது.
இது புதியவர்களுக்கு பிரச்சனையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. களத் தலைமை கொடுத்துள்ள இப் பகுதியைக் கிளிக் செய்யுங்கள்:-

http://www.yarl.com/forum/viewtopic.php?p=10742#10742

முழு விபரமும் விளக்கப்பட்டுள்ளது.இவ் வழிகாட்டல், அதிகமான நண்பர்கள் கலந்து கொள்ள வழி வகுக்கும்.

அன்புடன்
-அஜீவன்

[scroll:7a9b2f1671][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்


- Paranee - 10-22-2003

வணக்கம் ஆதிபன்
தங்கள் வரவு நல்வரவாகுக

அருகிலிருந்தும் தொலைவிலிருந்த நீங்கள் இன்று அருகில் வந்தது மிக சந்தோசம்.
தங்கள் ஆக்கங்களை ஆவலுடன் எதிர்பார்த்தவண்ணம்


- இளைஞன் - 10-22-2003

வாரீர்! தோழரீர்!
நலமா? எனக்கேட்டு நலமோடு களமாட
வரவேற்றோம் வாரீர்!
பலமாய் கருத்துரைத்து தரமாய்க் களமுயர்த்த
வாரீர்! வரவேற்றோம்!


ithayam kanintha nanri - aathipan - 10-23-2003

Ennai varaveeta en anbu nenjankaluku en anbana vanakkankal.

pujalil sikiya aalilai pola poril sitharundu thaimannai vidu enkoo thavikum en poonravarkalai meendum onrinaika intha valaithhalam perithum uthavaukirathu. intha puthu muyatchiyai paradiye aaka veendum.

viraivil nanum tamilil eluthuveen. appothu innum virivaka nam pesalam.

anbudan
unkalil oruvan

siva aathipan


- Paranee - 10-23-2003

வருக நண்பரே
என்றும் நாம் பிரிந்ததில்லை. தாய்மொழி ஒன்று எமக்கு உள்ளவரை என்றும் நான் அனாதைகளும் இல்லை உறவு அறுவதுமில்லை. தங்கள் தமிழ் எழுதும் முயற்சி வெற்றியடைய வாழ்த்தக்கள்

நட்புடன் உங்கள்
பரணீதரன்
Quote:Ennai varaveeta en anbu nenjankaluku en anbana vanakkankal.

pujalil sikiya aalilai pola poril sitharundu thaimannai vidu enkoo thavikum en poonravarkalai meendum onrinaika intha valaithhalam perithum uthavaukirathu. intha puthu muyatchiyai paradiye aaka veendum.

viraivil nanum tamilil eluthuveen. appothu innum virivaka nam pesalam.

anbudan
unkalil oruvan

siva aathipan



- Kanakkayanaar - 10-23-2003

வருக ஆதிபன், தங்கள் வரவு நல் வரவாகட்டும்.


- kuruvikal - 10-23-2003

சிக்காரச் சென்னையின் சகோதரனே வருக தருக உங்கள் சிந்தனைகளை அழகு தமிழ் கொண்டு என வாழ்த்துகின்றோம்...!


- aathipan - 10-27-2003

அன்புள்ள நன்பர்களே

ஒருவார்த்தை எழுதியதற்கே நீங்கள் இத்தனை அன்பு மடல்களை வரைந்து குவித்துவிட்டீர்கள். அவையெல்லாம் இன்னும் நான் எழுத எனக்கு நீங்;கள் தந்த ஊக்கங்கள்.

தமிழில் இங்கே என்னாலும் எழுத முடிவது மிகுந்த மகிழ்;ச்சிஅளிக்கிறது. விட்டுப்போன என் அன்னையின் பாச அணைப்பு மீண்டும் கிடைத்ததுபோல்.

எல்லாவாற்றிற்க்கும் மேலாக மோகன் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். மிகச்சாதாரண உறுப்பினன் ஆன என் அடிப்படை சந்தேகங்களுக்கு எல்லாம் சலிக்காமல் பதில் அளித்து நான் கேட்காவிட்டால் கூட மடல் அனுப்பி தமிழில் இங்கே நான் எழுதுவதில் உள்ள பிரச்சனை தீர்ந்து விட்டதா என கேட்டு ஆலோசனை தந்தார்.


யாழ் வாழ்க அதன் சேவைகள் வளர்க.

அன்புடன்
ஆதி


- aathipan - 10-27-2003

என்னைப்பற்றி நான் இன்னும் சொல்லாதது. முகமூடி போட்டுக்கொண்டு கை குலுக்குவது போல இருக்கிறது.

என்னை நானே இங்கே சின்னதாக அறிமுகம் செய்துகொள்கிறேன்.

நான் யாழ்பாணத்தைச்சேர்ந்தவன். யாழ் மத்திய கல்லூரியில் பயின்று பின் அகதியாக இந்தியா வந்து எனது கல்வியைத்கேடர்ந்தேன். இராமகிஸ்ண மடத்தின் விவேகானந்தர் கல்லூரியில் என் பட்டப்படிப்பை முடித்தேன். இப்போது கணனி ஓவியனாக பணியாற்றுகின்றேன். இந்தியத் தமிழ் மக்களுடன் தினமும பழகுகின்றேன். அவர்கள் அன்பானவர்கள். எம்மேல் பாசம் கொண்டவர்கள். நான் அரசியல் வாதிகளை சொல்லவில்லை.

பதின்மூன்று வருடங்கள் ஆகிவிட்டன நான் இந்தியா வந்து. எதையும் நான் இதுவரை சாதிக்க வில்லை இங்கு.

என் நன்பனுடன் சேர்ந்து ஒரு மாத இதழை ஆரம்பிக்க உள்ளேன். அதன் பெயர்தான் லைடஸ்ஆன். இதை இந்த மார்கழியில் மலேசியாவில் வெளியிடுகின்றோம்.

விரைவில் டிவைன் என்று ஒரு மாத இதழையும் ஆரம்பிக்க உள்ளோம். இந்து மத ஆண்மிக மாத இதழ்.

இனி நான் இங்கே தெரிந்தவானாகி விடுவேன் என் நம்புகின்றேன்.

அன்புடன்
ஆதி


- Paranee - 10-27-2003

தெரிந்தவன் இல்லை புரிந்தவர்
மக்கள் மனதறிந்தவர் வாழ்க வளர்க உங்கள் பணி
இன்னமும் எனக்குள் ஏக்கம் என்னதான் செய்துகொண்டேன் நான் பிறந்தமண்ணிற்காய்.

புலம்பெயர்ந்தும் தமிழின் புகழ்பரப்பும் உங்கள் பணி இன்னமும் வளரட்டும்.
கணனி ஓவியனே
இங்கு காட்டு உன் கைவரிசையை
உன் கரங்கள் வரைந்ததை
எம் விழிகளும் காணட்டும்.

நட்புடன்
ந.பரணீதரன்


- Kanakkayanaar - 10-27-2003

Quote:பதின்மூன்று வருடங்கள் ஆகிவிட்டன நான் இந்தியா வந்து. எதையும் நான் இதுவரை சாதிக்க வில்லை இங்கு.

என் நன்பனுடன் சேர்ந்து ஒரு மாத இதழை ஆரம்பிக்க உள்ளேன்.

ஆதிபன் அவர்களே,
உஙகள் சாதிக்கவேண்டும் என்ற துடிப்பு எனக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருகிறது. இதை எம்மோடு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. அதோடு உலகம் முழுதும் பரந்து வாழும் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் 'நாமும் ஒரு ஆக்கபூர்வமான சாதனையைச் செய்ய வேண்டும்' என ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன்.
Quote:இந்தியத் தமிழ் மக்களுடன் தினமும பழகுகின்றேன். அவர்கள் அன்பானவர்கள். எம்மேல் பாசம் கொண்டவர்கள். நான் அரசியல் வாதிகளை சொல்லவில்லை.

மற்றும் தமிழகத் தமிழர் எம்மை நேசிக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்கிறேன்.


- shanmuhi - 10-27-2003

வணக்கம் ஆதி,

எதையும் சாதிக்க வேண்டும் என்ற தங்களின் துடிப்பு....வரவேற்கத்தக்கது.
தாங்கள் வெளியிடப்போகும் மாத இதழைப்பற்றி ஏற்கனவே அறிந்துள்ளேன்.
சிறப்புடன் வெளியீட மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பல.............


- AJeevan - 10-27-2003

வணக்கம் ஆதீபன்,
உங்கள் ஆதங்கங்கள் நிறைவேற வேண்டும்.அதுவே என் வாழ்த்துகள்.வெகு விரைவில் தமிழகத்தில் உங்களை சந்திப்பேன் என நம்புகிறேன்.நான் சென்னையில் வாழ்ந்த காலத்தில் திரைப்பட மாணவர்களான என் நண்பர்கள் சிலர் திரை நட்சத்திரம் என்ற சினிமா இதழை வெளியிட்டு வந்தார்கள். அத்தோடு திரைப்பட பயிற்சி வகுப்புகளையும் நடத்தினார்கள். அவர்களில் சிலர் சினிமா மற்றும் தொலைக் காட்சிகளில் கோலோச்சுகிறார்கள். சிலர் வாய்ப்பில்லாமலும் இருக்கிறார்கள். தேவைப்படின் சிலரது தொடர்புகளை தர முடியும்.உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி தொடர்புகளை எழுதுங்கள்.

உங்கள் சஞ்சிகை பற்றி பேசியிருக்கிறேன்.முதல் பிரதி என் கைக்கு வந்த பின்னர் முடிவு சொல்கிறேன். நிச்சயம் முடிந்ததை உதவுவேன்.

நான் இந்தியாவில் இருக்கும் போது கையில் பணமிருந்தும் உங்களைப் போல் மனதால் மிகவும் சிரமப்பட்டவன். எனக்கு உங்களைப் போன்றவர்களின் மன உளைச்சல் புரியும்.

நீங்கள் எதிர்பார்க்கும் இடத்தை விட்டு வேறெங்காவது கூட அந்த எண்ணம் நிறைவேறலாம். நான் கூட இங்கு சுவிசின் German மொழி படைப்புகளில்தான் பங்கு கொள்ள முடிகிறது. தமிழில் என் ஆதங்கத்துக்காக ஏதோ ஒரு சில குறும்படங்களை உருவாக்குகிறேன். அவை ஒரு சில பரிசுகளையும் , பாராட்டுகளையும் பெறுவதோடு சரி. அதனால் ஒரு சதமும் வராது.என் படைப்புகளில் வேலை செய்பவர்கள் இலவசமாக வேலை செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் அவர்களை பாவிப்பது தவறு. எமது படைப்புகளுக்கு இங்குள்ள தமிழ் ஊடகங்கள் கூட ஒரு சதமும் தருவதில்லை.

அது மட்டுமல்ல எமது படைப்புகள் உருவாக வேண்டும் என்று பலர் பேசுவதோடு நின்பவர்களே தவிர அதைப் பார்ப்பவர்களில்லை. எனவே இவற்றின் தாக்கம் கொண்டவன் என்ற காரணத்தால் சொல்கிறேன்.இவை அலச வேண்டிய பெரியதொரு விடயம்.................

எனவே திட மனதுடன் ஒருநாள் என் எண்ணங்கள் நிறைவேறும் என்று Posative ஆக நினையுங்கள். நிச்சயம் உங்கள் எண்ணங்கள் எங்கோ ஓரிடத்தில் நிச்சயம் நிறைவேறும்.

வாழ்த்துகளுடன்
AJeevan
www.ajeevan.com

நீ வென்றால் உலகமே உன்னோடு நிற்கும், அதுவரை நேர்மையுடன் போராடு.ஒரு நாள் நிச்சயம் நீ வெல்வாய்........... உலகம் உன்னைப் போற்றும்.........
-அஜீவன்


- வலைஞன் - 10-27-2003

வணக்கம் ஆதிபன்,

முதல் அடியில் முழுமையாய்க் கவர்ந்திழுத்த உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள். நிறையவே களத்தில் எழுதித் தொடருங்கள்.


- aathipan - 10-27-2003

அஜீவன் உங்கள் அன்பான மடலுக்கு நன்றி.

நான் உங்களை சென்னையில் சந்திக்கும் நாளை ஆவாலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

நான் 5 வருடங்களாக கணனியில் கிராபிக் டிஸைனாராக வேலை செய்து வருகிறேன். இபபோதுதான் இராஜினாமா செய்தேன். நான் ஒரே துறையில் தொடர்ந்து இருக்க முடியவில்லை. ஒரு காலத்தில் 3டி அனிமேசன் செய்தேன். விளம்பரங்களில் அவை பயன்படுத்தப்பட்டு உள்ளன. சிறிது காலம் பிரிண்டிங் செய்ய டிசைன் செய்தேன். கொஞசநாட்கள் வெப்டிசைன் கொஞ்ச நாட்கள் பிரசண்டேசன். ஆனாலும் ஏனோ மழுதிருப்பதி கிடைக்கவில்லை. என்; தொழில் எனக்கு மனநிறைவை தரவேண்டும் என எதிர்பார்பவன். எக்மோர் ஒவியக் கல்லூரியில் ஓவியம் படிக்கஆசைப்பட்டேன். அங்கு நான் ஜாதி அடிப்படையில் தகுதி அற்றவன் எனக்கூறி திருப்பிp அனுப்பிவைக்கப்படடேன். தனபாலிடம் ஓவியம் கற்க சென்;றேன் கொஞ்ச நாள்தான்;. என்;னால் அவரது பணஆசையைப் புூர்த்தி செய்ய முடியவில்லை. வந்துவிட்டேன். கலாச்சோத்திரா ஓவிய ஆசிரியர் சினிவாசலுவிடம் தஞசை ஓவிய்ம் கற்றேன். அவரும் அது போலத்தான். அனால் இந்ந தடவை நடந்தது வேறு கொஞ்ச நாளிலேயே அவர் இறந்து போனார். நான் கண்விழித்து வரைந்த ஓவிங்களை ஒசியில்; வாங்;க தான் எல்லோரும் முன்வந்தனர். வேண்டுமென்றால் பயன்படுத்திய மூலப்பொருட்களுக்கு பணம் தருவதாக சொன்னர்கள். கலை விற்பனைக் கூடங்களில் விற்பனைக்கு வைக்க கேட்டபோது பாதி இலாபம் தனக்கு வேண்டு மென்றார்கள். அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவனுக்கு கணனி கற்கொடுத்தேன் முற்பணம் வாங்காததால் என்க்கு அல்வா கொடுத்து விட்டு பேய்விட்டான். கடைசியில் அவர்கள் உறவினர்களுடன் சண்டை யிட்டு பாதிப்பணம் வாங்கினேன்;. இப்படி பல கதைகள். காதலில் தோற்றுப்போன போது நிறைய கவிதைகள் எழுதினேன். ஏதோ ஒரு இடத்தில் நான் பிழை செய்;கிறேன் இல்லை என்றால் இப்போது சாதித்து இருப்பேன் அல்லவா?

அன்புடன்

ஆதி


நான் நன்றாக டிசைன் செய்கிறேன் என்;று தான் எல்லோரும் சொல்கிறார்கள். ஆனாலும் எப்போதாவது தான்; திருப்பதி வருகிறது. யாருடைய தலையீடடையும் விரும்ப மாடடேன். யாரிடமும் இரந்;து நிற்க மாடடேன். இப்படி எனகுள்ளேயே சில ஏடாகூட குணங்கள். சரி அவை இருக்கட்டும்.


- AJeevan - 10-27-2003

கவலைப் படாதீர்கள் ஆதிபன் , நான் சென்னை வரும் போதோ அல்லது இப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு உங்கள் விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய நண்பர்களைத் தொடர்பு படுத்தி வைக்கிறேன். என்னைப் பற்றி அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.இந்தியாவில் ஏகப்பட்ட இடங்களில் என் நண்பர்கள் இருக்கிறார்கள். தொடர்புகள் இருக்கிறது.ஆனால் 13 வருடங்களாக எவரையும் பார்க்கவில்லை.ஆனால் மாதத்தில் ஓரிரு முறையாவது என்னோடு தொடர்பு கொள்வார்கள்.எல்லாம் நல்லதுக்கு என்று நினையுங்கள்.உங்கள் தனி முகவரிக்கு அவர்களது விபரங்களை அனுப்புகிறேன்.

நிச்சயம் ஒரு நாள் நீங்கள் நிலைத்து நிற்பீர்கள்.
துணிந்து நில் , தொடர்ந்து செல், தோல்வி கிடையாது.......

உங்கள்,
AJeevan


- Aalavanthan - 01-09-2004

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- aathipan - 01-11-2004

visit www.lightsonmag.com