10-27-2003, 06:53 AM
Quote:பதின்மூன்று வருடங்கள் ஆகிவிட்டன நான் இந்தியா வந்து. எதையும் நான் இதுவரை சாதிக்க வில்லை இங்கு.
என் நன்பனுடன் சேர்ந்து ஒரு மாத இதழை ஆரம்பிக்க உள்ளேன்.
ஆதிபன் அவர்களே,
உஙகள் சாதிக்கவேண்டும் என்ற துடிப்பு எனக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தருகிறது. இதை எம்மோடு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. அதோடு உலகம் முழுதும் பரந்து வாழும் அனைத்துத் தமிழ் மக்களுக்கும் 'நாமும் ஒரு ஆக்கபூர்வமான சாதனையைச் செய்ய வேண்டும்' என ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன்.
Quote:இந்தியத் தமிழ் மக்களுடன் தினமும பழகுகின்றேன். அவர்கள் அன்பானவர்கள். எம்மேல் பாசம் கொண்டவர்கள். நான் அரசியல் வாதிகளை சொல்லவில்லை.
மற்றும் தமிழகத் தமிழர் எம்மை நேசிக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்கிறேன்.
-

