08-22-2005, 05:26 PM
Aruvi Wrote:அப்ப என்ன[u] home ministerவானம்பாடி :?: :roll:
ஊர்காவற்படை வீரன்/வீராங்கனை என்பதே சரியானது.
தமிழ் மொழிக்கும் ஆங்கில மொழிக்கும் இலக்கியத்தைப் பொறுத்தவரை பாரிய வித்தியாசம் உண்டு. ஆகவே நீங்கள் தமிழை நேரடியாக ஆங்கிலத்திலோ அல்லது ஆங்கிலத்தை நேரடியாகத் தமிழிலோ மொழிமாற்றம் செய்தீர்கள் என்றால் இவ்வாறன பெறுபேற்றைத்தான் பெறுவீர்கள்.
ஊர்காவல் படை என்றால் INTERNEL FORCES (INNEN KRAEFTE ஜேர்மன் மொழியில்) என்று தான் நான் கேள்விப்பட்டேன் ஆனால் HOME GUARD என்றால் வீட்டுக்காவலாளி இல்லை ஊர்க்காவலன் என்பதே சரி (அதனை ஜேர்மன் மொழியில் HAUPTSCHUTZ என்று சொல்லுவது) ஆனால் இராணுவம் என்பதும் ஓர் ஊர்காவல் படை தான் ஆனால் தேவை ஏற்படும் போது அவர்களை நாட்டுக்கு வெளியேயும் பாவிக்கலாம். ஆனால் ஊர்காவல் படையினர் என்பவர்கள் உள்ளூரில் மட்டும் தான் சேவை செய்யலாம் எல்லைக்கு அப்பாலே அவர்கள் சர்வதேச போர் விதியின் படி செல்ல முடியாது. ஆனால் காவல்த்துறையும் ஒரு ஊர்காவல் படைதான் ஆனால் அவர்கள் உள்ளூர்களில் சாதாரண நிர்வாகத்தினை கொண்டு நடாத்துபவர்களாக திகழ்வர். அவர்கள் தேவையின் நிமித்தம் சிறிய ரக ஆயுதங்களை பாவிக்கலாம். இவர்களும் சர்வதேச போர் விதியின் படி எல்லை தாண்ட முடியாது

