08-22-2005, 04:45 PM
கொலம்பியா நாட்டில் சாலை விபத்துக்கு காரணமான பசுமாடு ஜெயிலில் அடைக்கப்பட்டது.
கிரோன் நகரில் சாலையின் நடுவில் அந்த மாடு சுற்றித்திரிந்தது. அப்போது வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த பெண் அந்த மாட்டின் மீது மோதினார். இதில் அவர் காயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து போலீசார் அந்த மாட்டைக் கைது செய்தனர்.
அந்த மாட்டின் உரிமையாளர்களை கண்டு பிடிக்க முடியாததால் மாட்டை போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.
திருடனைப்பிடித்த 93 வயதுப் பாட்டி
ரஷியாவில் இருந்து பிரிந்த லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த பாட்டி சோஜா போபோவா. 93 வயதான இவர் ஆட்டில் இருந்து பால் கறந்து விற்றுப் பிழைக்கிறார்.
இவர் வீட்டுக்குள் 2 திருடர்கள் நுழைந்தனர். இதைப் பார்த்து விட்ட பாட்டி ஒரு திருடனின் தொடையை கெட்டியாகப்பிடித்துக்கொண்டு கிள்ளினார். இதனால் வலி தாங்கமுடியாத அவன் வேதனையால் துடித்தான். சத்தம் போட்டான் இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
பிடிபட்ட திருடனுடன் வந்த இன்னொரு திருடன் அவனை விடுவித்தான்.2 பேரும் படுக்கை அறை ஜன்னல் வழியாகத் தப்பித்து ஓடினர். ஆனால் அங்கு விரைந்த போலீசார் நடு வழியில் அவர்களை மறித்து கைது செய்தனர்.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............