08-22-2005, 04:14 PM
இத்தொடரில் இடையில் ஆரம்பகாலத்தில் ஆயுதம் ஏந்திய போராளிகளில் ஒருவரான நவாலி இன்பத்தை நான் அறிந்தவன் என்கிற முறையில் அவரை பற்றி சில வரிகள்.
விஸ்வரட்ணம் என்பது இவர் பெயர் எனது மாமாவின் (அம்மாவின் தம்பி) பள்ளி நண்பன். அடிக்கடி மாமாவை தேடி வீட்டிற்கு வருவார் அப்போ சாத்திரி சின்ன பெடியன்.எப்போதும் நகை சுவையாகவும் வேடிக்கையாகவும் பேசிகொண்டேயிருப்பதாலோ என்னவோ அவருக்கு இன்பம் என்ற பெயர் வந்து விட்டது. பொலிசாரிடம் அடிவாங்கவென்றே நல்ல உடற் பயிற்சி செய்த திடகாத்திரமான உடல். சில ஆணழகன் போட்டிகளிலும் பங்கு பற்றி பரிசுகள் வாங்கியிருந்தார்.துரையப்பா ஒவ்வொரு ஞாயிறும் மானிப்பாய் அந்தோனியார் கோயிலுக்கு வருவது வழமை எனவே துரையப்பாவை மானிப்பாயில் வைத்து முடிப்பேன் என்ற சபதம் செய்து திரிந்தவர்.ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை.பின்னர் பஸ்தியாம் பிள்ளையையும் குறிவைத்து திரிந்தவர் . 1979ம் ஆண்டு ஆடி மாதம் ஜே ஆர் அரசினால் கொண்டுவரப்பட்ட அவசர கால சட்டத்தை பயன் படுத்தி பலதமிழ் இளைஞர்கள் கொல்ல பட்டது போலவே இன்பமும் ஆனைக்கோட்டை பொலிஸ் இங்ஸ்பெக்ரர் கருணாரத்தினாவினால் கைது செய்யபட்டு அடித்து கொலை செய்து விட்டு மானிப்பாய் வீதியில் எறிந்து விட்டார்கள். அவரது முகம் அடையாளம் காண முடியாத அளவு சிதைத்திருந்ததாக பாத்தவர்கள் கூறினார்கள்.

<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/