Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருவூலம் கவனிப்பாரற்றுப் போகலாமா..??!
#1
ஒருவருடைய வாழ்க்கையில் கருவறை தொடக்கம் கல்லறை வரை என்றும் நினைவு கூரப் படவேண்டியவர்கள் பெற்றோர்கள். தன் உயிரிலும் மேலாக இன்னொரு உயிரை மதித்து, பாலூட்டிச் சீராட்டி வளர்த்தவள் எம் அன்னை. எமது வளர்ச்சியில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் எம் தந்தை. இதனால் தான் ஒளவையாரும் மஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள் என்று பாடினார். எனவே அன்னையும், பிதாவும் தெய்வத்துக்குச் சமமாக மதிக்கப்பட வேண்டியவர்கள்.

ஆனால் இன்றைய சமூகத்தில் பெற்றோருக்குக் கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் எந்தளவு என்று பார்ப்போ மேயானால், அது இல்லையயன்று தான் சொல்ல வேண்டும். ஒரு பிள்ளையைப் பெற்று வளர்ப்பதில் அளவற்ற துன்பங்களை அனுபவிக்கிறார்கள் பெற்றோர்கள். ஆனால் அந்தப் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களான வுடன் என்ன செய்கிறார்கள்? ஒரு சிலரைத் தவிர, ஏனையோர்கள் பெற்றோரைத் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை.

ஆண்களாயினும் சரி, பெண் களாயினும் சரி வாலிப வயதை அடைந்தவுடன் இனி எங்களுக்கு பெற்றோரது அன்பு, ஆதரவு, உதவிகள் எல்லாம் தேவையில்லை எனத் தப்பாக நினைத்துக் கொள்கிறார்கள். அதிலிருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து திருமணம் என்ற பந்தத்துள் நுழைந்துவிட்டவுடன், பெண்கள் தமது கண வன்மாரின் சொல்லைத் தாரக மந்திரமாக எடுத்துக் கொள்வதும், மாறாகக் கணவன் - மனைவியின் பேச்சைத் தட்ட முடியாதவனாகி செயற்படுவதனாலும், பெற்றோர்களை இவர்கள் அடியோடு மறந்து விடுகிறார்கள். தாங்கள் இருவருமே இந்தச் சமூ கத்தின் ஜாம்பவான்கள் என தப்புக்கணக்குப் போட்டுக் கொள்கிறார்கள். இருந்தும் தம் பெற்றோரை இரு கண்களாக மதிக்கும் பிள்ளை களும் எங்கள் சமூகத்தில் இல்லாமல் இல்லை.

அன்பையும், பாசத்தையும் ஊட்டி ஊட்டி வளர்த் தவர்கள் இன்று அநாதர வானநிலையிலே காலத்தைப் போக்கும் நிலை எமது சமூகத்திலே காணப்படுகிறது. மமுதுமைடு என்பதை இன்றைய இளைஞர்கள் வேண்டாப் பொருளாகவே பார்க்கிறார்கள். மகிழடுடு என்று அநாகரிக வார்த்தையால் நச்சரித்து வருகின்றனர். இந்த நிலை இன்றைய சமூகத்தில் ஆண்பிள்ளைகளிடம் மட்டு மல்ல, பெண்பிள்ளைகளிடமும் காணப்படுகிறது. முதுமையின் தார்ப்பரியங்களை அறியாத இவர்கள் - தங்கள் பெற்றோர்களை மூலையில் கிடக்கவும் வைக்கிறார்கள்.

இத்தகைய காரணங்களால் தானோ, என்னவோ நாட்டில் வயோதிபர் இல்லங்களும் அதிகரித்துவிட்டன. அங்கு வாழும் முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

அண்மையில் கைதடிப்பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்துக்கு விசேட செயற்திட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்காகச் செல்லும் வாய்ப்புக்கிட்டி யது எனக்கு. அதில் நான் பார்த்து அனுபவித்த சில சம்பவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

இன்றைய உலகம் பல துறைகளில் வளர்ந்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. இதனை நாம் கண்களூடாகப் பார்த்தும், அனுபவித்தும் வருகிறோம். ஆனால் மனிதர்களது மனங்களும் ஏன் இப்படி மாறி விட வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. பத்துமாதம் கருவறையில் சுமந்து பாலூட்டிச் சீராட்டி எம்மை வளர்த்து எடுத்த தாயையும் தந்தையையும், மறந்து விட்டார்களே இந் தக்கல் நெஞ்சம் படைத்தவர்கள். இதனை நினைத்தால் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது மாதிரி இருக்கிறது. ஏன் அன்பு பாசம், கருணை, இரக்கம் எல்லாம் இவர்களது பிள்ளைகளுக்கு இல்லையா?

இந்த முதியோர் இல்லத்தில் எண்பதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் காணப்படுகிறார்கள். ஆண், பெண் என இருபாலாரும் இதனுள் அடங்குகின்றனர். சாதி, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் சமமாகவே மதிக்கப்படுகிறார்கள். இவர்களில் பெரும் பாலானோர் தங்கள் பிள்ளை களாலேயே கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள். பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில், சமூகத் தவர்களால் கொண்டுவந்து சேர்க் கப்பட்டவர்களும் அடங்குகின்றனர்.

இவர்களுக்குத் தேவையான சகல வசதி வாய்ப்புகளும் இங்கு வழங்கப்படுகிறது. நேரத்துக்குச் சாப்பாடு, அன்பான பராமரிப்பு, அவரவர் மத வழிபாட்டுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள், பொழுது போக்குக்கு மரச் சோலைகள், பூஞ்சோலைகள் நிறைந்த இடங் கள் என்பன காணப்படுகின்றன. இவை என்னதான் இருந்தும் இவர்களது முகத்தில் ஒரு வித ஏக்க உணர்வு எந்தநேரமும் தென் படுவதை என்னால் உணர முடிந்தது. ஏதோ ஒன்றை நினைத்து ஏங்குபவர்களாகவே இவர்கள் காணப்படுகிறார்கள். தம் பிள்ளைகளுடன் கூடியிருந்து வாழ்வை அனுபவிப்பதில் கிடைப்பது போன்ற உளரீதியான திருப்தி இவர்களுக்குக் கிடைக்குமா? நிச்சயமாக இல்லை.

தம் உயிரிலும் மேலான இனிய உறவுகளை எண்ணி, வழி மேல் விழி வைத்து நுழைவாயிலைப் பார்த்தபடி இருக்கிறார்கள். யார் தான் இவர்களுக்கு ஆறுதல் கூறுவது. ஒரு மூதாட்டி யினது உளரீதியான ஏக்கம்! எனக்கு இரண்டு மகன்மார். மூத்தவர் கனடாவில் இருக்கிறார். இரண்டாவது மகன் யாழ்ப்பாணத்தில் தான். கல்யாணம் செய்து கொடுத்த கையோட என்னைக் கொண்டு வந்து இங்க விட்டிட்டார். இங்க வாறதும் இல்லை. பார்க்கிறதும் இல்லை. அவர் வந்து இண்டைக்கு ஒன்றரை வருசமாச்சுது. பணம் இருந்தும் என்ன தம்பி! என பெருமூச்சு விட்டு அழுகிறார். பாருங்கள் இந்தப் பெற்றோரது பிள்ளைகளை. யார் இவர்களிடம் போய் நியாயம் கற்பிப்பது.

இதே போல இன்னொரு வயோதிபர் இப்படிக் கூறுகிறார் - எனக்கு ஒரேயயாரு மகன். அவன் விரும்பி மருமகள் ஒன்றைக் கூட்டிக்கொண்டு வந்தான். நானும் வெளிக்கிட்டு இஞ்சை வந்திட்டன் என நகைச்சுவையாக தனது கதையைக் கூறி முடித்தார். இப்படி அங்கு வாழும் முதியவர்கள் ஒவ்வொருவரதும் வாழ்க்கையின் துயரச்சம்பவங்கள் ஏராளம் எராளம்.

இங்கு வசிக்கும் முதியவர் களைப் பிள்ளைகள் சுமைகளாக நினைத்துவிட்டார்கள் போலத் தெரிகிறது. இப்படியாகப் பிள்ளைகளால் வெறுத்தொதுக்கப்பட்ட நிலையில்க் கூட பிள்ளைகளின் அன்பு, பாசத்துக்காக ஏங்குபவர்களாகவே இவர்கள் காணப்படுகிறார்கள். உணவருந்தும் வேளையிலும், பொழுதைக் கழிக்கும் நேரங்களிலும் சில பெற்றோர்கள் பிள்ளைகளை நினைத்து அழுகிறார்கள். சிலர் தனியாக இருந்து சிரிக்கிறார் கள். ஏன் இவர்களுக்கு இந்த நிலை. மாறாக பிள்ளைகளை ஏன் திட்டித்தீர்க்கவில்லை. அன்பு, பாசம் என்பது பெற்றோருக்கு மட்டும் தானா? பிள்ளைகளிடம் இல்லையா? என எண்ணத் தோன்றுகிறதல்லவா.

இங்கு வாழும் முதியவர்களது பிள்ளைகள் எல்லோரும் உயர் தொழில் பார்ப்பவர்களும், உயர்ந்த வருமானம் உடையவர் களுமே. ஏன் இவர்கள் தங்கள் பெற்றோர்களைக் கவனிக்க வில்லை. தன்னிடம் உள்ள பணம் முழுவதையும் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக செலவளித்த இவர்களுக்கு - விமோசனம் என்பது முதியோர் இல்லமா? இவர்களது தேவைகள் எல்லாம் இங்கு நிறை வேற்றப்பட்டாலும் அன்பு, பாசம் போன்ற உளத் தேவை களை வேறு யாராலும் வழங்க முடியுமா?

தன்னிடம் உள்ள உதிரத்தையே பாலாகச் சொரிந்த அன்னைக்கு நாம் உதவாக்கரைகளாகச் செயற்படுவது எந்த வகையில் நியாயம். தன் பிள்ளைகளை சமூகத்தின் நற்பிரஜைகளாக வளர்த்த அன் னைக்கும், தந்தைக்கும் கிடைத்தது வெறும் கானல் நீர் போன்ற வாழ்க்கையே. இதனை இன்றைய இளையவர்களே உங்கள் சிந்தையில் எடுத்துச் சிந்தித்துப்பாருங்கள்.

இவைகள் அனைத்தும் இன்றைய பெற்றோர்களுக்கும் நற் பாடமாக அமைந்து கொள்ளட்டும். நிகழ்காலப் பெற்றோரே உங்கள் எதிர்கால வாழ்க்கையின் நலனைக் கருத்திற் கொண்டு, உங்கள் பிள்ளைகளின் ஆடம்பரமான வாழ்க்கைக்காகச் செலவழிப்பதை விடுத்து, உங்களதும், உங்கள் பிள்ளைகளதும் எதிர்காலம் நோக்கிச் சிந்தித்துப் பாருங்கள். அது மட்டுமன்றி உங்கள் பிள்ளைகளோடு நீங்களும் ஒரு தடவை முதியோர் இல்லம் சென்று வாருங்கள். ஏனெனில் இனியும் எமது சமூகத்தில் முதியோர் இல்லங்கள் பல தோன்றாமல் இருக்க வேண்டும்.

ஈழநாடு - சூரியன்.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
கருவூலம் கவனிப்பாரற்றுப் போகலாமா..??! - by kuruvikal - 08-22-2005, 02:32 PM
[No subject] - by MUGATHTHAR - 08-22-2005, 08:07 PM
[No subject] - by adsharan - 08-23-2005, 09:11 AM
[No subject] - by tamilini - 08-23-2005, 09:41 AM
[No subject] - by vasisutha - 09-04-2005, 12:59 PM
[No subject] - by MUGATHTHAR - 09-04-2005, 07:46 PM
[No subject] - by Mathan - 09-05-2005, 04:26 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)