08-21-2005, 09:00 PM
<b>கதிர்காமர் கொலை விசாரணைக்கு வெளிநாட்டு உதவி பெறுதல் தொடர்பில் இறுதி முடிவில்லை பொலிஸ் மாஅதிபர் தெரிவிப்பு</b>
(கிருஷ்ணி கந்தசாமி)
அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பான விசாரணைகளில் உதவுவதற்கு பிரிட்டனும், அமெரிக்காவும் இணக்கம் தெரிவித்துள்ளன.அந்நாடுகளின் உதவியை பெற்றுக் கொள்ளும் விடயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனினும் அது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடையவர்களை விரைவாக கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுஅள்ளார்.
இதேவேளை, தலைநகரில் திடீர் சுற்றி வளைப்பு தேடுதல்களை படையினர் மேற்கொண்டு வருகின்ற போதிலும், இக்கொலையின் பின்னணியில் செயற்பட்டவர்கள் குறித்து எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-Veerakesari