08-21-2005, 02:46 PM
<img src='http://img399.imageshack.us/img399/7544/sonia0qv.jpg' border='0' alt='user posted image'>
சொல்வாயா சொல்வாயா என ஏங்கினேன்
சொல்லவா சொல்லவா எனவும் ஏங்கினேன்
சொல்லச்சொல்லி சொல்லும் மனம்...
சொல்லாதே என தடுக்கும் மறு கணம்...
சொல்ல வந்த சொற்கள் எல்லாம்..
சொல்லாமலே ஓடி விட்டன
சொல்ல வந்த கணங்கள் எல்லாம்..
சொல்லி விட்டு போய் விட்டன
சொல்லி விட்டேன் நூறு முறை கண்ணாடி முன்
சொல்ல முடியவில்லை ஒரு முறை உன் முன்னாடி...
சொற்கள் தேடி..சொற்தொடர்கள் ஆக்கி
சொல்லும் கணம் தேடி..சொல்ல வெண்டியவரைத்தேடி
சொல்வதற்காய் ஓடி வந்தேன்...........
சொல்லத்தொடங்க சொன்னாய் நீ......
சொல்ல வேண்டியதை எல்லாம்...நான்..
சொல்ல முடியாத நிலை...
சொந்தம் என்று நாம் ஆக
சொர்க்கம் சென்று நாம் வாழ
சொந்தங்கள் ஏற்காத நிலைமை
சொர்க்கமும் நம்மை அழைக்காத நிலை
சொன்னாய் ஒரு முறை ஜாடையாய்
சொல்ல நான் துடித்தது போல் நீயும் துடித்ததாய்...........
சொல்லி விட்டார்கள் மனது நோகும் படி
சொல்லித்தான் இனி என்ன.....
சொல்லாமல் விட்டுத்தான் என்ன....
சொல்லி விட்டாய் நீ....
சொர்க்கம் காணும் நினைப்பு வேண்டாம் என்று
சோர்ந்து விட்டேன் நான்
சோராதே என்றாய்.....
சோகம் என் நெஞ்சில் குடியே கொண்டு விட்ட நிலை
சோகமும் வேண்டாம் என்றாய்.....
சோகம் கொள்ளாமல் நீ மட்டும்...எப்படி...
சோடியாய் வந்தாய் உன் நண்பருடன்
சோகமாய் பார்த்தாய் ஒரு புன்னகையுடன்
சோர்வதாய் நான் நடிக்கவில்லை
சொந்த நிலையும் நீ அறியாமல் இல்லை
சொர்க்கம் என் கண் முன்னாடியும் இல்லை
சொல்லி அழைக்கும் தூரத்திலும் இல்லை
சொல்லாமல் நான் அழைக்கப்போவதும் இல்லை
சொல்லி அதுவாய் எனை சேரப்போவதும் இல்லை
சொன்னாலும் சொல்லாவிட்டிலும்...நீ தந்த
சொந்தம்.................அது இவள் வாழ்வில்
சொல்லில் அடங்காத இன்பம்...
சொல்லி முடியாத பந்தம்..........................
சொல்வாயா சொல்வாயா என ஏங்கினேன்
சொல்லவா சொல்லவா எனவும் ஏங்கினேன்
சொல்லச்சொல்லி சொல்லும் மனம்...
சொல்லாதே என தடுக்கும் மறு கணம்...
சொல்ல வந்த சொற்கள் எல்லாம்..
சொல்லாமலே ஓடி விட்டன
சொல்ல வந்த கணங்கள் எல்லாம்..
சொல்லி விட்டு போய் விட்டன
சொல்லி விட்டேன் நூறு முறை கண்ணாடி முன்
சொல்ல முடியவில்லை ஒரு முறை உன் முன்னாடி...
சொற்கள் தேடி..சொற்தொடர்கள் ஆக்கி
சொல்லும் கணம் தேடி..சொல்ல வெண்டியவரைத்தேடி
சொல்வதற்காய் ஓடி வந்தேன்...........
சொல்லத்தொடங்க சொன்னாய் நீ......
சொல்ல வேண்டியதை எல்லாம்...நான்..
சொல்ல முடியாத நிலை...
சொந்தம் என்று நாம் ஆக
சொர்க்கம் சென்று நாம் வாழ
சொந்தங்கள் ஏற்காத நிலைமை
சொர்க்கமும் நம்மை அழைக்காத நிலை
சொன்னாய் ஒரு முறை ஜாடையாய்
சொல்ல நான் துடித்தது போல் நீயும் துடித்ததாய்...........
சொல்லி விட்டார்கள் மனது நோகும் படி
சொல்லித்தான் இனி என்ன.....
சொல்லாமல் விட்டுத்தான் என்ன....
சொல்லி விட்டாய் நீ....
சொர்க்கம் காணும் நினைப்பு வேண்டாம் என்று
சோர்ந்து விட்டேன் நான்
சோராதே என்றாய்.....
சோகம் என் நெஞ்சில் குடியே கொண்டு விட்ட நிலை
சோகமும் வேண்டாம் என்றாய்.....
சோகம் கொள்ளாமல் நீ மட்டும்...எப்படி...
சோடியாய் வந்தாய் உன் நண்பருடன்
சோகமாய் பார்த்தாய் ஒரு புன்னகையுடன்
சோர்வதாய் நான் நடிக்கவில்லை
சொந்த நிலையும் நீ அறியாமல் இல்லை
சொர்க்கம் என் கண் முன்னாடியும் இல்லை
சொல்லி அழைக்கும் தூரத்திலும் இல்லை
சொல்லாமல் நான் அழைக்கப்போவதும் இல்லை
சொல்லி அதுவாய் எனை சேரப்போவதும் இல்லை
சொன்னாலும் சொல்லாவிட்டிலும்...நீ தந்த
சொந்தம்.................அது இவள் வாழ்வில்
சொல்லில் அடங்காத இன்பம்...
சொல்லி முடியாத பந்தம்..........................
..
....
..!
....
..!

