Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சிந்தனைகள்!
#4
* நன்றாக வாழ வேண்டுமானால், முன் கூட்டியே திட்டமிடுங்கள். —நெப்போலியன்.

* வெற்றிகளை சந்திக்க விரும்பினால், உடனே இடையூறுகளுக்கு தீர்வு காணுங்கள். —எல்லீஸ்.

* தைரியமாக இருக்க வேண்டுமானால் பொய் சொல்லாதிருங்கள். —ஹெர்பர்ட்.

* சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை; காலம், சோம்பேறிகளை மதிப்பதில்லை. —காந்திஜி.

* முட்டாள், ராஜ உடை அணிந்தாலும் முட்டாள் தான். —பல்வெர்.

* குணத்தில் மிக உயர்ந்தவனும், அடிமட்டத்தில் இருப்பவனும் மாறவே மாட்டார்கள். —கன்பூஷியஸ்.

* துணிவு இல்லையேல் வாய்மை இல்லை; வாய்மை இல்லையேல், பிற அறங்களும் இல்லை. —காந்திஜி.

* ஆசைகளை அடக்க முடியாத தனி சுதந்திரம் அழிவையே அளிக்கும். —கதே.

* அன்பு குறைந்த இடத்தில், குற்றங்கள் பெரிதாகத் தோன்றுகின்றன. —பிரதர்டன்.

* அளவற்ற உழைப்பைத்தான் மேன்மை என்கிறோம். —லாங்பெல்லோ.

* எல்லாவிதமான தவறுகளுக்கும் அடிப்படை காரணம் அகங்காரம். —ரஸ்கின்.

* தேகத்தை உழைப்பு தீயில் புடமாக்கு; எதிர்காலம் தங்கமாய் மின்னும். —இங்கர்சால்.

* பிறர், உங்களை புகழ வேண்டும் என்பதற்காக மட்டும் தானம் செய்யாதீர். —இயேசு கிறிஸ்து.

* தன்மானம், தன்னிறைவு, தன்னடக்கம் இம்மூன்றும் வாழ்க்கையில் தலைசிறந்த ஆற்றலை அளிக்கக் கூடியவை. —டென்னிசன்.

* விரைவில் உயர்ந்த நிலைக்கு வருவது பெரிதன்று, எப்போதும் உயர்நிலையில் இருக்க வேண்டும். அதுவே பெரிது. —இப்தார்ச்.

* ஊக்கத்துடனும், நம்பிக்கையுடனும் உழைப்பவர்களுக்கு உடல் நலமும், மகிழ்ச்சியும், திருப்தியும் ஏற்படும்.
—சிம்மன்ஸ்

* நமது நாட்டின் தொன்மை, முன்னோர் வரலாறு, நாகரிகம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டியது இளைஞர்களின் முதல் கடமை. —திரு.வி.க.,

* உண்மையான சுதந்திரம் என்பது நம் உரிமைகளை நாம் அனுபவிக்கும் உரிமையாகும். பிறருடைய உரிமைகளை அழிப்பதன்று. —பிங்கார்ட்.

* பெரிய வல்லரசுகள் சிறு நாடுகளின் சுதந்திரத்தில் தலையிடுவதை நிறுத்தும் வரை உலகத்தில் அமைதி ஏற்படாது. —லிங்கன்.

* எவரைப் பார்க்கும் போது இறைவன் நினைவு வருகிறதோ, அவர்தான் ஆண்டவனின் அடியார்களில் சிறந்தவன். —ரூமி.

நன்றி: தினமலர்
[i][b]
!
Reply


Messages In This Thread
சிந்தனைகள்! - by சாமி - 10-21-2003, 08:56 PM
[No subject] - by Kanakkayanaar - 10-23-2003, 09:15 AM
[No subject] - by kuruvikal - 10-23-2003, 11:11 AM
[No subject] - by சாமி - 10-25-2003, 07:52 PM
[No subject] - by சாமி - 10-29-2003, 08:33 PM
[No subject] - by சாமி - 11-16-2003, 06:07 PM
[No subject] - by சாமி - 11-22-2003, 11:10 PM
[No subject] - by சாமி - 01-02-2004, 01:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)