08-21-2005, 02:26 PM
படுகொலை செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மனைவி சுகந்தி கதிர்காமரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டதையடுத்து ஏற்பட்டுள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்தை கருத்தில் கொண்டே இந்த விடயம் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.
இதற்கு அவர் இணங்கும் பட்சத்தில் அமைச்சர் பதவியொன்றும் அவருக்கு வழங்கப்பட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் அரசுத் தலைவர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது இதன் மூலம் கட்சிக்கு அனுதாப வாக்குகளை திரட்ட முடியும் என்ற நம்பிக்கை கட்சியின் முக்கியஸ்தர்கள் மத்தியில் நிலவுகின்றது.
இதேவேளை வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு இதுவரை எவரும் நியமிக்கப்பட்டவில்லை. அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கா மற்றும் சமாதான செயலகப் பணிப்பாளர் நாயகம் ஜயந்த தனபால ஆகியோரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தற்போது அரசுத் தலைவர் சந்திரிக்கா குமாரதுங்க வெளிநாட்டு பிரமுகர்களுடன் மேற்கொண்டு வரும் சந்திப்புகள் அனைத்திலும் ஜயந்த தனபால கலந்து கொண்டு வருகின்றமையால் அவருக்கே வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக தெரியவருகின்றது.
இவ்வாறு இருக்க வெளிவிவாகர அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பதற்கு ஜயந்த தனபால மறுத்துள்ளதாக கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.