08-21-2005, 01:20 PM
கதிர்காமர் கொல்லப்பட்ட போது பாதுகாப்புக் கடமையில் ஐவர் மட்டுமே!
[ஞாயிற்றுக்கிழமை, 21 ஓகஸ்ட் 2005, 18:33 ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட போது அவரின் பாதுகாப்பிற்கு என ஐந்து பேரே இருந்துள்ளனர் என்று கொழும்பில் இன்று வெளியான ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கதிர்காமரின் பாதுகாப்பிற்கு என 76 கொமாண்டோக்கள் உட்பட 150 பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் அமைச்சர் படுகொலை செய்யப்பட்ட போது அவரின் பாதுகாப்பிற்கு என 5 படைவீரர்களே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் கதிர்காமர் விடுதலைப் புலிகளினால் இலக்கு வைக்கப்படுவோர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் என்பதை பாதுகாப்புப் படையினர் அறிந்து வைத்திருந்ததைப் போல கதிர்காமரும் அதனை நன்கு அறிந்து வைத்திருந்தார்.
எனினும் கதிர்காமரின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட வீடு எதுவென அறிந்து கொள்ள முடியுமாக இருந்த போதிலும் அந்த வீட்டில் பாதுகாப்புப் படையினர் 3 மணிநேரத்தின் பின்னரே தேடுதல் நடத்தியுள்ளனர். அத்துடன் அந்த வீட்டிலிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்த இடமெனக் கூறப்படும் ஜன்னலை மறைக்கும் விதத்தில் இருந்த மரத்தின் கிளைகள் இருவாரங்களுக்கு முன்னரே வெட்டப்பட்டுள்ளன. இது குறித்து பாதுகாப்புத் தரப்பு உரிய கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவில்லை.
கதிர்காமரின் சொந்த வீட்டின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு பல தடவைகள் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தபோதிலும், அந்த கோரிக்கைக்கு குறித்த தரப்புகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.
தற்போது அமைச்சரின் பாதுகாப்பிற்கென இருந்த கொமாண்டோக்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான விசாரணைகளுக்கு அவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கதிர்காமரின் உடலையும் அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தையும் பாதுகாப்பதற்கே கொமாண்டோக்கள் பொறுப்பாக உள்ளனர். அவரின் சொந்த வீடு இதில் சேர்க்கப்படவில்லை. அயலில் உள்ள வீடுகளைச் சோதனையிடும் உரிமை இராணுவ வீரர்கள் என்ற வகையில் தங்களுக்கு இல்லையென்று அவர்கள் கூறுகின்றனர். அந்த கடமையை காவல்துறையினரே நிறைவேற்ற வேண்டும் என்பதே கொமாண்டோ வீரர்களின் கருத்தாகும்.
நாட்டின் பாதுகாப்புச் செயலாளரான மேஜர் ஜெனரல் அசோக ஜயவர்த்தன அமைச்சரின் உறவினராவார். அமைச்சரின் பாதுகாப்பு ஆலோசகராக பாதுகாப்பு செயலாளரின் சகோதரரான லெப்டினன் கேர்ணல் சரத் ஜயவர்த்தனவே செயற்பட்டுள்ளார்.
அமைச்சர் படுகொலை செய்யப்படுவதற்கு முதல் தினம் அவர் நாடாளுமன்றம் செல்லவேண்டிய தேவை இருந்த போதிலும் பாதுகாப்பு காரணங்களினால் அவர் நாடாளுமன்றம் செல்வதைத் தவிர்த்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>