08-20-2005, 10:24 PM
<img src='http://www.uni-giessen.de/~gk1415/kovoor4.jpg' border='0' alt='user posted image'>
டாக்டர் கோவூர்
டாக்டர் கோவூரது மகன் -மனைவி மற்றும் குழந்தைகள் பிரான்சை சேர்ந்தவர்கள். தற்போது இவர்கள் இலங்கையில் வாழ்கிறார்கள்.
இலங்கையின் "திருவல்லா", 89, பாமன்கடை ஒழுங்கை , கொழும்பு-6 எனும் இடத்திலுள்ள இவரது மூன்று மாடிகளைக் கொண்ட வீடு தற்போது பகுத்தறிவு இயக்க செயல்பாடுகளுக்காக பாவிக்கப்படுகிறது.
கோவூரது எலும்புகள் அவர் இறுதியாக கடமை புரிந்த கொழும்பு தேர்ஸ்டன் கொலெஜில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.
இன்றுவரை சாயிபாபா இலங்கைக்கு வராமைக்கு இவரும் இவரது மாணவர்களுமே காரணம்.
தந்தை பெரியாரது நண்பனாக வாழ்ந்த இவர்
கேரளாவின் திருவல்லா எனும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
யாழ்பாணத்தில் இவர் கற்பித்த காலத்தில் இவர் கற்றுக் கொடுத்த பாடங்களில் ஒன்று கிறிஸ்தவம்.
இவரிடம் பாடம் கற்ற மாணவர்கள் மிக அதிக புள்ளிகளால் தேர்ச்சி பெற்றனர்.
ஆனால் மாணவர்கள் , சமயத்தையே வெறுத்து விவாதிக்குமளவுக்கு மாறி விட்டனர் என நிர்வாகத்தால் குற்றம் சுமத்தப்பட்டார்.
இவரது தந்தையார் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் என்பது குறிப்பிடத்தக்கது.
புற்று நோய் தாக்கியிருந்த போதிலும் சாகும் வரை அதைப் பெரிது படுத்தாமல் வாழ்ந்தார்.
இரவு படுக்கையில் தனது இறுதி மூச்சை விட்ட
இவரது கண்கள் தானமாக உடன் வழங்கப்பட்டன.
உடல் மருத்துவ மாணவர்களுக்காக பல்கலைக் கழகத்துக்கு வழங்கப்பட்டது.
பின்னர் உடலிலிருந்து பெறப்பட்ட எலும்புக் கூடு இன்றும் தேஸ்டன் கல்லூரியில் பாதுகாக்கப்படுகிறது.
இவரது இறுதிக் காலத்தில் (உயிர் பிரியும் நேரத்தில்) இவருடன் வாழ்ந்த இருவர் தற்போது ஐரோப்பாவில் வாழ்கிறார்கள்.
ஒருவர் லண்டனிலும் மற்றவர் சுவிசிலும் வாழ்கிறார்கள்.