10-25-2003, 08:27 AM
ஒருசிறு பொறி எப்படிக் கொழுந்துவிட்டு எரியப் பார்க்குது. ஊத்துறவை இருந்தால் திரி என்ன செய்யும் கொட்டகையையே கொழுத்தப் பார்க்கும்.
நான் ஒருத்தனை எள்ளி நகையாடினால் எனது சிறுமையைக் கைதட்டிக் கேலிசெய்ய இன்னொரு கூட்டமே வரும் மறக்கக்கூடாது. சாட்டையடி என்றுமட்டுமில்லை, கல்லடி, கிழவி அடிகூட தம்மாத்துண்டு இதயத்துக்கு வலியைத்தரும். கல்லடி, சொல்லடி, பிச்சுப்பாத்தல் என்று பலவித வேதனையையும் இப்ப பலரும் அனுபவிச்சுப் பாத்தாச்சு. தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்.
தவறுசெய்த குழந்தையைத் தட்டிக் கேட்பது மட்டுமல்ல அள்ளி அணைத்துக் கொள்வதும்தான் தாய்மை
தவறுவது இயற்கை.
தவறைத் தவறென்று ஒப்புக்கொள்வது
மனிதம்.
தம்பி அஜீவன் அள்ளிப்போட்ட சாமியாரின் அருள்வாக்கு எப்படி நமக்கெல்லாம் கனகச்சிதமாய் பொருந்துது. பிச்சுப் பிச்சு படுகிற வேதனையிலை சுகம் காணுறதைவிட்டிட்டு, நாவினால் தடவித் தடவி ஒத்தணம் கொடுக்கும் நாய்மையிலையிருந்து தாய்மையைக் கற்றுக்கொள்ளுவம்.
இதெல்லாம் நான் கொட்டின வார்த்தைகளுக்கு நியாயம் கற்பிக்கச் சொல்லவரேல்லை. அவசரத்தில் கொட்டினதைப் பொறுக்கும் வல்லமைகூட இல்லாமல் அழுதழுது சொல்லுறன். இனிமேலாவது நான் என்றதைவிட்டு நாம் என இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்து நிற்பம். மானிட மேன்மைக்கு இராமரின் அணிலாகவேனும் வலுச்சேர்ப்பம்.