08-20-2005, 01:39 PM
narathar Wrote:பேயளுக்குப் பயந்த மனிசரும் இருக்கினம்,மனிசருக்குப் பயந்த பேய்களும் இருக்கினம்.
இலங்கையில டாக்டர் கோவூர் எண்டு ஒருத்தர் இருந்தவர்,இவரைப் பற்றி யார் யாருக்குத் தெரியுமோ தெரியாது,இவர் சாய்பாபாவுக்கே சவால் விட்டவர்.
பேய் பிடிப்பது என்பதெல்லாம் மன வியாதி என்று பல பேரை மனோதத்துவ ரீதியாக் குணப்படுத்தினவர்.இந்த பேய்க்கதை சொல்லிற ஆக்களுக்கும்,மந்திரீகம் செய்யிற ஆக்களின்ட பித்தலாட்டங்களைய் எல்லாம் அம்பலப்படுத்தினவர்.இவர் குணப்படுத்திய ஒருவரின் கதயை மையமாக வைத்து அந்தக் காலத்தில நம்பிகை எண்டொரு நாடகம் இலங்கை முழுக்க அரங்கேறியது,யாராவது பாத்திருக்கிறியளோ.
<img src='http://www.uni-giessen.de/~gk1415/kovoor4.jpg' border='0' alt='user posted image'>
<i>டாக்டர் கோவூர்</i>
நம்பிகை நாடகம், வரணியுரான் நெறிப்படுத்தி இலங்கை வானோலியில் ஒலிபரப்பாகியது.
அதே நாடகம் கொழும்பு கதிரேசன் மண்டபத்திலும் மேடையேறியது.
கோவூரின் ஒரு கதை மலையாளத்தில் புனர்ஜன்மம் என்றும் அதே படம் தமிழில் மறுபிறவி என்றும் திரைப்படங்களாக வெளிவந்தன.
மறுபிறவியில் கதாநாயகனாக முத்துராமன் நடித்திருந்தார்.

