08-20-2005, 10:28 AM
இது ஒரு காதர்களின் பேய்க்கதை
கந்தரோடையில் ஒரு குடும்பமிருந்தது 4 ஆண்களுக்கு 1தங்கை கன காலத்தின் பிறந்த பெண் எண்டபடியால் அண்ணன்மார் செரியான பாசம் விவசாயத்தையே தொழிலாக கொண்ட குடும்பம் பெண்பிள்ளையை பெரிய படிப்பு படிபிக்க விரும்பியது அந்த காலத்திலேயே பிள்ளைக்கு புது சைக்கிள் வாங்கிக் குடுத்து பாடசாலைக்கு அனுப்பினார்கள் ஊர் பெடியள்மார் அண்ணன்மாரின் குணம்தெரிந்து அந்தபிள்ளை றோட்டால் போணால் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டாங்கள் இப்பிடி இருக்கையில் hPயுசனுக்கு போற இடத்தில் வெளியிடத்து பெடியன் ஒருவனுக்கு பிள்ளைமேலை லவ் வந்திட்டுது கட்டுப்பாட்டுக்கையே வளர்ந்த பிள்ளைக்கும் அந்த பெடியனின் அன்பு கவர்ந்திருக்கவேண்டும் ஓம் எண்டு அவர்களின் காதல் வளர்ந்திருக்கு ஒரு 6மாதத்தின் பின் இந்த விடயம் எப்பிடியோ அண்ணன்மாருக்கு தெரிந்து விட்டது பிள்ளையை கண்டித்திருக்கிறார்கள் முடியவில்லை பெடியனையும் வெருட்டிபார்த்தார்கள் சரிவரேலை பெட்டையை வீட்டுக்குள் புூட்டி வைத்து அடித்திருக்கிறார்கள் அந்த அடி படாத இடத்திலை பட்டு பிள்ளை செத்துப் போச்சு உடனே கயித்திலை மாட்டி பிள்ளையை தொங்க வைத்துவிட்டு தூக்கு போட்டு செத்திட்டாள் என கதையை கட்டி விட்டுட்டார்கள் போஸ்மோட்டம் இல்லாமல் பொலிசைப்பிடிச்சு விசயத்தையும் சேப்பண்ணினார்கள் பொடியை கொண்டுபொய் சுடலேலை எரித்துவிட்டு அடுத்த நாள் காலேலை காடாத்த(சாம்பல் அள்ள) சுடலைக்கு போயிருக்கிறார்கள் அங்கே பிள்ளையின் காதலன் சாம்பல் மேட்டில் விழுந்து கிடந்தான் உயிரில்லாமல் அருகில் நஞ்சுப் போத்தல் இருந்தது. (ஆனால் ஊரில் கதை அண்ணன்மார்தான் அடிச்சு சாக்கொல்லி போட்டு கொண்டு வந்து போட்டதாக ) ஏதோ இரண்டும் தற்கொலையென முடிந்துவிட்டன. . .
இதெல்லாம் முடிந்து 2கிழமையிருக்கும் சுடலைக்கு போற வழியில் ஒரு வைரவ கோயிலும் அரசமரமும் இருக்கிறது அந்த மரத்தின் பின்னால் இரவு 10மணிக்குப் பிறகு யாரோ சிரிச்சுக் கேக்குமாம் கொஞ்ச நேரத்தில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேக்குமாம் இந்த காதலர்கள் முந்தி லவ் பண்ணும் போது இந்த இடத்திலைதான் சந்திப்பார்களாம் (சுடலை றோட்டில் எவரும் வரமாட்டார்கள் என்பதால்) இதை எங்கடை மாமாக்கு சொல்ல ஆள் சிரிச்சுப்போட்டு ஒருநாளைக்கு போய்பாத்திட்டு வந்து உங்களுக்குச் சொல்லுறன் எண்டார் ஒருநாள் மாமாவை இரவு 11மணியாகியும் காணவில்லை தேடவெளிக்கிட்டம் அப்ப ஒருவர் வந்து சொன்னார் உங்கடை மாமா வைரவ கோயிலிலை விழுந்து கிடக்கிறார் எண்டு போய் ஆளை தூக்கிகொண்டு வந்தம் மயக்கம் தெளிஞ்சு என்ன எண்டு விசாரித்தால் 10மணிபோல மாமா அந்த பாதையாலை வந்தாராம் அப்ப அந்த மரத்துக்கு பின்னாலை இருந்து யாரோ அழுகிற மாதிரி சத்தம் கேட்டுச்சாம் மாhமாக்கு உந்த பேய் பயம் கிடையாது சைக்கிலை நிப்பாட்டிப் போட்டு போய்பாத்திருக்கிறார் ஒண்டையும் காணேலை திரும்பி வந்து சைக்கிலை எடுக்கேக்கை பெரிய இரைச்சலோடை காத்து மாதிரி ஒண்டு வந்து இவரை இழுத்து கொண்டு போய் மரத்திலை மோதிச்சாம் அத்தோடை இவர் மயங்கிட்டார் ஊர் ஆட்கள் சொல்லிச்சினம் எங்களுக்கு எப்பவோ இது தெரியும் இறந்த அந்த காதலர்கள்தான் அவர்களை ஏன் தொந்தரவு செய்யப் போனதாக நீண்ட காலம் அந்த சிரிப்பும் அழுகையும் அந்த இடத்தில் இருந்ததாம்
இப்ப இதைப்பற்றி நண்பர்களுடன் நாங்கள் கதைப்பது என்னவெண்டால் பேயை காட்டி வேறை இரண்டு சோடி விளையாட்டுக் காட்டியிருக்கெண்டு ஆனா தனிய அந்த அரசமரத்தடியாலை போகச் சொன்னால் எஸ்கேப். . . . . .

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>