08-20-2005, 06:54 AM
உங்களுடன் வாதத்திற்காக இல்லை விஷ்ணு. சில வாரங்களுக்கு முன்பு இதே யாழ் களத்தில் இளைஞர் அமைப்பு என்ற சொற்பதத்தை இளையோர் அமைப்பு என்று சிலர் பாவிப்பது பற்றிக் கருத்தெழுதி இரண்டும் ஒரே அர்த்தமில்லையென்பதனையும் எழுதி மற்றவர்களின் கருத்தையும் கேட்டிருந்தேன். ஆனால் இளைஞன் போன்ற சிலர் தவிர வேறெவரும் இவ்விடயத்தில் ஆர்வம் காட்டவில்லை. நீங்கள் சொல்வதுபோல் புலம் பெயர்ந்து வாழும் பிள்ளைகளின் நிலையில் உண்மையுள்ளது. ஆனால் சரியான முறையில் தமிழை பயிற்றுவித்தால் எத்தனை பேர் படிக்க ஆர்வத்துடன் வருவார்கள். சரி இதே போல் ஏனைய நாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்து வாழும் வேறு மொழி பேசும் பிள்ளைகளை உதாரணமாக மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்ட பிள்ளைகளுக்கும் நீங்கள் சொல்லும் அதே பிரச்சினை உள்ளதுதானே. ஆனால் அந்தப் பிள்ளை மலையாளத்தை கற்றுக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை எமது தமிழ்ப் பிள்ளைகள் காட்டுவதில்லை (சிலரைத் தவிர்த்து)என்ற உண்மையை நீங்கள் உணருவீர்களா?? மொழிப்பற்று என்பது ஒருவரிடம் தானாக உருவாக வேண்டுமே தவிர அதனைத் திணிக்க முடியாது.
!!!முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை!!!
!!!முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை!!!

