08-19-2005, 07:49 PM
<b>கதிர்காமர் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு இராணுவத்தினர் இரு மணி நேரம் கழித்து சென்றது ஏன்? கூட்டமைப்பு எம்.பி.க்கள் கேள்வி</b>
வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்ற அவசர கால சட்ட விவாதத்தில் உரையாற்றிய கூட்டமைப்பு எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், என்.ரவிராஜ், செல்வம் அடைக்கலநாதன், எஸ்.ஜெயானந்த மூர்த்தி ஆகியோரும் மற்றும் விவாதத்தின் போது இடையிடையே குறுக்கீடு செய்த ஈழவேந்தன் எம்.பி., சிவநேசன் எம்.பி., எஸ்.கஜேந்திரன் எம்.பி. ஆகியோரும் மேற்கண்டவாறு சந்தேகங்களை கிளப்பியிருந்தனர்.
அமைச்சர் கதிர்காமர் கொலை செய்யப்பட்டு இரு மணி நேரம் சென்ற பின்னர்தான் துப்பாக்கிதாரர்கள் மறைந்திருந்து சூடு நடத்தியதாக கருதப்படும் கதிர்காமரின் எதிர் வீட்டுக்கு இராணுவம் சென்றிருக்கின்றது.
அந்த வீட்டில் தங்கியிருந்த தளையசிங்கம் என்பவர் அது பற்றி கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் போது கூறியதாக சுட்டிக்காட்டிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் அவ்வாறு இரு மணிநேரம் கழித்து குறித்த வீட்டிற்கு ஏன் இராணுவம் சென்றது. உடனடியாகவே சென்றிருக்க
வேண்டும் அல்லவா எனவும் கேள்வி
தொடுத்து சந்தேகம் எழுப்பினர்.
பொலிஸாரின் விசாரணையிலும் தமது நம்பிக்கையீனத்தை தெரிவித்து சுதந்திரமான நீதியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.