08-19-2005, 07:46 PM
<b>அமைச்சர் கதிர்காமரின் படுகொலை குறித்து விசாரிக்க சுயாதீன ஆணைக்குழுவை உடன் அமைக்க வேண்டும் மீண்டும் யுத்தத்தை ஜே. வி. பி. வலிந்து ஏற்படுத்த முயல்கிறது என்கிறது ஐ. தே. க. </b>
(ஜப்ரல் அஸ்கான்)
வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலைதொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு சுயாதீன ஆணைக் குழுவை உடனடியõக அமைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமாதான சூழ்நிலை நிலவிய இந்த நாட்டில் மீண்டும் யுத்தத்தை வலிந்து ஏற்படுத்துவதே ஜே. வி. பி. யின் நோக்கமாகும். அதற்கான முயற்சிகளிலேயே அக்கட்சி தீவிரமாக இறங்கி செயற்பட்டு வருகின்றது என்றும் ஐக்கிய தேசிய கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட குருநாகல் மாவட்ட ஐ. தே. க. எம்.பி. ஜொன்சன் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின்
படுகொலையுடன் தொடர்புபட்டவர்களை இனங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு சுயாதீன ஆணைக் குழுவை அவசரமாக ஏற்படுத்தி விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். இதற்காகவே நாம் அவசரகால சட்ட நீடிப்புக்கு ஆதரவளித்தோம். ஆனால் இந்த அவசர கால சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் இலாபம் தேட முனையக் கூடாது. அரசாங்கம் நாட்டு மக்களின் நலனை பாதுகாப்பதற்கே அவசர கால சட்ட நடவடிக்கைகளை பிரயோகிக்க வேண்டும்.
அமைச்சரொருவர் தனது வீட்டுக்கு செல்ல முடியாதிருக்கிறது என்றால் அரசாங்கத்தின் பாதுகாப்பு குறித்து நாம் கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது. படுகொலை கலாசாரம் தொடரக்கூடாது என்பதற்காகவே அவசர காலச் சட்ட நீடிப்புக்கு ஐ. தே. க. ஆதரவு வழங்கியது. இதனை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்க் கூடாது. பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்குண்டு மக்கள் அவதிப்படும் இவ்வேளையில் அவசரகால சட்டம் அவர்களை மேலும் சிரமத்திற்குள் உட்படுத்தாது அரசாங்கம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே அவசர கால சட்டம் நீடிக்கப்பட்டிருக்கிறது. தனது குடும்பத்தினரே இந்த நாட்டை ஆள வேண்டும் அன்ற ஒரே நோக்குடனேயே ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது இரண்டாவது பதவிக்காலத்திற்காக 11 மாதங்கள் முன்னதாக சத்தியப் பிரமாணம் செய்தார்.
ஆனால் ஜனாதிபதித் தேர்தல் சட்டப்படி இவ்வருடமே நடத்தப்பட வேண்டும். தேர்தல் தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளருக்கு மட்டுமே இருக்கிறது என்றார்.
Veerakesari