08-19-2005, 06:22 PM
Rasikai Wrote:Quote:என்ன சொல்லுறிக்க ரசிகை இந்த ஊர்ப் பேய்களும் உங்க வத்து அசைலம் எடுத்துட்டுதுகளோ?
நாரதர் பேய் இருக்கோ இல்லையோ பேய்க்கு பயந்த மனிசர் எல்லா இடமும் இருக்கிறார்கள் தானே :roll:
பேயளுக்குப் பயந்த மனிசரும் இருக்கினம்,மனிசருக்குப் பயந்த பேய்களும் இருக்கினம்.
இலங்கையில டாக்டர் கோவூர் எண்டு ஒருத்தர் இருந்தவர்,இவரைப் பற்றி யார் யாருக்குத் தெரியுமோ தெரியாது,இவர் சாய்பாபாவுக்கே சவால் விட்டவர்.
பேய் பிடிப்பது என்பதெல்லாம் மன வியாதி என்று பல பேரை மனோதத்துவ ரீதியாக் குணப்படுத்தினவர்.இந்த பேய்க்கதை சொல்லிற ஆக்களுக்கும்,மந்திரீகம் செய்யிற ஆக்களின்ட பித்தலாட்டங்களைய் எல்லாம் அம்பலப்படுத்தினவர்.இவர் குணப்படுத்திய ஒருவரின் கதயை மையமாக வைத்து அந்தக் காலத்தில நம்பிகை எண்டொரு நாடகம் இலங்கை முழுக்க அரங்கேறியது,யாராவது பாத்திருக்கிறியளோ.

