08-19-2005, 02:11 PM
<img src='http://img367.imageshack.us/img367/4295/kuruvi8pw.jpg' border='0' alt='user posted image'>
<b>மலராகி மணம் பரப்பியவள்
மலரும் நாட்களுக்குள் மறைந்த போது
மரணம் வாசல் வருவதாய்
மனம் வலித்தது துடித்தது...!
மலரவள் மனதோடு பேசி
மயங்கிக் கிடந்தவன்
மாற்றங்கள் தந்த அவள் பிரிவில்
மாலை சுமந்தான் கண்ணீர்த்துளி கொண்டு...!
மனசுக்குள் மலர்ந்த மலர்க் கொடி
மன்னவன் நினைவுக்குள் ஒரு வசந்தக் கொடி
மலரும் காலத்தால் ஒரு நொடி
மறைந்ததும் வந்தது கொடிய நோய்...!
மலரே எனி
மறைவும் வேண்டாம் ஏமாற்றமும் வேண்டாம்
மறக்காமல் என் மடி
மலர்ந்திரு அன்பு மலராய் என்றும்...!
மரணம் என்ன மாட்சி என்ன
மலரே மன்னவன் எனக்கு எல்லாம் நீயே
மனசோடு கூடியது போல் மனையோடும் கூடிவிடு
மருந்தாகி வலி நீக்கி ஆயுள் காத்திட...!</b>
<b>மலராகி மணம் பரப்பியவள்
மலரும் நாட்களுக்குள் மறைந்த போது
மரணம் வாசல் வருவதாய்
மனம் வலித்தது துடித்தது...!
மலரவள் மனதோடு பேசி
மயங்கிக் கிடந்தவன்
மாற்றங்கள் தந்த அவள் பிரிவில்
மாலை சுமந்தான் கண்ணீர்த்துளி கொண்டு...!
மனசுக்குள் மலர்ந்த மலர்க் கொடி
மன்னவன் நினைவுக்குள் ஒரு வசந்தக் கொடி
மலரும் காலத்தால் ஒரு நொடி
மறைந்ததும் வந்தது கொடிய நோய்...!
மலரே எனி
மறைவும் வேண்டாம் ஏமாற்றமும் வேண்டாம்
மறக்காமல் என் மடி
மலர்ந்திரு அன்பு மலராய் என்றும்...!
மரணம் என்ன மாட்சி என்ன
மலரே மன்னவன் எனக்கு எல்லாம் நீயே
மனசோடு கூடியது போல் மனையோடும் கூடிவிடு
மருந்தாகி வலி நீக்கி ஆயுள் காத்திட...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

