08-19-2005, 07:24 AM
<span style='font-size:21pt;line-height:100%'>மற்றுமொரு சிறுகதை அறிமுகம்</span>
சிறுகதை - அழுகுரல் கேட்கிறதா ... ஷண்முகி
எனக்கு இந்த உலகத்தை நிறைய பிடித்திருக்கின்றது. அழகாக இருக்கின்றது. மனிதர்களை பிடித்திருக்கின்றது. எனக்கு நீண்ட நாட்கள் வாழ ஆசை. அதிலும் என் அம்மா, அப்பா, தம்பி ஜனாவுடன் எப்போதும் இருக்க வேண்டும் போல் ஒர் ஆசை... அடிக்கடி எனக்குள் எழும். ஆனால் மனதில் உள்ளதை எல்லாம் சொல்லவேண்டும் போல் ஒர் துடிப்பு உத்வேகம் எனக்குள். "ஆ... ஆ..." முயற்சி செய்து பார்க்கிறேன் என்னால் பேச முடியவில்லை. என் ஆத்மாவின் அழுகுரல் எனக்குள் மட்டும் ஒலித்து அமைதியாக அடங்கிப் போகின்றது.
என் வயது பன்னிரண்டுதான் ஆகிறது. மனம் வளர்ச்சி அடைந்த அளவுக்கு என் உடலில் வளர்ச்சி இல்லை. ஊனமாகிப்போன ஒரு கால் அதை இழுத்து இழுத்து நடக்கும்போது என் மனதின் தாக்கத்தை வெளியே சொல்லமுடியாத பேசமுடியாத நிலை. இறுதியில் கண்கள் தான் கலங்கிப்போய் நிற்கும்.
எனக்கு என் அம்மாவைத்தான் அதிகம் பிடிக்கும். எப்போதும் என்னைப்பற்றியே நினைத்தபடியே இருப்பாள். எந்த நேரத்தில் மருந்து தரவேண்டும், சாப்பாடு தரவேண்டும் எந்த எந்த நேரத்தில் நான் என்னென்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் என் அம்மாவுக்குத்தான் தெரியும். சிலசமயங்களில் அம்மாவைக் கட்டிக் கொண்டு "ஓ..." வென்று அழவேண்டும் போலிருக்கும். "அம்மா நீயில்லாமல் நான் எப்படியம்மா இந்த உலத்தில் வாழப் போறேன் அம்மா..." எனக்குள் நித்தம் எழும் கேள்வி.
ஆனால்... கொஞ்சநாளாக அம்மா என்னிடம் அன்பாக இல்லை. தம்பி ஜனா பிறந்ததில் இருந்து அவனுடன் தான் அதிக நேரம் செலவிடுகிறாள். என்னைவிட்டு விலகிய மாதிரி ஒர் நினைப்பு எனக்குள் எழுந்து கொள்கிறது. அந்த நினைப்பை ஜனாவிடம் காட்டி என் கோபத்தை காட்ட முயன்றபோது அவனது சிரித்த முகம் என்னை அவன்பால் ஈர்த்தது. என் அன்பையும் சேர்த்து ஜனாவை இருக அணைக்க முற்படும் போது, அவனை ஏதும் செய்து விடுவேனோ என்ற பாதுகாப்பு முனைப்பில் அம்மா என்னை விலக்க நினைப்பது என் மனதை முள்ளாய் தைக்கின்றது. "அம்மா என் தம்பியை ஒன்றும் செய்ய மாட்டேன்..." என்று கேட்க வேண்டும் போலிருக்கிறது.
எனக்கு என் அப்பாவையும் நிறைய பிடிக்கும். அம்மாவின் கவனம் என்மீது படாத சமயங்களில் அப்பாவின் கவனம் என்மீது பதிந்து இருக்கும்.
எனக்கு மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட நிறைய விருப்பம். ஆனால்... மற்ற பிள்ளைகள் என்னை ஒர் வேடிக்கை பொருளாக, கேலியாக நகைப்பது எல்லாம் பிடிக்காது. இது மனதினுள் ஒர் தாக்கத்தை வெளிப்பட, வெளியே சென்று விளையாடுவதிலும் ஆர்வமே இல்லாமலே போய் விட்டது.
இப்படித்தான் ஒருமுறை எங்கள் வீட்டிற்கு மாமா, அத்தை, பிள்ளைகள் எல்லோரும் வந்து இருந்தார்கள். எனக்கு மனம் முழுவதும் சந்தோஷம். என் வயதுப் பசங்களோடு விளையாடுவது என்றால் சொல்லவும் வேண்டுமா? என் மீது இருந்த கவனம் சற்றே விலக என்னை மீறிக் கொண்டு வந்த செய்கைகள் குழப்படிகளாக… உருவெடுத்துக் கொண்டிருக்க... அம்மா தீடிரென்று ஓடி வந்து, என் முதுகில் இரண்டு சாத்து சாத்திவிட்டு என்னை அறையினுள் பூட்டிவிட்டாள்.
யாராவது எப்போதும் கண்காணித்துக் கொண்டு இருந்தால் அவர்களின் கவனம் விலகிக் கொள்ளும் போது குழப்படிகள் அதிகமாகும் என்பதை அன்றுதான் அறிந்து கொண்டேன். மற்றவர்களுக்கு அது புரியாதே.
அன்று நான் அழுத அழுகைக்கு அளவே இல்லாமலே போய் விட்டது. "அம்மா என்னை மன்னித்து விடம்மா. இனிமே குழப்படி பண்ணாம சமத்தாயிருப்பேன்" என்று ஆத்மா ஒலமிட கண்களில் கண்ணீர் வடிய அப்படியே தரையில் நித்திரையாகி விட்டேன்.
கண்விழித்த போது அம்மா என்னை அன்பாக தடவி விட்டுக் கொண்டு இருந்தாள். அம்மாவைக் கண்டவுடன் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன். "என்னுடைய செல்லத்தை அடித்துவிட்டேனே..." என்றபடியே அம்மா என்னை தூக்கி இரு கன்னங்களிலும் மாறி மாறி கொஞ்சினாள். எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஒரு தேரில் பவணி வருவது போன்ற சந்தோசம் எனக்குள் இருந்தது. அம்மா அடித்தது கூட வலிக்கவில்லை. அம்மா அம்மா சந்தோஷத்தில் ஏதோ சொல்ல வேண்டும் போல் துடிக்கின்றேன். என் துடிப்பு உனக்கு கேட்கிறதா..?
அம்மா எனக்காக எத்தனை நாட்கள் விரதமிருந்து, கோயில் கோயிலாக அலைகிறாய். உன்னை உருக்கி எத்தனை தியாகங்களை எனக்காக செய்கிறாய். உன் செயலை நினைக்கும் போது என் மனம் நொந்து போகிறது. வீட்டுக்கு வந்து போவோரிடம் எல்லாம் சொல்லிக் கொள்கிறாய் "இப்போது அவன் சுகமாகிக் கொண்டு வருகிறான் நான் வணங்கும் முருகன் கைவிட மாட்டான்" என்று எத்தனை நம்பிக்கை தரும் வார்த்தைகளை உதிர்க்கிறாய். ஆனால் எனக்கு என்மீது நம்பிக்கை இல்லையம்மா. எத்தனை மருந்துகள் குடித்தாலும், எத்தனை கோயில் படிகள் ஏறி இறங்கினாலும் எழுதி வைத்த விதிப்படிதானே நடக்கும்.
எனக்கு ஒன்றே ஒன்று தான் வேண்டும் எப்போதும் என்னை உன் மடிமீது உறங்க வைக்க வேண்டும். உன் கரங்களால் என் தலையை தடவியபடியே, அதில் என் உறக்கம் நிரந்தரமாக இருக்க வேண்டும். அம்மா என் ஆத்மாவின் ஆசை அழுகுரலாய் உனக்கு கேட்கின்றதா...?

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>