08-19-2005, 03:08 AM
ஊமை இது தனிப்பட்ட தாக்குதலாக கள பொறுப்பாளர்களால் கணிக்கப்படுமோ தெரியாது ஆனால். இதில இவரை மட்டுமல்ல பலர் இப்போது இப்படிதான் தமிழ் வ(i)ளர்க்கின்றனர்.... இந்த ப்....ஃ.....ம்... க்.... வில் தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய பெருமை தென்னக சினிமாவிற்கே உரியது...ப்ரான்ஸ் () சில் உருவான இந்த ப்...வார்த்தை பின்னர் இப்போது ப்ரியசகி படம் வரைக்கும் நீடிக்கிறது. அதை பார்த்து பல ஈழத்தவர் பார்த்து அப்பிடியே பிரதி செய்து விடுகின்றனர். புகலிடக் குழந்தைகள் மற்றும் புகலிடத்தில் தமிழ் படிப்போரிற்க்கு தென்னக சினிமாவில் வரும் தமிழ் ஒரு பாதிப்பை ஏற்ப்படுத்துகின்றது....இது தமிழுக்கு வந்த சோதனை என்பதைவிட தமிழுக்கு புதிதாய் வந்த தலையிடி என்பது தான் சாலசிறந்தது. இந்த தலையிடியை மாற்றுவது கொஞ்சம் கடினமே! அதே போல தட்டச்சு செய்யும் போது சில எழுத்துப்பிழைகள் வரும் அவை திருத்தப்படவேண்டும் ஆனால்... அதை நாம் தமிழில் பிழை அல்லது தவறு என்று எடுத்து கொள்ள முடியாது. எமக்கு தெரியாமலே சில வேளைகளில் நாம் எழுத்து பிழைகளை விடலாம்...அதை சுட்டிக்காட்டும் போது அதை நாம் திருத்தவும் தயாராக இருக்க வேண்டும்..
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

